மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவமும் காத்தான்குடியின் எதிர்பார்ப்பும்.
நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்தகால தேர்தல் முடிவுகளின்படியும் தற்போதய கழ நிலவரத்தின்படியும் மாவட்டத்தில் உள்ள ஐந்து ஆசனங்களில் TNA 3 ஆசனத்தையும் அதேநேரம் அரசின் முழு ஆசீர்வாதத்துடனும் கடந்த காலத்தில் படகு சின்னத்தில் தனித்து நின்று போட்டியிட்டு 40,000 இற்கும் மேற்பட்ட வாக்கினையும் பெற்று இம்முறை மிகவும் நல்லதொரு வேட்பாளர் பட்டியலை கொண்டிருக்கும் TMVP பிள்ளையான் அணியினர் 1 ஆசனத்தையும் எஞ்சிய இறுதி ஐந்தாவது ஆசனத்தை முஸ்லிம் தரப்பும் வெல்வதற்குமான வாய்ப்புக்களே அதிகம் உள்ளது.
இதில் SLMC அணியினர், மக்கள் சக்தி சஜித்-அமீர் அலி அணியினர், ஹிஸ்புல்லா-பசீர் சேகுதாவூத் அணியினர் போட்டியிடுவதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.
இம்முறை இறுதி ஆசனத்தை வெல்லுகின்ற முஸ்லிம் கட்சி 30,000 இற்கும் அதிகமான வாக்குகளைபெற வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது காரனம் கழத்தில் உள்ள தமிழ் அணிகளில் பிள்ளையான் அணி 30,000 த்தை இலகுவில் கடக்கும் அதேவேளை ஏனைய பிரதான அணிகள் 27,000 தொடக்கம் 30,000 வரையிலான வாக்குகளை பெறும் வாய்ப்புக்கள் மிக அதிகம் உள்ளது.
சராசரியாக அளிக்கப்படும் தமிழ் வாக்குகள் 230,000 இதில் TNA 120,000 வரையிலும் பிள்ளையான் TMVP அணியினர் 35,000 வரையிலும் ஏனெய மீதியாகும் 75,000 வரையிலான தமிழ் வாக்குகள் 27,000 தொடக்கம் 30,000 வரையிலாக எஞ்சிய இரண்டு பிரதான தமிழ் அணிகளான வியாழேந்திரன் அணிக்கும், முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தியின் அணிக்கும் செல்ல அதிக வாய்ப்புள்ளது. ஆக மொத்தத்தில் இம்முறை இறுதி ஆசனத்தை வெல்லப்போகும் முஸ்லிம் கட்சி 30,000 வாக்குகளை தாண்டியதாக அமையவுள்ளது.
இதில் SLMC அணி மூன்று பிரதான முஸ்லிம் பிரதேசங்களிலும் தனக்கென தனிநபர் சாராது கட்சிக்கான கணிசமான வாக்குப்பலத்தை கொண்டுள்ளது இது 1988 ஆம் ஆண்டு தொடக்கம் இறுதி பாராளுமன்றத் தேர்தல்வரை தனது ஆசனத்தை யார் கட்சியில் இலுந்மாலும் இல்லாவிட்டாலும் கட்சிக்கான ஆசனத்தை வென்று வந்துள்ளது. இதில் கல்குடாத்தொகுதியில் 13,000 வாக்குகளையும், ஏறாவூரில் 13,500 வாக்குகளையும் காத்தான்குடி மற்றும் அதனை சூழவுல்ல பிரதேசத்தில் 7,000 வாக்குகளையும் கொண்டுள்ளது. மொத்தத்தில் மாவட்டத்தில் 33,500 வாக்குகளை தற்போதய சூழலில் SLMC தன்வசம் வைத்துள்ளது.
அடுத்ததாக சஜித், அமீர் அலி, அப்துர் ரஹுமான் அணியினர் இம்முறை ஆயிரம் தமிழ் வாக்குகளை பெறுவதே மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது காரனம் கடந்த காலங்களில் UNP அணியுடன் இணைந்து 10,000 வரையிலான தமிழ் வாக்குகளை பெற்றுக்கொடுத்த் முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி தற்போது சஜித் அணியில் இருந்து விலகிச்சென்றுள்ளார். அதேவேளை சென்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவம் UNP ஊடாக கிடைக்கப்பெறலாம் என்ற நம்பிக்கையில் 16,000 வரையிலான தமிழ் வாக்குகள் UNP இற்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் 16,500 இற்குமேற்பட்ட விருப்பு வாக்குகளைப்பெற்று அமீர் அலி வெற்றியீட்டினார்.
இம்முறை தமிழ் பிரதேசங்களில் சஜித் அணிக்கு அளிக்கப்படும் வாக்குகள் அமீர் அலியை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கும்! தமிழ் வாக்குகளால் முஸ்லிம் ஒருவர் பாராளுமன்றம் செல்லப்போகின்றார் என்ற இனவாத கருத்துடனான பிரச்சாரம் முடக்கிவிடப்பட்டுள்ளது. இதனால் பிரதானமான தமிழ் வேட்பாளர் இல்லாத சஜித், அமீர் அலி அணிக்கு சென்ற முறை கிடைத்த 16,000 வாக்குகளிற்கு பதிலாக ஓராயிரம் வரையிலான வாங்குகள் அமீர் அலியின் கடந்தகால தமிழ் மக்களுக்கான சேவைக்காக கிடைக்கலாம்.
அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களில் 38,000 அளவிலான முஸ்லிம் வாக்குகள் கல்குடாத் தொகுதியில் உள்ளது. கடந்தகால தேர்தல் முடிவுகளின் பிரகாரம் சுமார் 29,000 தொடக்கம் 30,000 வரையிலான செல்லுபடியான வாக்குகள் பதியப்பட்டுள்ளன. தற்போதய ஊருக்கு MP என்கின்ற கோசம் கல்குடாவில் வலுப்பெற்றிருக்கும் நிலையில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 16,500 இற்கும் மேற்பட்ட வாக்கினைப்பெற்ற அமீர் அலி சார்ந்த அணிக்கு இம்முறை கல்குடாவில் மாத்திரம் 15,000 தொடக்கம் 16,000 வரையிலான வாக்குகள் அளிக்கப்படலாம் (அமீர் அலியை எதிர்கொள்ள பலமான வேட்பாளர் எவருமே கல்குடாவில் கழம் இறங்காததால்) ஏறாவூர், காத்தான்குடி, தமிழ் வாக்குகள் என 2,500 தொடக்கம் 3,000 வரையிலான ஏனெய பிரதேச அமீர் அலிக்கான தனிப்பட்ட விருப்பு வாக்குகளினூடாக 18,000 தொடக்கம் 19,000 வரையிலான விருப்புவாக்கினை அமீர் அலி பெறக்கூடும் இருப்பினும் கட்சியின் ஆசனத்தை வெல்வதற்கான 11,000 தொடக்கம் 12,000 வரையிலான வாக்கினை அப்துர் ரஹுமான் காத்தான்குடியில் இருந்து திரட்டினால் அன்றி அமீர் அலி MP ஆக முடியாது.
ஆக மொத்தத்தில் அமீர் அலியோ அல்லது அப்துர் ரஹுமானோ வெல்வதென்பது எட்டாக்கனியே. இதையும் தாண்டி அமீர் அலியினது வெற்றிக்கான ஊன்றுகோலாக அப்துர் ரஹுமான் இருந்தாலும் அதற்கு பிரதி உபகாரமாக தனது ACMC கட்சியினூடாக அப்துர் ரஹுமானின் தேசியப்பட்டியல் கனவை நனவாக்குவதற்கு ACMC கட்சியோ அல்லது அமீர் அலி ஒருபோதும் விரும்பமாட்டார் காரனம் ACMC கட்சியின் பல பிரதேசத்திற்கான வாக்குறுதி அளிக்கப்பட்ட தேசிப்பட்டியல் மிக நீண்டது மற்றும் ஏற்கனவே பலமுறை ஏமாற்றப்பட்ட YLS ஹமீட் பல சத்திய வாக்குறுதிகளுக்கு மத்தியில் மீண்டும் கட்சியோடு இணைக்கப்பட்டுள்ளார், மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் காலங்களிலும் முஸ்லிம்களுக்கான ஆசனம் 1 ஆகவே அமைய அதிக வாய்ப்புள்ளது அதிலும் முஸ்லிம்கள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கும், தமிழர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கின்ற இனவாதம் நன்றாகவே மேலோங்கி நிற்கும்.
இந்த சூழலில் ஏற்கனவே கழத்தில் ஹிஸ்புல்லா, மௌலானா, ஹாபிஸ் என்ற போட்டியாளர்களுக்குள் அப்துர் ரஹுமான்னுக்கு தேசியப்பட்னியலை தாமே வழங்கி தேவையற்ற தலைஇடியை தனக்குத்மானே ஏற்படுத்திக்கொள்ள அமீர் அலி ஒரு போதும் விரும்பமாட்டார்.
அது போக அமீர் அலியின் வாக்குறுதிகளும் இந்த தேர்தலை கடக்கும்வரையில்தான் என்பதும் யாருக்கும் தெரியாமலும் இல்லை. கடந்த காலத்தில் மஹிந்தவிற்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டு மர்ஹூம் அஸ்வர் MP யின் தேசியப்பட்டியலை பெற்றுக்கொண்டு வாக்குமாறி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் முனாபிக் என மஹிந்தயின் வாயால் சொல்லவைத்தவர்.
சரி அப்துர் ரஹுமானுக்கு சஜித் தேசியப்பட்டியல் வழங்குவாரா? எனப்பார்த்தால் அப்படி கொடுப்பதாயின் அவரிற்குள்ள மிகப்பெரும் தேசியப்பட்டியல் பொறுப்புக்களில் இருந்து வெளியேற மிக அத்திய அவசியமாக 11 தேசியப்பட்டியல் ஆசனம் தேவையான நிலையில் அப்துர் ரஹுமானை சேர்த்துக்கொள்வதாக இருந்தால் ஆகக்குறைந்தது 12 தேசியப்பட்டியலை சஜித் அணி பெறவேண்டும் இதற்காக தேர்தலில் நாடளாவியரீதியில் 4,850,000 இற்கும் மேற்பட்ட வாக்குகளை சஜித் அணி பெறவேண்டும். ஆனால் UNP பிளவுபட்டும், சிறுபாண்மை வாக்குகள் சஜித் அணிக்கு இல்லாமலும் உள்ள இந்த சூழலில் சஜித் அணியால் பெறக்கூடிய அதிகபட்ச வாக்காக 2,000,000 தொடக்கம் 2,300,000 வரை மாத்திரமே பெறமுடியும். இதற்கான தேசியப்பட்டியல் எண்ணிக்கை 5 அல்லது 6 மாத்திரமே பெற வாய்ப்புள்ளது அந்த வகையிலும் அப்துர் ரஹுமானுக்கான தேசியப்பட்டியல் வெறும் கனவே.
ஹிஸ்புல்லா அவர்கள் காத்தான்குடியில் அளிக்கப்படும் செல்லுபடியான 28,000 வாக்குகளில் ஆகக்குறைந்தது 25,000 வாக்குகளை தனது வண்ணத்துப்பூச்சி கட்சிக்கு பெறமுடியமாக இருந்தால் மாத்திரமே வெற்றி வாய்ப்பின் பக்கம் ஒரு அடி முன்வைக்க முடியும். எந்த அறிமுகமும் இல்லாத, இது ஆழும் கட்சியா, அல்லது எதிர் கட்சியா, வென்றால் என்ன? தோற்றாலும் எந்த ஒரு சிறிய அதிகாரத்தைகூட பெற இயலாத இக்கட்சிக்கு ஹிஸ்புல்லா என்கின்ற தனிமனிதனுக்காக மாத்திரம் அளிக்கப்படும் வாக்கே இக்கட்சி பெறும் வாக்குக்கள்.
28,000 வாக்குகளில் 25,000 இனை பெற்றுக்கொள்வதென்பது குதிரை கொம்பே ஆகும். ஏனைய பிரதேசங்களான ஏறாவூர், கல்குடாவில் இருந்து அதிக பட்சமாக 2,500 வாக்குகளை மாத்திரமே பெற முடியும் இது கடந்தகால தேர்தல் முடிவுகள் தெளிவாக கோடிட்டு காட்டியுள்ளது. மொத்தத்தில் காத்தான்குடியில் இருந்து 25,000 கிடைத்தாலும் மாவட்டத்தில் இவரால் பெறக்கூடிய வாக்கு வெறும் 27,500 என்கின்ற தோல்வியை தழுவிக்கொள்ளும் வாக்குகளாவே அமையும்.
காத்தான்குடில் தனக்கு 25,000 வாக்குகளை பெற இயலாத நிலையிலும் ஹிஸ்புல்லா கழம் இறங்கியுள்ளதன் நோக்கம் என்ன என்பதை ஒரு வசனத்தில் சொல்வதானால் “தான் வெற்றிபெறாத சூழலில் காத்தான்குடியில் இன்னொருவர் வெற்றிபெறக் கூடாது” இது தற்போது மிக வெளிப்படையாக மக்களால் உணரப்பட்டு வருகின்றது.
மேலும் இவரால் சிதறடிக்கப்படும் வாக்குகளால் இன்னுமொரு முஸ்லிம் பிரதிநிதி மாவட்டத்தில் தெரிவு செய்யப்படாமல் போவதற்கும் வாய்ப்புக்கள் இல்லாமல் இல்லை அது SLMC இற்குரியதாகவும் இருக்கலாம் ஆக மொத்தத்தில் பஷீர் சேகுதாவூதின் கனவான SLMC இற்கான பிரதிநிதித்துவத்தை மட்டக்களப்பில் இல்லாமல் செய்கின்ற தூன்டலுக்கு ஹிஸ்புல்லா இரையாகி இருக்கலாம்.
மொத்தத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகவும் வாய்ப்புக்கள் ஏற்படலாம்.
இம்முறை கழ நிலவரத்தின்படி SLMC ஓர் ஆசனத்தை வெல்வது உறுதியாக உள்ள நிலையில் அதில் போட்டியிடும் போட்டியாளர்களில் 14,000 விருப்புவாக்கினை தாண்டுகின்றவர் வெற்றிபெறுவது உறுதி அது காத்தான்குடியாகவோ, ஏறாவூராகவோ, கல்குடாவாகவோ இருக்கலாம்.
“சாத்தியமானதை சாதிக்கின்ற கலையே அரசியல்”
இக்காலகட்டத்தில் நாட்டினுடைய சூழல் காத்தான்குடியை குற்றவாளிக் கூண்டுக்குள் தள்ளியுள்ளது வர இருக்கின்ற 5 வருடங்கள் என்பது காத்தான்குடிக்கு சவாலாகவே அமையும்.
By: Hiraz Sinnalebbe
மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவமும் காத்தான்குடியின் எதிர்பார்ப்பும்.
Reviewed by www.lankanvoice.lk
on
மே 18, 2020
Rating:

கருத்துகள் இல்லை: