மலையகம் எங்கள் இதயம்: அதனை பாதுகாக்க வேண்டும்: முழு அதிகாரங்களுடன் அதிகார சபை உருவாக்கப்படும்
பண்டாரவளையில் ‘நவோதயா புரம்’ வீடமைப்புத் திட்டம் திறப்பு விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு ,
“மத்திய மலைநாடு எங்களின் இதயம், அதன் பாதுகாப்பென்பது எமது நாட்டின் எதிர்காலம். இதற்கான தலையீடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
இதன் நிமித்தம் மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபையை உருவாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இதற்குரிய சட்டமூலம் உருவாக்கப்படுகின்றது.
இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் இச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்;ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். அந்த அதிகார சபைக்கு முழு அதிகாரமும் வழங்கப்படும்.
ஏற்பட்ட அழிவுகளில் இருந்து மீள்வதற்கு எமக்கு காலம் எடுக்கும். ஆனால் எதிர்காலத்தில் அழிவுகள் ஏற்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். அதனை நாம் செய்வோம்.
மலையக மக்களின் உரிமைகளைப் பாதுகாப்போம். இதுவிடயத்தில் இந்தியாவும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. இதற்காக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
உங்களுக்கு சிற்பான வாழ்க்கையையும், உங்களின் பிள்ளைகளுக்கு சுபீட்சமான எதிர்காலத்தையும் உருவாக்கி கொடுப்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும். சிறப்பானதொரு நாட்டைக் கட்டியெழுப்பு உங்களின் ஆதரவு, தலையீடு தேவை.” – என்றார் ஜனாதிபதி.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 28, 2026
Rating:

கருத்துகள் இல்லை: