Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

புடினை விமர்சிக்கும் ஓவியர் போலந்தில் சுட்டுக்கொலை


 
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைத் தொடர்ந்து விமர்சித்து வந்த பிரபல ரஷ்ய ஓவியர் ஒருவர், போலந்து நாட்டில் ‘மரணதண்டனை’ பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் போலந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Semyon Skrepetsky என்ற புனைப்பெயரில் புகழ்பெற்ற 44 வயதுடைய Robert Kuzovkov என்ற ஓவியரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பெலாரஸ் எல்லையிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போலந்தின் Biała Podlaska நகரில் திங்கட்கிழமை காலை இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த ஓவியரின் தலை, நெஞ்சு மற்றும் முதுகுப் பகுதிகளில் ஐந்து முறை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது.

“அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் ஓவியரை நெருங்கி முதலில் இரண்டு முறை சுட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் தரையில் விழுந்ததும், கொலையாளி அவரை மேலும் நெருங்கி மூன்று முறை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். ராபர்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்” என்று விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக பெலாரஸ் தூதரகத்திற்கு அருகில் வைத்து 33 மற்றும் 37 வயதுடைய இரண்டு பெலாரஸ் பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இக்கொலையில் அவர்களது பின்னணி குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மறைந்த ஓவியர் ராபர்ட், கடந்த 2021 ஆம் ஆண்டு போலந்திற்கு இடம்பெயர்ந்துள்ளார்.

இவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ மற்றும் செச்சென் தலைவர் ரம்ஜான் காடிரோவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களைக் கார்ட்டூன் சித்திரங்கள் (Caricatures) மூலம் கடுமையாக விமர்சித்து வந்தவர் ஆவார்.

புடினை விமர்சிக்கும் ஓவியர் போலந்தில் சுட்டுக்கொலை Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 17, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.