Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி நகர சபை IT உத்தியோகத்தர்களுக்கு தமிழ்நாட்டில் விசேட பயிற்சி, மாண்புமிகு அமைச்சர் சாஜஹானுடன் நகர முதல்வர் உள்ளிட்ட குழுவினர் முக்கிய சந்திப்பு!


காத்தான்குடி நகர சபை IT உத்தியோகத்தர்களுக்கு தமிழ்நாட்டில் விசேட பயிற்சி, மாண்புமிகு அமைச்சர் சாஜஹானுடன் நகர முதல்வர் உள்ளிட்ட குழுவினர் முக்கிய சந்திப்பு!


தமிழ்நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள காத்தான்குடி நகர முதல்வர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், மாண்புமிகு அமைச்சர் சாஜஹான் அவர்களைத் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து முக்கிய கலந்துரையாடலொன்றை முன்னெடுத்தனர்.


இச்சந்திப்பில் காத்தான்குடி நகர சபையின் நகர முதல்வர் SHM. அஸ்பர் JP, UM தலைமையில், கௌரவ நகர சபை உறுப்பினர்களான EM. றுஸ்வீன் JP, MIM. ஜவாஹிர் JP மற்றும் MCA. ஹம்தூன் JP ஆகியோர் கலந்துகொண்டனர்.


இக்கலந்துரையாடலின் போது காத்தான்குடி நகர சபையின் தகவல் தொழில்நுட்பப் IT பிரிவு உத்தியோகத்தர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.


குறிப்பாக, தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் ஊடாக காத்தான்குடி நகர சபை IT உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சித் திட்டமொன்றை வழங்குவது தொடர்பான முன்மொழிவு அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.


இம்முன்மொழிவினை மிகுந்த ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்ட மாண்புமிகு அமைச்சர், இப்பயிற்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முழுமையான இணக்கத்தைத் தெரிவித்ததுடன், அதனை அடுத்த கட்டத்திற்கு உடனடியாக நகர்த்துவதற்கான சாதகமான சமிக்ஞையையும் வழங்கினார். இப்பயிற்சித் திட்டமானது எதிர்காலத்தில் காத்தான்குடி நகர சபையின் தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களது தொழில்நுட்ப அறிவையும், நிர்வாகத் திறன்களையும் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கு வழிவகுக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அத்துடன், காத்தான்குடி பிராந்தியத்தின் வர்த்தக மேம்பாடு, புதிய தொழிற்சாலை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் மற்றும் உள்ளூர் வர்த்தகர்கள் தற்போது எதிர்நோக்கும் நடைமுறைப் பிரச்சினைகள் குறித்தும் இச்சந்திப்பில் ஆழமாகக் கலந்துரையாடப்பட்டது.


காத்தான்குடியின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையிலான வர்த்தக ஒத்துழைப்புகள் மற்றும் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பிலும் மாண்புமிகு அமைச்சருடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

(ஊடகப்பிரிவு)




காத்தான்குடி நகர சபை IT உத்தியோகத்தர்களுக்கு தமிழ்நாட்டில் விசேட பயிற்சி, மாண்புமிகு அமைச்சர் சாஜஹானுடன் நகர முதல்வர் உள்ளிட்ட குழுவினர் முக்கிய சந்திப்பு! Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 15, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.