Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ரன்விமன' வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள் கந்தசாமி பிரபு MP தலைமையில் அதிகாரிகள் பங்கேற்புடன் கையளிப்பு


மட்டக்களப்பில் 'ரன்விமன' வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள் கந்தசாமி பிரபு MP தலைமையில் அதிகாரிகள் பங்கேற்புடன் கையளிப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவின் திருப்பெருந்துறை, கல்லடி பகுதி பயனாளிகளிடம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த வீடுகளை  உத்தியோகபூர்வமாக கையளிப்பு செய்தார்கள் 
.

மண்முனை வடக்கு பிரதேச  செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி ஜெ.திருச்செல்வம் சிறப்பு அதிதியாகவும் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், தலைமையக முகாமைமையாளர், சமுர்த்தி முகாமையாளர்கள்,  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்


குறித்த பயனாளிக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தலா ரூபாய் 10,000.00  பெறுமதியான உலர் உணவுப் பொதிகளும் இந்நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டன.





ரன்விமன' வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள் கந்தசாமி பிரபு MP தலைமையில் அதிகாரிகள் பங்கேற்புடன் கையளிப்பு Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 29, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.