காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அதிகார துஷ்பிரயோகம், உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகள் பரிக்கப்படுவது தொடர்பில் NFGG இனால் சட்ட நடவடிக்கைகள் ஆரப்பிக்கப்பட்டுள்ளது. நகரசபை உறுப்பினர் பர்சாத் தெரிவிப்பு.
காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அதிகார துஷ்பிரயோகம், உரிப்பினர்களின் அடிப்படை உரிமைகள் பரிக்கப்படுவது தொடர்பில் NFGG இனால் சட்ட நடவடிக்கைகள் ஆரப்பிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஏ.எம்.எம் பர்சாத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்...
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் "KKY UC COMMITTEE " யினருக்கும், காத்தான்குடி நகரசபை, மன்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களுக்குமான விஷேட கலந்துரையாடல் கடந்த 28.08.2026 வெள்ளிக்கிழமை கட்சியின் பிரதித் தவிசாளர் Eng. Abdur Rahman Sir அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடளில் காத்தான்குடி நகரசபை தவிசாளர் SHM.அஸ்பர்.JP அவர்களினால் காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அதிகார துஷ்பிரயோகம், உரிப்பினர்களின் அடிப்படை உரிமைகள் பரிக்கப்படுவது தொடர்பில் கட்சியிடம் தெளிவு படுத்தினேன்.
இறுதியாக 20.08.2026ம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற 15 வது நகரசபை அமர்வானது தவிசாளருக்கு அன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக தெரிவித்து அவரது மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான கூட்டம் போன்று காத்தான்குடி நகரசபை அமர்வை அவசர அவசரமாக நடாத்தி முடித்தார்.
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நகரசபை மாதம் ஒரு முறை இந்த ஊர் மக்களின் பிரச்சினைகளை கலந்துரையாடி தீர்மானங்களை எடுப்பதற்கே கூடுகிறது. நகரசபையை உறுப்பினர்கள், அதிகாரிகளென நகரசபையை அதற்காகவே நிர்வகிக்கின்றோம்.
மக்கள் எங்களுக்கு வாக்களித்து உறுப்பினர்களாக நகரசபைக்கு அனுப்பியுள்ளது இந்த ஊர் மக்கள் சார்பான பிரச்சினைகளை அவர்கள் சார்பாக நாங்கள் பேசுவதற்கே எங்களை தெரிவு செய்துள்ளார்கள். (மாறாக திருமண வீடுகளுக்கு சென்று புகைப்படம் போட்டு எங்களை அழங்கரிப்பதற்கு அல்ல)
இறுதியான 15வது சபை அமர்வன்று தவிசாளருக்கு நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற காரணிக்காக அன்றைய தினம் உறுப்பினர்களின் எந்தவொரு பிரேரணையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை,
நிரலில் உள்ள 12வது விடயமான "ஏனைய விடயங்களை கலந்துரையாடல்" என்ற விடயம் சபை எடுத்துக் கொள்ளப்படவே இல்லை.
அன்றையதினம் சபை முடிவடைந்ததும், அன்றைய சபை அமர்வு தொடர்பில் எங்களது கண்டனத்தை நேரடியாக காத்தான்குடி நகரசபை செயளாலரிடம் தெரியப்படுத்தினோம்.
தவிசாளருக்கு நீதிமன்றத்தில் சபை அமர்வு தினத்தில வழக்கு இருந்தால் பிரதித் தவிசாளைரை வைத்து சபை கூட்டத்தை நடாத்த வேண்டும், அல்லது வேறு ஒரு தினத்தில் சபை அமர்வை நடாத்த வேண்டும்.
இந்த விடயம் தொடர்பாகவும், காத்தான்குடி நகரசபையால் களப்பணியென்ற பெயரில் நகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் நுவரெலியாவுக்கு சுற்றுழா சென்றதற்கு பொதுமக்களின் 349820/= வரிப்பணம் செலவு செய்யப்பட்டுள்ள விடயம் தொடர்பிலும், அன்மைக்கால காத்தான்குடி நகரசபையின் நடவடிக்கைகள் தொடர்பாக உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு இக்கலந்துரையாடளில் கட்சியிடம் வழியிறுத்தியுள்ளேன்.
கட்சியால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் தெளிவுபடுத்தினேன். கட்சியால் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆரப்பிக்கப்பட்டுள்ளது.
நகரசபையின் ஊடக விடயம் தொடர்பாவும் கலந்துரையாடினோம்.
இன்றைய தினம் 01.09.2026 Dehiwala Municipal Council என்ற முகநூல் ஊடாக அச்சபை அமர்வு நேரடி அஞ்சல் செய்யப்படுகிறது.
இதனால் தெஹிவலை மாநகரசபை அமர்வுகள் வெளிப்படத்தன்மையாக அமைவதுடன் சர்வதேசம் வரை மக்கள் சபை அமர்வுகளை கண்காணிக்கின்றார்கள்.
இத்தீர்மானத்தை முதன் முறையாக நடைமுறைப்படுத்திய தெஹிலை மாநகர சபையின் மேயர், மற்றும் உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துக்களை காத்தான்குடி நகரசபை உறுப்பினர் என்ற வகையில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேவேளை காத்தான்குடி நகரசபையின் உறுப்பினர் என்ற வகையில் காத்தான்குடி நகரசபையில் ஊடக விடயத்தில் காத்தான்குடி நகரசபை தவிசாளர் அவர்களின் அதிகார ஒடுக்குமுறையை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுவது பொறுத்தமென நினைக்கிறேன்.
காத்தான்குடி நகரசபையின் முதலாவது அமர்வில் சபை அமர்வுகள் தொடர்பிலான 54வது முடிவின் பிரகாரம் சபையின் ஊடக பிரிவால் சபை அமர்வுகள் முழுமையாக ஒளிப்பதிவு (Record) செய்யப்படும். உறுப்பினர்கள் பிரேரணைகள் முன்வைத்து உரையாற்றும் காணொளிகள் சபை முடிந்த தினத்தன்று ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக அவர்களது வட்சப் இலக்கத்திற்கு அனுப்பப்படும் அதை உறுப்பினர்கள் அவர்களின் தேவைக்கு ஏற்ப சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்ள முடியுமென முடிவு செய்யப்பட்டது.
அந்த ஒழுங்கில் சில மாதம் நடைபெற்றது. கடந்த 12 வது சபை அமர்வில் நான் "தாருல் அதர் பள்ளிவாயல்" விடயம் தொடர்பில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றினேன். அத்துடன் அப்பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அக்காணொளி அன்றைய தினம் எனக்கு அனுப்பப்படவில்லை
நகரசபை ஊடகப்பிரிவிடம் தொடர்புகொண்டபோது தவிசாளரின் அனுமதி கிடைக்கவில்லையென்றார்கள். ஏனைய ஆளும் கட்சி (SLMC) உறுப்பினர்களின் காணொளிகள் அவர்களுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் பதிவிடும்போது எனது காணொளிகள் மட்டும் தவிசாளரால் அரசியல் ரீதியாக தடுக்கப்படுவது எனது அடிப்படை உரிமை மீரலாகும். காத்தான்குடி தவிசாளர் SHM அஸ்பர் JPயின் கீழ்த்தரமான இந்த வங்குரோத்து நிலையை வன்மையாக கண்டிக்கிறேன்.
அத்துடன் மறுக்கப்படும் காணொளி விடயத்தை நகரசபை செயலாளர்,
மற்றும் மாவட்ட உள்ளூராச்சி உதவி ஆணையாளர்களின் கவனத்திற்கு எழுத்து மூலம் அறிவித்தேன்.
மேலும் சில நடவடிக்கையை முன்னெடுத்தும் வருகிறேன்.
இந்த விடயங்களை கேட்டறிந்த நல்லாட்சிக்கான முன்னணியின் பிரதித் தவிசாளர் எம்.எம் அப்துர் ரஹ்மான் சேர் காத்தான்குடி நகரசபையின் இவ்வாரான நடவடிக்கை தொடர்பாக தானே கவனம் செலுத்துவதாகவும் இது தொடர்பில் கட்சி சார்பாக பல சந்திப்புக்களை முன்னெடுப்பதாகவும், சபை அமர்வுகளின்போது ஊடகவியலாளர்களை கலந்து கொள்ள வைப்பது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியழித்தார்.
எனது உறுப்புரிமையை இராஜினாமா செய்யவும் தயார்…?
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சட்டம் அனைவருக்கு சமமென சொல்லும் நாட்டில் காத்தான்குடி நகரசபை தவிசாளருக்கு மட்டும் தனி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியுடன் காத்தான்குடி நகரசபை தவிசாளரின் சர்வதிகார அடக்கு முறையை அதிகாரிகள் தொடர்ந்து அனுமதிப்பதுமாக இருந்தால் ? காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களின் அடிப்படை உரிமை பாதுகாக்கும் நோக்கில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அதிமேகு ஜனாதிபதி Anura Kumara Dissanayake. அவர்களின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு செல்லும் முகமாக எனது பதவி இராஜினாமாதான் தீர்வுயெனில் அதை முன்னெடுக்கும் தயாராவே உள்ளேன்.
ஊடகவியலாளர்களுக்கான ஒரு வேண்டுகோள்!
காத்தான்குடியில் உள்ளூர் ஊடகவியலாளர்கள், மற்றும் இலங்கையில் உள்ள எந்தவொரு ஊடகவியலாளரும் இப்பதிவு தொடர்பில் மேலதிக விடயங்களை அறிய விரும்பினால் தங்கள் ஊடகம் பக்கசார்பற்றது, அடக்கு முறைக்கு எதிரான மக்கள் குரலென உங்கள் ஊடகம் இருந்தால் இந்த விடயம் தொடர்பில் எந்வொரு கேள்விக்கும் ஆதாரத்துடன் பதில் வழங்க தயாராகவே உள்ளேன்.
ஏ.எம்.எம் பர்சாத்
நகரசபை உறுப்பினர் (NFGG)
காத்தான்குடி,
காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அதிகார துஷ்பிரயோகம், உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகள் பரிக்கப்படுவது தொடர்பில் NFGG இனால் சட்ட நடவடிக்கைகள் ஆரப்பிக்கப்பட்டுள்ளது. நகரசபை உறுப்பினர் பர்சாத் தெரிவிப்பு.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 01, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 01, 2026
Rating:


கருத்துகள் இல்லை: