Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி நகர முதல்வர் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல்.


காத்தான்குடி நகர முதல்வர்  மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக் கிடையிலான முக்கிய சந்திப்பு 23.06.2025 நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


நகர முதல்வர் SHM. அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பிரதி நகர முதல்வர் MIM ஜெஸீம் JP, நகரசபை உறுப்பினர்களான MIM.ஜவாஹிர் , RM.றுஸ்வின் , சல்மா ஹம்சா ,ACM. ஹம்தூன் , M.ஸாஹிர், M.அஜ்வத் மௌலவி , Eng றியாஜ் மஹ்மூத் , M.றிஸ்வி, M.றாசிக் , வர்த்தக சங்க பிரதிநிதிகள் நகரசபை நிருவாக உத்தியோகத்தர் திருமதி றினோஸா முப்லி மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இதன் போது எமது ஊரில் அவசரமாகவும், அவசியமாகவும் செய்ய வேண்டிய பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.


அவற்றுள் குறிப்பாக;

1.பாதசாரிகளின் நடைபாதையில் வியாபார தளங்களை அமைத்துள்ள வர்த்தகர்கள் மீதான சட்ட நடவடிக்கை.

2. எமது ஊரில் அதிகரித்து வருகின்ற கட்டாக்காலி நாய்கள் மற்றும் மாடுகளை கட்டுப்படுத்துதல்.

3. மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் நேரத்தில் வீதிகளை மறித்து கல், மண் கொட்டுவதை ஒழுங்கு படுத்துதல்.

4. வீதிகளில் முறையற்ற வகையில் வாகனம் நிறுத்துவதை ஒழுங்குபடுத்துதல்.

5. காத்தான்குடி நகர சபைக்கான தீயணைப்பு படை பிரிவு மற்றும் பாதுகாப்பு படை பிரிவு ஒன்றினை ஆரம்பித்தல்.

6. காத்தான்குடி கடற்கரை வீதி, டெலிகொம் வீதி ஆகியவற்றில் ஒற்றை, இரட்டை நாட்கள் வாகன தரிப்பிடத்தை நடைமுறைப்படுத்துதல்.
7. தலைக்கவசம் இன்றி பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

8. பாடசாலை மற்றும் பிரத்தியோக வகுப்புகளுக்கு செல்கின்ற மாணவிகளுக்கு இடையூறு செய்யும் இளைஞர்களுக்கும், சாரதி அனுமதிப் பத்திரமின்றி, தலைக்கவசமின்றி மோட்டார் வாகனம் செலுத்தும் நபர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல்.

மேலும் இது போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டதோடு உடனடியாக காத்தான்குடி நகர சபை மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையம் என்பன இணைந்து எடுக்கப்பட்ட இத்தீர்மானங்களை உடன் நடைமுறைப்படுத்துவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.


காத்தான்குடி நகர முதல்வர் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல். Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 24, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.