Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அமெரிக்க, ஈரான் அமைதி ஒப்பந்தம் ஜெனிவாவில் கைச்சாத்து!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம், விரைவில் சுவிட்சர்லாந்தில் கைச்சாத்திடப்படவுள்ளதென தெரியவருகின்றது.

ஜெனிவாவில் இதற்குரிய நிகழ்வு இடம்பெறலாம் என ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இரு தரப்பு அமைதி பேச்சில் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர், தொடர்பில் சுவிட்சர்லாந்திலுள்ள தமது நாட்டுப் பிரதிநிதியுடன் முக்கியக் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

இந்த அமைதி ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைக்கு சுவிட்சர்லாந்து அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.

பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட எடுக்கப்படும் இந்த முயற்சிகளை சுவிட்சர்லாந்து வரவேற்றுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி முயற்சி தொடர்பான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதென தெரியவருகின்றது.

அமெரிக்க, ஈரான் அமைதி ஒப்பந்தம் ஜெனிவாவில் கைச்சாத்து! Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 14, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.