සිංහල පරිවර්තනය සමග)இனவாதப் பிரச்சாரங்களை உடைத்தெறிந்த தேசிய நீர்கொழும்பு மீலாதுன் நபி விழா.
සිංහල පරිවර්තනය සමග)இனவாதப் பிரச்சாரங்களை உடைத்தெறிந்த தேசிய நீர்கொழும்பு மீலாதுன் நபி விழா.
மதவாத மற்றும் இனவாத அரசியலைத் தாண்டி, அனைத்து சமூகங்களையும் சமத்துவத்துடனும் மரியாதையுடனும் நடத்தும் புதிய, தேசிய நல்லிணக்க அரசியல் கலாச்சாரத்தை உலகிற்கு காட்டிய நிகழ்வாக இது அமைந்தது.
தேர்தல் வெற்றிகளுக்காகச் சிறுபான்மை சமூகத்தைப் பிரித்தாளும் தந்திரங்களைக் கையாண்ட பாரம்பரிய முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கூற்றுகளை மக்கள் தற்போது நிராகரிக்கத் தொடங்கியுள்ளனர்.
சுயலாப அரசியலுக்கு அப்பால், நாட்டின் பொருளாதார மீட்சி, சட்டம் ஒழுங்கு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட முதிர்ச்சியான ஒரு புதிய ஜனநாயகப் பாதையை இலங்கை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி சக்தியானது ஆட்சியை கைப்பற்றுமானால் இந்த நாட்டில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியாது, விபச்சாரமும், ஓரின சேர்க்கையும் ஹலாலாக்கப்பட்டு முஸ்லிம்கள் வாழுகின்ற பிரதேசங்களில் கலாச்சாரம் சீரளிக்கப்படும் என்ற பொய்பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள்.
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் மேடைகளில் முஸ்லிம் பெண்களின் ஆடை சுதந்திரம் மற்றும் தனித்துவ உரிமைகள் தொடர்பான விவகாரங்கள் மிகத் தீவிரமாக அரசியலாக்கப்பட்டு வந்தது.
குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அரசியல் தலைமைகள், இந்த உணர்வு பூர்வமான விவகாரத்தை பயன்படுத்தி மக்கள் மத்தியில் மத உணர்ச்சிகளைத் தூண்டுவதாகவும், தங்களது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக சமூகத்தை பிரித்தாளும் அருவருக்கத்தக்க அரசியல் ஈடுபடுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அவை எல்லாவற்றுக்கும் தக்க பதிலடியாக, 2026 ஆம் ஆண்டிற்கான 42 ஆவது தேசிய மீலாதுன் நபி விழா கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் "சகவாழ்வு, சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை" (Coexistence, Brotherhood, and Unity) என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் அரச விழாவாக நடத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளமை உள்நாட்டு முஸ்லிம்களின் உள்ளங்களை மட்டுமல்லாது சர்வாதேச முஸ்லிம் நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள விடயமாக மாறியுள்ளது.
இவ்வாறான உணர்ச்சிவசப்பட்ட மற்றும் மதவாத ரீதியிலான கருத்துக்கள், பல்லின சமூகங்கள் வாழும் இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அருவருக்கத்தக்க அரசியல் உத்தி என்பதில் முஸ்லிம் சமூகமானது ஜனாதிபதி தலைமையிலானதேசிய மக்கள்சக்தி அரசாங்கத்தின் கீழ் தெளிவடைந்து வருகின்றமை வெளிப்படையாகியுள்ளது.
அத்தோடு, நாட்டின் சட்ட ஒழுங்கு மற்றும் கலாச்சார விழுமியங்களை மீறும் வகையில் NPP அரசாங்கமானது எந்தவொரு விடயத்திலும் செயல்படவில்லை என்பதால், கடந்த தேர்தல் காலத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் முன்வைத்த கருத்துக்கள் எல்லாம் மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கம் கொண்டவை என்பதை தேசிய மீலாத்துன் நபி போன்ற நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன.
அமோக வரவேற்புக்கு மத்தியில் 42வது மீலாத்துன் நபி நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, நபிகள் நாயகம் அவர்களின் போதனையான 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்பதை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் கடந்த காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டது என்பதையும் வலியுறுத்தினார்.
தேசிய ஒருமைப்பாட்டிற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, மீண்டும் எந்த வித்திலும் இனவாதத்திற்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும், சர்வதேச ரீதியில் கௌரவத்திற்கும் அங்கீகாரத்திற்கும் பாத்திரமான ஒரு நாடாக இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்தினால் முடிந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாகவும் பொதுமக்களுக்குச் சட்டத்தின் மீதான நம்பிக்கையை உறுதி படுத்துவதும், நீதியை நிலை நாட்டுவதுடன், அதனை வினைத்திறன்மிக்கதாக மாற்றுவதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் தெரிவித்தார்.
அந்த வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) தரப்பினர் நிலையான கொள்கைவாதிகளாக அனைத்து மதத்தினதும் கலாச்சார உரிமைகளையும், சமத்துவத்தையும் பாதுகாப்பதாகத் வரலாறு நெடுகிலும் தொடர்ந்து வலியுறுத்திய சந்தர்பங்கள் எல்லாம் தற்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வெற்றிகளுக்குப் பின்னரும், அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய ஒரு தேசிய நல்லிணக்க ஆட்சியைக் கொண்டு நடத்தும் பொறுப்புடனே NPP அரசாங்கம் மிகவும் பக்குவமாக செயற்திட்டங்களை முன்னோக்கி நகர்த்தி வருகின்றது என்பது ஜனாதிபதியின் மீலாத்துன் நபி நிகழ்வின் உரையிலிருந்து தெளிவாகியுள்ளது.
தேசிய நல்லிணக்கத்திற்கான புதிய அணுகுமுறை என்பது சிறுபான்மை மக்களை வெறும் வாக்கு வங்கியாகப் பார்க்காமல், நாட்டின் அனைத்து சமூகங்களையும் சமத்துவத்துடனும் மரியாதையுடனும் நடத்தும் புதிய அரசியல் கலாசாரத்தின் தொடக்கமாக பார்க்கப்பட வேண்டும்.
இனவாத அல்லது மதவாத ரீதியான கருத்துகளால் மக்களைப் பிரித்து அரசியல் செய்த தனித்துவ முஸ்லிம் தலைமைகளின் பிடியிலிருந்து மக்கள் தூரமாகி வருவதுடன், தேசிய ஒருமைப்பாட்டை நோக்கி முஸ்லிம் மக்கள் நகரத் தொடங்கியுள்ளனர் என்ற செய்தியை நீர் கொழும்பு தேசிய மீலாத்துன் நபி நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளதுடன், பாரம்பரிய மற்றும் தனித்துவ முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் தெளிவுபடுத்தி உள்ளது.
இடதுசாரி கொள்கை மற்றும் கலாச்சார அரசியல் சித்தார்ந்தத்தில் ஈர்க்கப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசா நாயக்க ஒரு சிறுபான்மை சமூகத்தின் மத மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு, அதன் கருப்பொருளாக "சகவாழ்வை, சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை" முன்வைத்திருப்பதானது சமூகங்களுக்கு இடையிலான சந்தேகங்களையும், பயத்தையும் போக்க வழி வகுத்துள்ளது.
அதனால், அரசியலுக்காக மதவாத கருத்துக்களை ஆயுதமாக பயன்படுத்த நினைக்கும் அல்லது பிரித்தாளும் தந்திரங்களை கச்சிதமாக மக்கள் மயப்படுத்திய முஸ்லிம் தலைமைகளை மெளனிக்கச் செய்துள்ள வரலாற்று நாளாகவும் அரசியல் அவதானிகளால் பார்க்கப்படுகின்றது.
தற்போதைய புதிய அரசியல் கலாச்சாரத்தில், கடந்த கால அனுபவங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி போன்ற அழியா வடுக்களுக்கு பின்னர் வெறுப்புப் பேச்சுகளையும், இனவாத அரசியலை முன்னிறுத்தும் தலைவர்களையும் மக்கள் பகிரங்கமாகவே நிராகரிக்கத் தொடங்கியுள்ளனர்.
பேரினவாத மற்றும் குறுகிய இன அடையாள அரசியலுக்குப் பதிலாக, ஊழல் எதிர்ப்பு, பொருளாதார மீட்சி மற்றும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய பொதுவான தேசிய அரசியல் முன்னெடுப்புகளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளதுடன், தற்கால இளைஞர்கள் சமூக வலைத்தளங்கலூடாக உண்மை நிலையினை கண்டறியும் புதிய சமூகமாக உருவாகவும் தொடங்கியுள்ளார்கள்.
மேலும், மேடைகளில் பேசப்படும் உணர்ச்சிப்பூர்வமான அல்லது இன,மத முரண்பாடான பேச்சுகள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டுச் சமூக வலைத்தளங்களில் கேள்விக்கும் உள்ளாக்கப்படுவதால், பழைய பாணியிலான பிரச்சாரங்களை மேற்கொள்ள சந்தர்ப்பாவாத மற்றும் தனித்துவ அரசியல் தலைவர்கள் தயக்கம் காட்ட தொடங்கியுள்ளார்கள்.
இன,மத அடிப்படையிலான மேடைப் பேச்சுகள் தேர்தல் காலத்தில் தற்காலிக வாக்குகளைப் பெற்றுத் தந்தாலும், அது நீண்டகால ரீதியில் சமூகப் பிரிவினையையும் நாட்டின் பாதுகாப்பற்ற தன்மையையுமே அதிகரிக்கும் என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள். அத்தோடு, சுயலாபத்துக்காக சிறுபான்மை சமூகத்தை அடகு வைக்கும் அரசியல் தலைவர்களையும் மக்கள் ஓரங்கட்ட தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் இலங்கை போன்ற பல்லின, பல்சமய சமூகத்தில், வாக்கு வங்கிக்காக சிறுபான்மை அல்லது பெரும்பான்மை மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் பிரித்தாளும் அரசியலை மக்கள் தங்களின் பகுத்தறிவால் நிராகரிக்க வேண்டும் என்ற புதிய அரசியல் கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.
அதனால், தேர்தல் காலத்தில் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள அரசியல் இலாபங்களை மக்கள் புரிந்து கொள்ள தொடங்கியுள்ளமை ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள இன்னுமொரு மக்கள் அங்கீகாரமாகவே சிரேஷ்ட்ட அரசியல்வாதிகளால் பார்க்கப்படுகின்றது.
ஆகவே, சாதி, மதம் மற்றும் இனத்தைக் காட்டி வாக்குகளைப் பெறும் முயற்சிகளுக்கு மக்கள் இனியும் இடம் கொடுக்க மாட்டார்கள். உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள் தவிர்க்கப்படும். அதனால், நாட்டின் நீண்டகால நலன் மற்றும் தங்களின் அன்றாட வாழ்வாதார முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை முன்னெடுக்கும் அரசியல் கலாச்சாரத்தை மக்கள் விடுதலை முன்னணி (JVP) உருவாக்கியுள்ளது என்பதே உண்மை.
அஹமட் இர்ஷாட்
28-08-2026.
ජාතිවාදී ව්යාපාර බිඳ දැමූ ජාතික මීගමුව මිලාදුන් නබි උත්සවය!
එය නිකායික හා වාර්ගික දේශපාලනයෙන් ඔබ්බට ගොස් සියලු ජන කොටස්වලට සමානාත්මතාවයෙන් හා ගෞරවයෙන් සලකන නව ජාතික සංහිඳියා දේශපාලන සංස්කෘතියක් ලොවට පෙන්වූ සිදුවීමකි.
මැතිවරණ වාසි තකා සුළුතර ප්රජාව බෙදීමේ උපක්රම අනුගමනය කළ සම්ප්රදායික මුස්ලිම් දේශපාලන නායකයන්ගේ ප්රකාශ ජනතාව දැන් ප්රතික්ෂේප කිරීමට පටන් ගෙන තිබේ.
ආත්මාර්ථකාමී දේශපාලනයෙන් ඔබ්බට, ශ්රී ලංකාවේ ඡන්දදායකයින් රටේ ආර්ථික ප්රකෘතිය, නීතිය හා සාමය සහ ජාතික සමගිය මත පදනම් වූ නව, පරිණත ප්රජාතන්ත්රවාදී මාවතක් තෝරා ගැනීමට පටන් ගෙන තිබේ.
+++++++++++++++
අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමා ප්රමුඛ ජනතා විමුක්ති පෙරමුණ සහ ජාතික ජනතා ශක්ති පක්ෂය ආණ්ඩුව ගත්තොත් මුස්ලිම් ජනතාවට මේ රටේ සාමයෙන් ජීවත් වෙන්න බැරි වෙනවා, ගණිකා වෘත්තිය, සමලිංගිකත්වcය නීතිගත කරලා මුස්ලිම් ජනතාව ජීවත් වන ප්රදේශවල සංස්කෘතිය දියුණු කරනවා කියලා බොරු ප්රචාර ගෙන ගියා.
මුස්ලිම් කාන්තාවන්ගේ ඇඳුම් ඇඳීමේ නිදහස සහ පුද්ගල අයිතිවාසිකම් සම්බන්ධ ගැටලු ජනාධිපතිවරණ සහ පාර්ලිමේන්තු මැතිවරණ වේදිකාවල ඉතා තීව්ර ලෙස දේශපාලනීකරණය විය.
විශේෂයෙන්ම මුස්ලිම් ප්රජාව නියෝජනය කරන ඇතැම් දේශපාලන නායකයින් මෙම සංවේදී කාරණය යොදා ගනිමින් ජනතාව අතර ආගමික හැඟීම් අවුස්සමින් තම පටු දේශපාලන වාසි තකා සමාජය භේද කරන පිළිකුල් සහගත දේශපාලනයේ නිරත වන බවට විවේචන ඉදිරිපත් විය.
ඒ සියල්ලටම ප්රතිචාර වශයෙන් "සහජීවනය, සහෝදරත්වය, සමගිය" යන තේමාව යටතේ ගම්පහ දිස්ත්රික්කයේ මීගමුව අල්-හිලාල් මධ්ය මහා විද්යාලයේ 2026 වර්ෂයේ 42 වැනි ජාතික මිලාදුන් නබි උත්සවය ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගේ ප්රධානත්වයෙන් රාජකීය උත්සවයක් ලෙස පවත්වා දේශීය මුස්ලීම් රටවල පමණක් නොව ජාත්යන්තර මුස්ලිම් ජනතාවගේද අවධානයට ලක්වූ කරුණක් බවට පත්ව ඇත.
බහු වාර්ගික ශ්රී ලංකාවේ ජාතීන් අතර සහජීවනය කඩාකප්පල් කිරීමේ පිළිකුල් සහගත දේශපාලන උපාය මාර්ගයක් මෙවැනි හැඟීම්බර හා ආගමික අදහස් බව ජනාධිපතිවරයා ප්රමුඛ ජාතික ජනබල ආණ්ඩුව යටතේ සිටින මුස්ලිම් ප්රජාව දන්නා බව පැහැදිලිය.
එමෙන්ම රටේ නීතිය හා සාමය හා සංස්කෘතික වටිනාකම් කඩ කිරීමට NPP රජය කිසිඳු ආකාරයකින් ක්රියා කර නොමැති බැවින් පසුගිය මැතිවරණ සමයේ මුස්ලිම් දේශපාලන නායකයින් විසින් ඉදිරිපත් කරන ලද සියලු අදහස් ජනතාව නොමඟ යැවීමේ අරමුණින් කළ ඒවා බව ජාතික මිලතුන් නබි වැනි සිදුවීම්වලින් සනාථ වේ.
42 වැනි මිලාතුන් නබි උත්සවය උත්කර්ෂවත් පිළිගැනීමේ උත්සවයක් මධ්යයේ අමතමින් ජනාධිපතිවරයා අවධාරණය කළේ ‘නීතිය ඉදිරියේ සියල්ලෝම සමානය’ යන නබිතුමාණන්ගේ ඉගැන්වීම තහවුරු කිරීමට රජය පසුගිය කාලය තුළ කැපවී කටයුතු කළ බවයි.
ජාතික සමගිය වෙනුවෙන් රජය කැපවී සිටින අතර කිසිදු ආකාරයක ජාතිවාදයකට ඉඩක් නොතබන බවත් ජාත්යන්තර ගෞරවයට හා පිළිගැනීමට ලක්විය යුතු රටක් ලෙස ශ්රී ලංකාව යළි ගොඩනැගීමට රජය සමත්ව ඇති බවත් ඔහු පෙන්වා දුන්නේය.
නව ආණ්ඩුක්රම ව්යවස්ථා සංශෝධනය හරහා නීතිය කෙරෙහි මහජන විශ්වාසය තහවුරු කිරීම සහ යුක්තිය ආරක්ෂා කර එය ක්රියාත්මක කිරීම රජයේ ඉලක්කය බව ඔහු පැවසීය.
ඒ ආකාරයට අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමා සහ ජාතික ජන බලවේගය ස්ථාවර ප්රතිපත්ති සම්පාදකයන් ලෙස සියලු ආගම්වල සංස්කෘතික අයිතීන් හා සමානාත්මතාවය ආරක්ෂා කරන ලෙස දිගින් දිගටම අවධාරණය කළ අවස්ථා ඉතිහාසය පුරාවටම ඔප්පු වී හමාරය.
මැතිවරණ ජයග්රහණවලින් පසු සියලු ජනවාර්ගික ජනතාව ඇතුළත් ජාතික සහජීවන පාලනයක් ගෙන යාමේ වගකීමෙන් NPP රජය ඉතා පරිණතව ඉදිරියට යන බව මිලාතුන් නබි උත්සවයේ දී ජනාධිපතිවරයා කළ කතාවෙන් පැහැදිලි වේ.
ජාතික සංහිඳියාව පිළිබඳ නව ප්රවේශයක් සුළු ජාතීන් හුදු ඡන්ද බැංකු ලෙස නොදැක රටේ සියලු ජන කොටස්වලට සමානාත්මතාවයෙන් හා ගෞරවයෙන් සලකන නව දේශපාලන සංස්කෘතියක ආරම්භය ලෙස සැලකිය යුතුය.
නීර් කොළඹ ජාතික මිලතුන් නබි උත්සවය මගින් මුස්ලිම් ජනතාව ජාතික සමගිය කරා ගමන් කිරීමට පටන් ගෙන ඇති බවට වූ පණිවිඩය තහවුරු කර ඇති අතර සාම්ප්රදායික සහ පුද්ගලවාදී මුස්ලිම් දේශපාලනඥයන් ද පැහැදිලි කර ඇත.
වාමාංශික ප්රතිපත්ති සහ සංස්කෘතික දේශපාලන මතවාදයෙන් ආභාෂය ලැබූ ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා සුළුතර ප්රජාවක ආගමික හා සංස්කෘතික වැදගත්කමකින් යුත් ජාතික උත්සවයකට සහභාගි වෙමින් "සහජීවනය, සහෝදරත්වය සහ එකමුතුකම" තේමාව ලෙස යෝජනා කරමින් ජාතීන් අතර සැක බිය දුරු කිරීමට මග පෑදී ඇත.
එබැවින් ආගමික අදහස් අවියක් ලෙස හෝ බෙදුම්වාදී උපක්රම ලෙස භාවිත කරන බවට ජනතාවට සහමුලින්ම ඒත්තු ගැන්වූ මුස්ලිම් නායකත්වයන් නිහඬ කළ ඓතිහාසික දිනයක් ලෙස ද දේශපාලන නිරීක්ෂකයින් දකියි.
වර්තමාන නව දේශපාලන සංස්කෘතිය තුළ, අතීත අත්දැකීම්, උගත් පාඩම් සහ රටේ ආර්ථික පරිහානියේ නොමැකෙන කැළැල් වලින් පසු වෛරී ප්රකාශ සහ ජාතිවාදී දේශපාලනයට උඩගෙඩි දෙන නායකයින් ජනතාව ප්රසිද්ධියේ ප්රතික්ෂේප කිරීමට පටන් ගෙන තිබේ.
ස්වෝත්තමවාදී සහ පටු වාර්ගික අනන්යතා දේශපාලනය වෙනුවට දූෂණ විරෝධී, ආර්ථික ප්රකෘතිය සහ සියලු ජන කොටස් සම්බන්ධ කර ගන්නා පොදු ජාතික දේශපාලන මුලපිරීම් සඳහා ජනතාව අතර වැඩි සහයෝගයක් ලැබී ඇති අතර, අද තරුණ පරපුර සමාජ මාධ්ය හරහා සත්යය සොයා ගන්නා නව ප්රජාවක් බවට වර්ධනය වීමට පටන් ගෙන තිබේ.
එසේම, වේදිකාවල හැඟීම්බර හෝ වාර්ගික භේදයක් ඇති කරන කතා සමාජ මාධ්ය තුළ ක්ෂණිකව පටිගත වී ප්රශ්න කිරීම නිසා, අවස්ථාවාදී සහ පුද්ගලවාදී දේශපාලන නායකයන් පැරණි ක්රමයට ප්රචාරක කටයුතු කිරීමට මැලි වී ඇත.
මැතිවරණ සමයේදී වාර්ගික හා ආගමික වේදිකා කතා තාවකාලික ඡන්ද ලබා ගත හැකි වුවද, එය දිගුකාලීනව රට තුළ සමාජ බෙදීම සහ අනාරක්ෂිතභාවය වැඩි කිරීමට හේතු වන බව ජනතාව තේරුම් ගැනීමට පටන් ගෙන තිබේ. ඊට අමතරව සුළු ජාතික ප්රජාව ප්රාණ ඇපයට ගන්නා දේශපාලන නායකයන් තමන්ගේ වාසිය තකා පැත්තකට දමන්නට පටන්ගෙන ඇත.
ඒ ආකාරයට ශ්රී ලංකාව වැනි බහු වාර්ගික බහු ආගමික සමාජයක සුළුතරය හෝ බහුතරය ඡන්ද බැංකුව ඉලක්ක කර ගනිමින් කරන බෙදුම්වාදී දේශපාලනය ජනතාව විසින් ප්රතික්ෂේප කළ යුතු බවට නව දේශපාලන සංස්කෘතියක් තරුණයන් අතර ගොඩනැගී තිබේ.
ඒ නිසා මැතිවරණ සමයේ කරන චෝදනා පිටුපස ඇති දේශපාලන වාසි ජනතාව තේරුම් ගැනීමට පටන් ගෙන තිබීම ජනාධිපතිවරයා ප්රමුඛ ජාතික ජන බලයට ලැබුණු තවත් ජනප්රිය පිළිගැනීමක් ලෙස හොඳම දේශපාලඥයන් දකිනවා.
ඒ නිසා කුලය, ආගම්, වාර්ගික මත පදනම්ව ඡන්ද දිනා ගැනීමේ උත්සාහයන්ට ජනතාව තවදුරටත් ඉඩක් නොදෙනු ඇත. චිත්තවේගීය තීරණ වළක්වා ඇත. එහෙයින් රටේ දීර්ඝ කාලීන සුබසිද්ධිය සහ තම දෛනික ජීවිතයේ ප්රගමනය පදනම් කර ගනිමින් ඡන්දදායකයින් තම ප්රජාතන්ත්රවාදී යුතුකමට මුල්තැන දෙන දේශපාලන සංස්කෘතියක් ජනතා විමුක්ති පෙරමුණ විසින් නිර්මාණය කර ඇති බව සත්යයකි.
අහමඩ් ඉර්ෂාඩ්.
තිකරන් සඟරාව සඳහා,
28-08-2026.
සිංහල පරිවර්තනය සමග)இனவாதப் பிரச்சாரங்களை உடைத்தெறிந்த தேசிய நீர்கொழும்பு மீலாதுன் நபி விழா.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 28, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 28, 2026
Rating:


கருத்துகள் இல்லை: