போலிகளால் சமுதாயத்திற்கு இழைக்கப்படும் துரோகம் பற்றி இவர்களது போலி வேசம் குறித்து எச்சரிப்பது அனைவர்களதும் மானுசீகக் கடமையாகும்!
(கலாநிதி அலவி ஷரீப்தீன்)
சமூகம் புறக்கணிக்கும் பர்ள் கிபாயா எது.
ஆற்றலும், திறமையுள்ள எந்த மாணவனோ அல்லது மாணவியோ, வறுமை காரணமாக, தன் கல்வியைத் தொடர முடியாத நிலையேற்பட்டால், அவர்களுக்கு உதவுவது சமூகத்தின் மீது பர்ள் கிபாயாவாகிறது.
இதனைப் புறக்கணிக்கும் சமூகங்களில் புத்திஜீவிகள் இல்லாத மூடர்களே நிறைந்திருப்பர்.
இதே போல், போலிப் பட்டதாரிகளை அல்லது போலிக் கலாநிதிகளை போற்றிப் புகழ்வதும் பாவமாகின்றது. முழு சமூகத்தையுமே குட்டிச் சுவராய்க்கின்றது.
தென்னாபிரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில்
இவ்வாறு எழுதப்பட்டிருக்கின்றது:
எந்தவொரு நாட்டையும் அழிக்க அணு குண்டுகளைப் பயன்படுத்தவோ
அல்லது நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தவோ தேவையில்லை.
இதற்கு கல்வியின் தரத்தை குறைப்பதும், மாணவர்களின் தேர்வுகளில்
மோசடி செய்வதை அனுமதிப்பது மட்டுமே தேவைப்படுகிறது.
அத்தகைய மருத்துவர்களின் கைகளில் நோயாளிகள் இறக்கின்றனர்,
அத்தகைய பொறியியலாளர்களின் கைகளில் கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன.
அத்தகைய பொருளாதார வல்லுநர்கள், கணக்காளர்களின் கைகளில்
பணம் அழிந்து போகின்றது.
அத்தகைய மத அறிஞர்களின் கைகளில் மனிதநேயம் இறக்கிறது.
அத்தகைய நீதிபதிகளின் கைகளில் நீதி இழக்கப்படுகிறது.
கல்வியின் சரிவு தேசத்தின் சரிவாகும்.
போலி கலாநிதி, முதுமானிப் பட்டங்கள் வழங்கும் பல ஊழல் கும்பல்கள் அதிகரித்திருக்கும் காலமிது!
பலர் வருடக்கணக்கில் பல்கலைக் கழகங்களில் கல்வி கற்காமல், ஆய்வுக்கட்டுரை எழுதாமல், அல்லது பினாமிகளை வைத்து எழுதியவைகளை சமர்ப்பித்த பின், திடீரென தாம் ஒரு கலாநிதி என்று பறையடிக்கும் நிகழ்வுகளை ஆங்காங்கு இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் அவதானிக்கின்றோம்.
சில முறையாக கல்வி கற்ற மூத்த கல்விமான்களும், இப்போலி முதுமானி அல்லது கலாநிதிகளை இப்பட்டங்களால் அழைப்பது சமூகத்தின் அவலங்களை அப்பட்டமாய் காட்டுகின்றது.
குறைந்தது 2 வருட காலத்தைக் கொண்ட முதுமானிப் பட்டத்தை அல்லது 4 வருட கற்கை கால கலாநிதிப் பட்டத்தை சில டொலர்களை கொடுத்து, அல்லது பினாமிகளைக் கொண்டு அப்பட்டங்களை வெற்றுக்கடதாசியில் அச்சிட்டு வாங்குகின்றார்கள்.
இதனால் எமது எதிர்கால இளம் சந்ததியினர் உயர்கல்வி பற்றிய தவறான கணிப்பீடுகளை வளர்த்துக் கொள்கின்றார்கள்.
இவ்வாறான போலிப்பட்டங்களை வைத்து சமுதாயத்தை ஏமாற்றுபவர்களுக்கு, இவ்வாறு செய்வது மானுடத்திற்கும் எதிர்கால சமுதாயத்திற்கும் செய்யும் துரோகம் என்று சொல்லுங்கள்!
இவர்கள் யார் என்று நான் சொல்லத் தேவையில்லை.
ஆனால் இதனால், இப்போலிகளால் சமுதாயத்திற்கு இழைக்கப்படும் துரோகம் பற்றி இவர்களது போலி வேசம் குறித்து எச்சரிப்பது அனையவர்களதும் மானுசீகக் கடமையாகும்!
போலிகளால் சமுதாயத்திற்கு இழைக்கப்படும் துரோகம் பற்றி இவர்களது போலி வேசம் குறித்து எச்சரிப்பது அனைவர்களதும் மானுசீகக் கடமையாகும்!
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 02, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 02, 2026
Rating:

கருத்துகள் இல்லை: