Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலய– தரம் 01 மாணவர்களின் சுதேச கலாச்சார நிகழ்வு


நவீன கல்வி சீர்திருத்தத்திற்கமைய எமது பாடசாலையில் தரம் - 01 மாணவர்களின் ஆரம்ப விஞ்ஞானமும் சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் பாடத்தில் மரபுரிமை எனும் கருப்பொருளில் சுதேச கலாச்சார பண்டிகைகளையும் பாரம்பரிய உணவுகளையும் அறிந்து கொள்வோம், அனுபவிப்போம், பாதுகாப்போம் எனும் தொனிப் பொருளில் இந்நிகழ்வு அதிபர் ALM. றிபாஸ் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (05.06.2026) சிறப்பாக நடைபெற்றது. 


இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் ALM. பாயிஸ், ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் தஸ்லிமா றிஸ்வி, வழிகாட்டல் ஆலோசனை ஆசிரிய ஆலோசகர் MR.ஜவாத், வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர் ABM. றஸீம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 


மேலும் 
பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்,
தரம் 1 மாணவர்களின் பெற்றோர்களும்  கலந்து கொண்டிருந்தனர்.


இந் நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் தேசிய கீதம் மற்றும் பாடசாலை கீதம் மூலம் தொடங்கப்பட்டது.


இந்நிகழ்வில், மாணவர்கள் பாரம்பரிய உணவு, உடை, கலாச்சார விடயங்களை அறிந்து அனுபவித்து செயற்பாட்டு ரீதியாக கற்றுக் கொள்ள வழிவகுப்பதாகவும் கற்றல் என்பது புத்தகப் பக்கங்களுக்குள் மட்டும் அல்ல, அனுபவத்தின் வழியே நிகழும் என்பதைக் காட்டுவதாகவும் இந் நிகழ்வு அமைந்திருந்தது. 


மேலும் ஆசிரியர்–மாணவர்–பெற்றோர் மூவரின் ஒருங்கிணைந்த முயற்சி கல்வி வளர்ச்சியின் அடித்தளமாகும் என்பதை வெளிப்படுத்துவதாகவும் இந் நிகழ்வு காணப்பட்டது.



மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலய– தரம் 01 மாணவர்களின் சுதேச கலாச்சார நிகழ்வு Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 06, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.