Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஊசலாடுகிறது போர் நிறுத்த ஒப்பந்தம்: மீண்டும் பரஸ்பர தாக்குதல்!

இஸ்ரேல், ஈரானுக்கிடையில் மீண்டும் ஏற்பட்டுள்ள தீவிரமான போர் பதற்றமானது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தைமீறி இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதால், அமைதி முயற்சி தோல்வியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே இஸ்ரேலை ஈரான் இலக்கு வைத்துள்ளது எனக் கூறப்படுகின்றது.

இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் ஈரான்மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி செய்தபோதிலும், யேமன் போன்ற பிற பகுதிகளிலிருந்தும் இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

இந்த மோதலானது இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்காசிய போர் சூழ்நிலையால் உலக நாடுகளின் பொருளாதாரம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. சிலவேளை மீண்டும் போர் ஏற்பட்டால் நிலைமை மோசமாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஊசலாடுகிறது போர் நிறுத்த ஒப்பந்தம்: மீண்டும் பரஸ்பர தாக்குதல்! Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 08, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.