காத்தான்குடி பிரதான வீதியில் அமைய பெற்றுள்ள சுரங்கப் பாதையினை திருத்தம் செயய ஏற்பாடு
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பொறியியலாளர் K.சிவகுமார் அவர்களுடனான சந்திப்பு (24.06.2025. இன்று செவ்வாய்க்கிழமை வீதி அபிவிருத்தி அதிகார சபையில் இடம்பெற்றது.
இதன் போது
1.காத்தான்குடி அந்நாசர் சந்தியில் அமைய பெற்றுள்ள போக்குவரத்து சமிஞ்சை விளக்கினை இயங்க வைப்பதற்கான வேலைகளை ஆரம்பிப்பது.
2.பிரதான வீதிகளில் காணப்படுகின்ற பள்ளங்களை செப்பனிடுவது
3.பிரதான வீதி மற்றும் ஊர் வீதியில் காணப்படுகின்ற வடிகால் மூடிகளை இடுவது.
4.பிரதான வீதியில் அமைய பெற்றுள்ள சுரங்கப் பாதையினை திருத்தம் செய்வது
ஆகிய விடயங்களுக்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகர முதல்வர் SHM அஸ்பர் JP UM அவர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் உறுதியளித்தார்.
காத்தான்குடி பிரதான வீதியில் அமைய பெற்றுள்ள சுரங்கப் பாதையினை திருத்தம் செயய ஏற்பாடு
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 24, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 24, 2025
Rating:



கருத்துகள் இல்லை: