Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மட்டக்களப்பில் உடலியல் தண்டனையை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நிகழ்வு


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் இணைந்து உடலியல் தண்டனையை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் நிஷா  ரியாஸ் ஏற்பாட்டில் ஹிஸ்புல்ஹா கலாசார மண்டபத்தில்   (17) இடம் பெற்றது.


பாடசாலை மட்டத்தில்  உடலியல் தண்டனையை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் அவற்றை கையாள்வற்கான வழிமுறைகள் தொடர்பான விளக்கங்கள் வழங்கபட்டன. 


மேலும் பாடசாலை கட்டமைப்பை வலுப்படுத்தி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியான கற்றல் செயற்பாட்டை அதிகரிப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


இந் நிகழ்வின் வளவாளராக உளநள வைத்திய நிபுணர் கமல்ராஜ், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் அ.பிரபாகர், சட்டத்தரணி  சத்துரிக்கா  ஆகியோர் மேற்கொண்டனர்.

இதன் போது உடலியலினால் பாதிக்கப்பட்ட நபர்களை பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகள்  மற்றும் தண்டனைகள் தொடர்பான விளக்கங்கள் துறைசார் நிபுணர்களினால் வழங்கப்பட்டது.


இந் நிகழ்வில் வலயக் கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.


மாணவர்களிடம் தனிப்பட்ட அக்கறை காட்டுவதுடன் அவர்களின் விருப்பங்கள், ஆர்வங்கள், கனவுகள் ஆகியவற்றை ஆசிரியர்கள் அறிந்து கொள்வதனால் மாணவர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.


மட்டக்களப்பில் உடலியல் தண்டனையை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நிகழ்வு Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 18, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.