Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய 18 இராணுவ வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்குப் பதவி உயர்வு

 

இந்தியாவின் ரஞ்சியில் இடம்பெற்ற 4 வது தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் தாய் நாட்டிற்காக மற்றும் இலங்கை இராணுவத்திற்குப் புகழ் பெற்றுத் தந்த 12 தங்கம, 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுத் தந்த இலங்கை இராணுவ வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் சிறப்பான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ RSP ctf-ndu psc IG வினால் பாராட்டி, கௌரவமளிக்கப்படனர்.



வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை பாராட்டும் நிகழ்வு நேற்று (30) இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றதுடன், இராணுவத் தளபதியினால் வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் வெற்றி தனிப்பட்ட முறையிலும் பாராட்டப்பட்டது.இந்நிகழ்வில் எதிர்காலப் போட்டிகளுக்காக அவர்களின் விளையாட்டு வீரர்களின் தொடர்ச்சியான வெற்றியை ஊக்குவிக்கும் வகையில், இராணுவத் தளபதி அவர்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.அவர்களின் சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கும் விதமாக, 18 இராணுவ விளையாட்டு வீரர்களும் அடுத்த தரவரிசைக்கு பதவி உயர்வு பெற்ற

னர்.

தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய 18 இராணுவ வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்குப் பதவி உயர்வு Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 31, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.