Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தபால் சேவையில் 192 புதிய உப தபால் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள்

இலங்கை தபால் திணைக்களத்தில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறைக்குத் தீர்வாக, நீண்டகாலமாகப் தற்காலிகமாகப் பணியாற்றி வந்த 192 உப தபால் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.


பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன், தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நேற்று (18) நடைபெற்ற விசேட நிகழ்வின் போதே இந்நியமனங்கள் வழங்கப்பட்டன.

ஊடகத்துறை மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் கௌஷல்ய ஆரியரத்ன ஆகியோரின் தலைமையில் இந்த நியமன விழா நடைபெற்றது.


இந்நிகழ்வில் தபால் திணைக்களத்தின் பிரதி தபால் அதிபர்கள், தபால் திணைக்கள நிறைவேற்று அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் நியமனங்களைப் பெற்றுக்கொண்ட 192 அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
தபால் சேவையில் 192 புதிய உப தபால் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 19, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.