மட்டக்களப்பு மண்ணின் 15 வயது இளம் வீராங்கனை செல்வி துவேஷா ரமேஷ் சாதனை; நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு வாழ்த்து
இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெற்ற முதலாவது உலக யோகாசனப் போட்டியில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 1 வெள்ளிப் பதக்கத்தையும் 3 வெண்கலப் பதக்கங்களையும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள எமது மட்டக்களப்பு மண்ணின் 15 வயது இளம் வீராங்கனை செல்வி துவேஷா ரமேஷ் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்வதேச அரங்கில் பல்வேறு நாடுகளின் தலைசிறந்த வீரர்களுடன் போட்டியிட்டு, தனது அசாத்திய திறமையினாலும் நெகிழ்வுத்தன்மையினாலும் தாய்நாட்டிற்கும் எமது சொந்த ஊரான மட்டக்களப்பிற்கும் மாபெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளார் இந்த இளம் தாரகை.
விளையாட்டுத் துறையில் எமது மாவட்டத்து இளைஞர், யுவதிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சர்வதேச எல்லையைத் தொட்டுள்ள இந்த மகளின் சாதனை ஒட்டுமொத்த மட்டக்களப்பு மக்களுக்கும் பெருமிதமாகும்.
செல்வி துவேஷா ரமேஷ் எதிர்காலத்தில் மேலும் பல சர்வதேச சாதனைகளைப் புரிந்து, உலக அளவில் இன்னும் பல உயரங்களை எட்ட எனது ஆசிகளும், மட்டக்களப்பு மக்கள் சர்பிலான வாழ்த்துகளும் என்றும் உண்டு!
- கந்தசாமி பிரபு,
நாடாளுமன்ற உறுப்பினர்,
மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு மண்ணின் 15 வயது இளம் வீராங்கனை செல்வி துவேஷா ரமேஷ் சாதனை; நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு வாழ்த்து
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 17, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 17, 2026
Rating:

கருத்துகள் இல்லை: