Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மட்டக்களப்பு அரச கால்நடை வைத்திய அலுவலகமும் வைத்தியர் விடுதியும் திறந்து வைப்பு


கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மட்டக்களப்பு அரச கால்நடை வைத்திய அலுவலகமும் வைத்தியர் விடுதியும் இன்று (18) திறந்து வைக்கப்பட்டது.



மட்டக்களப்பு, அரச கால்நடை வைத்திய அதிகாரி திருமதி டுஜித்திரா லிங்கேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர பிரதம அதிதியாக பங்கேற்று கட்டடத்தினை திறந்து வைத்தார்.



40 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆறுமாத காலப்பகுதியினுல் நிர்மாணிக்க புதிய கட்டத் தொகுதியினால் மாவட்டத்தில் உள்ள பண்ணையாளர்களுக்கான சிறந்த சேவை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம். அஸ்மி, கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் சுல்பிகார் அபூபக்கர் உள்ளிட்ட கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.






மட்டக்களப்பு அரச கால்நடை வைத்திய அலுவலகமும் வைத்தியர் விடுதியும் திறந்து வைப்பு Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 18, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.