Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“சுரேஷ் சலே புலனாய்வு அதிகாரியாக, அரச அதிகாரியாக இருந்தவர். எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனக்கு தெரிந்தவற்றை கூறி, விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும்.

மேற்படி தாக்குதல் சம்பவத்துடன் அவருக்கு தொடர்பில்லையெனில், விசாரணைக்கு ஒத்துழைப்பதே சிறந்தது. குற்றவாளியெனில்தான் விடயங்களை மறைக்க முற்பட வேண்டும்.

அதேவேளை, இப்ராஹிம் தொடர்பில் நீதிமன்றம்தான் பிணை வழங்கியது. அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனில் பாதுகாப்பு தரப்பு அதனை செய்யும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி, அதற்கு உதவியவர்கள் உட்பட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதே எமது எதிர்பார்ப்பாகும்.” – என்றார்.

சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்! Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 15, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.