Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி மண்ணின் கல்வி சாதனையாளர்கள் 1978 Fun boys குழுமத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.


1978 Fun boys குழுமத்தினால் தங்களது வகுப்பறை தோழர்களின் பல்வேறு சாதனைகளை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் நேற்று கட்டுபவன் வில {கட்டுவன் புல்} கிராமத்தில் பவுஸ் ஹாஜி மண்டபத்தில் நடைபெற்றது.


குழுமத்தின் தலைவரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ எல் எம் என் முபின் தலைமையில் நடைபெற்ற மேற்படி பாராட்டு வைபவத்தில் பின்வருவோர் பாராட்டப்பட்டனர்.


நணபர் வட்டத்தின் சிறந்த கல்வியாளராக ஆஸ்திரேலியா RMIT பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் என்ஜினியர் K.L.M.பாறூக் Bsc(Eng) hons.(S.L)MSc
(Space Studies) France,
M.Phill (U K)PhD (Australia அவர்களும்,


குழுமத்தின் சிறந்த இஸ்லாமிய அறிஞராக அஷ்ஷெய்க் SAK அப்துர் ராசிக் நழீமி BA. பஃட்
( KSU ) அவர்களும்


சிறந்த தொழில் வாண்மையாளராக அல்ஹாஜ் S. L. ஆஸிப் CEO Al Akeel Trading company அவர்களும்


சிறந்த தொழில் முயற்சியண்மையாளராக அல்ஹாஜ் P.M.அப்துல் மௌஜூத் (CEO) your hubs Langa Private Limited அவர்களும்


சிறந்த சுயகற்றல் மேதையாக M.LM.சுபைர் 
ஆகியோர்கள்
நண்பர்களினால் மாலையிட்டு பொன்னாடை போர்த்தி, நினைவுப் பேழை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நினைவுப் பகிர்வு உட்பட இதர நிகழ்வுடன் 1978 Fun boys குழுமத்தின் ஏற்பாடுகள் யாவும் சிறப்பாக இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது














காத்தான்குடி மண்ணின் கல்வி சாதனையாளர்கள் 1978 Fun boys குழுமத்தினால் கௌரவிக்கப்பட்டனர். Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 15, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.