Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பொது இடத்தில் ஒருவர் எவ்வாறெல்லாம் பேசக் கூடாதோ, எப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாதோ, அவை அத்தனையினையும் அர்ச்சுனா எம்.பி மிகச் சாதாரணமாக வெளிப்படுத்தி வருகின்றார்.


(சிரேஷ்ட்ட ஊடகவியலாளர்
UL.மப்றூக்)

பொது இடத்தில் ஒருவர் எவ்வாறெல்லாம் பேசக் கூடாதோ, எப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாதோ, அவை அத்தனையினையும் அர்ச்சுனா எம்.பி மிகச் சாதாரணமாக வெளிப்படுத்தி வருகின்றார்.


அர்ச்சுனா ராமநாதன் - எல்லா விடயங்களையும் முரண்பாடு, சண்டைகளின் ஊடாகவே தீர்த்துக் கொள்ள முயற்சிக்கும் - அசாதாரண மனநிலை கொண்ட ஒருவர் என்பதை நாம் அறிவோம்.

அவரின் காணிப் பிரச்சினையொன்றின் போது, பெண் ஒருவருடன் முரண்பட்டுக் கொண்டு, துப்பாக்கியைக் காட்டி; "சுடுவன் நாயே” என்றார்.

அண்மையில் தமிழகம் சென்றிருந்த போது, அங்கு சீமானைப் பற்றி தரக்குறைவாகப் பேசி விட்டு வந்தவர், நாடாளுமன்றத்தில் சீமான் குறித்துப் பேசும் போது; "என்னிடம் துவக்கு இருந்தால் உன்னை சுட்டிருப்பேன் நாயே” எனக் கூறினார்.

நேற்றைய தினம் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடந்த போது, அங்கு கஜேந்திரகுமார் எம்.பியுடன் முரண்பட்ட அர்ச்சுனா எம்.பி; ”தூக்கியடிப்பன் நாயே, வாயை மூடிக் கொண்டிரு” என்று கத்தினார்.
போதாக்குறைக்கு ”மடையா, பொத்துடா வாய” என்றும் திருவாய் மலர்ந்தருளினார்.

ஆனால், பதிலுக்கு கஜேந்திரகுமார் எம்.பி - ஒரு கெட்ட வார்த்தை கூட பேசவில்லை. ”கதைக்கத் தெரிய வேணும், தண்ணியக் கொடுங்கோ” என்றார்.

அர்ச்சுனாவின் இவ்வாறான தரங்கெட்ட பேச்சு, நாடாளுமன்றிலும் அடிக்கடி கேட்கிறது. ”அடேய்” என்று மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களை விளித்துப் பேசுவதை இவர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

வாய் இருக்கிறது என்பதற்காக போகுமிடமெல்லாம் அர்ச்சுனா வம்பிழுத்துக் கொண்டிருக்க கூடாது. சிலவேளை அவரை விடவும் 'சுள்' என்கிற கோபக்காரனிடம் மாட்டினால், வாயில் 'வெற்றிலை பாக்கு' போட்டு அனுப்பி விடுவான்.

மறுபுறமாக, ”நாயே நாயே” என்று தொடர்ச்சியாக அர்ச்சுனா கூறி வருவதால், அதன் குணம், அவருக்குத் தொற்றி விட்டதோ என்று, மக்கள் முணுமுணுக்கத் தொடங்கி விட்டார்கள். யாரைக் கண்டாலும் குரைப்பதுதானே நாய்க் குணம்.

நாய்க் குணம் தீவிரமடைவதை நம்மூரில் 'விசர்' என்று சொல்வார்கள்.
'விசர்' நோய்க்கு ஊசி போடாவிட்டால், எல்லோருக்கும் ஆபத்தாகப் போய்விடும்.

அர்ச்சுனா எம்.பி - வைத்தியர், அவர் தேர்தல் சின்னம் ஊசியல்லவா?
குத்துங்கோ டொக்டர், குத்துங்கோ.
பொது இடத்தில் ஒருவர் எவ்வாறெல்லாம் பேசக் கூடாதோ, எப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாதோ, அவை அத்தனையினையும் அர்ச்சுனா எம்.பி மிகச் சாதாரணமாக வெளிப்படுத்தி வருகின்றார். Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 19, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.