Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021

(
எம்.எஸ்.எம்.ஸாகிர்)
நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 75 வருட பூர்த்தியை முன்னிட்டு, பாடசாலையின் அதிபர் ஏ.அப்துல் கபூரின் ஆலோசனையின் பிரகாரம் பழைய மாணவர்களுக்காக, பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் பவளவிழா கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளை நடாத்தவுள்ளது.

இப்போட்டிகளில் முதலிடம் பெறும் வெற்றியாளர்களுக்கு பாடசாலையின் முன்னாள் அதிபர் மர்ஹூம் சீ.ஓ. லெஸ்தகீர் ஞாபகார்த்த விருதுகள் வழங்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும். அத்தோடு, முதலிடம் பெறும் ஆக்கங்கள் பவள விழா சிறப்பு மலரிலும் இடம்பெறவுள்ளன.

அது மட்டுமல்லாமல் பாடசாலை மீளத்திறக்கப்பட்டதன் பின்னர் பாடசாலை மாணவர்களுக்கிடையேயும் பழைய மாணவர் சங்கத்தினால், பாடசாலையின் தமிழ் இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்படவுள்ளன.

திறந்த போட்டிகள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு: கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிக்கான பரிசுகளாக முதலாமிடம் - 10,000 ரூபாய், இரண்டாமிடம் - 5,000 ரூபாய், மூன்றாமிடம்- 3,000 ரூபாய், ஆக்கங்கள் தரமானதாக அமையுமிடத்து பெறுமதிமிக்க மூன்று ஆறுதல் பரிசில்கள் வழங்கப்படும்.

பொது நிபந்தனைகள்: போட்டியாளர் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவராக இருத்தல் வேண்டும், ஆக்கங்கள் யாவும் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும், ஒரு விண்ணப்பதாரி ஒரு போட்டியில் மாத்திரமே பங்குபற்ற முடியும், வயது கட்டுப்பாடுகள் இல்லை, ஆக்கங்கள் யாவும் தெளிவான எழுத்துக்களில், கையெழுத்துப் பிரதிகளாக சமர்ப்பிக்கப்பட வேண்டும், ஆக்கங்களுக்கு foolscap  தாள்களே பயன்படுத்தப்பட வேண்டும், பாடசாலைச் சுட்டெண்களை மாத்திரமே ஒவ்வொரு பக்கங்களிலும் குறிப்பிட வேண்டும், பெயர்களைக் குறிப்பிட தேவையில்லை, ஆக்கங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி 10 ஜுலை 2021 ஆகும், உரிய காலத்துக்குள் ஆக்கங்கள் தபால் அல்லது மின்னஞ்சல் அல்லது  whatsapp மூலம்  Scan  செய்யப்பட்ட பிரதிகளை சமர்ப்பிக்க முடியும், தபாலாயின்  PPA Headquarters, Km/Al- Ashraq (M.M.V) National School, Nintavur – 25 என்ற முகவரிக்கும், மின்னஞ்சலாயின்  alashraqstudents@gmail.com  எனும் மின்னஞ்சல் முகவரிக்கும்,  Whatsapp எனில் 077 - 2301539 எனும் இலக்கத்துக்கும் அனுப்பிவைக்க முடியும், பழைய மாணவர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் யாரும் போட்டிகளில் பங்குபற்ற முடியாது, நடுவர் குழாமின் தீர்ப்பே இறுதியானது.

கட்டுரைப்போட்டி தொடர்பான விபரங்கள்: சொந்த ஆக்கங்களாக இருத்தல் வேண்டும், கட்டுரைகள் 1500 சொற்களில் எழுதப்பட வேண்டும், கட்டுரைத்தலைப்பு – 'கல்வியின் கலங்கரை விளக்காய்த் திகழும் அல்-அஷ்ரக';.

கவிதைப் போட்டி தொடர்பான விபரங்கள்: சொந்த ஆக்கங்களாக இருத்தல் வேண்டும், கவிதையானது புதுக்கவிதையாகவோ அல்லது மரபுக்கவிதையாகவோ அமையலாம், புதுக்கவிதையாயின் 40 வரிகளுக்குள் அமைதல் வேண்டும், மரபுக்கவிதை நான்கு அடிப்பாடலாயின் 8 பாடல்களும், 8 அடிப்பாடலாயின் 6 பாடல்களுமாக அமைதல் வேண்டும், கவிதைத்  தலைப்பு – 'பவள விழாக் காணும் அல் அஷ்ரக் கல்வித்தாய்'

போட்டிகள் தொடர்பான மேலதிக விபரங்களை பிரதித் தலைவர் எஸ்.ஏ. அர்சாத் 077 - 3867147 அல்லது   செயலாளர் எம்.எச்.ஏ. சிப்லி - 077 - 2301539 அல்லது ஆசிரியர் எம். வை. அஷ்ரப் (உறுப்பினர்) 0777 - 487838 ஆகியோரைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021 Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 26, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.