ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் இடம் பெற்ற கிராமிய ஒற்றுமையின் உயிர் நாடி "அத்தம" வேலைத்திட்டத்தின் இரண்டான் கட்டம்.
சமூகத்தில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி, உழைப்பால் அனைவரும் சமம் என்ற சமத்துவச் சிந்தனையை உருவாக்குவதே 'அத்தம' வின் இலக்காகும்.
"க்ளீன் ஸ்ரீ லங்கா’ என்பது அரசாங்கத்தின் கொள்கைத் திட்டம் என்றால், ‘அத்தம’ என்பது அத்திட்டத்தை மக்களின் இதயங்களுக்குக் கொண்டு சேர்த்து வெற்றியாக்குவதற்கான சமூகக் தத்துவமாகும்.
அந்த வகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓட்டமாவடி வடக்கு B/2 பிரதேசத்தில், அமீர் அலி விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் உள்ள புகையிரத பாதையை அண்டிய இடத்தினை சுத்தம் செய்யும் இரண்டாம் கட்ட வேலைத்திட்டம் இன்று 19-09-2026 சனிக்கிழமை காலை எட்டு மணிக்கு ஆரம்பமானது.
ஓட்டமாவடி வடக்கு B/2 பிரஜா சக்தி தவிசாளர் அஹமட் இர்ஷாட் தலையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர் எச்.எம்.எம்.பாரூக் சிறப்பு அதீதியாக கலந்து கொண்டதுடன், கிளீன் சிறிலங்கா அமைப்பாளர்ரபுர்க்கான் மெளலவி, பிரஜா சக்தி குழுமத்தின் செயலாளர் றிசானா, பிரதேச சபை உறுப்பினர் மாஜிதா,சமூர்த்தி உத்தியோகத்தர்கள், அதன் சங்க உறுப்பினர்கள் பிரஜாசக்தி குழுமத்தினர், கிராம அபிவிருத்தி சங்கம், பெண்கள் கிராம அபிவிருத்தி சங்கம்,பொதுச்சுகாதார பரிசோதகர், இராணுவ அதிகாரி டினூஸ்ச, இளைஞர் கழக உறுப்பினர்கள், படகு திருத்துனர் சங்கம், என பலரும் கலந்து கொண்டார்கள்.
அத்தோடு உதவி பிரதேச செயலாளர் எம்எச்எம்.பாரூக்கினால் தென்னை மரக்கன்று ஒன்றும் படகுதிருத்தும் வளாகத்தில் இன்றைய ஞாபகர்த்தமாக நடப்பட்டது.
மேலும், இவ்வருடம் (2026) ஆகஸ்ட் 08 முதல் ஒவ்வொரு மாதத்தின் இறுதி வாரச் சனிக்கிழமையன்று 4 மணிநேரம் (காலை 8:00 முதல் நண்பகல் 12:00 வரை) தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற செயற்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இதனை மேலும் வலுப்படுத்தும் முகமாக இலங்கையில் பல்லின சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு நாடு முழுவதும் ‘சகோதரத்துவ செயற்திட்டம்’ முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில், இலங்கையின் பாரம்பரிய சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் "அத்தம" என்பது இலாப நோக்கற்ற, கூட்டு உழைப்புப் பரிமாற்ற முறையைக் குறிக்கிறது. கிராமப்புறங்களில், குறிப்பாக விவசாய சமூகங்களிடையே நிலவும் உன்னத வழக்கத்தின் படி பணப் பரிமாற்றம் இல்லாமல் ஒருவருக்கொருவர் உடல் உழைப்பைத் தங்களுக்குள் சமமாகப் பகிர்ந்துகொள்வதே அத்தம வேலைத்திட்டத்தின் முக்கிமான கருப்பொளாக பார்க்கப்படுகின்றது.
அஹமட் இர்ஷாட்.
ඔඩ්ඩමාවඩි බී/2 හි පිහිටි ග්රාමීය එකමුතුවේ ජීවන රේඛාව "අත්තම" ව්යාපෘතියේ දෙවන අදියරයි.
දුප්පත් පොහොසත් භේදයකින් තොරව රැකියාවෙන් සියල්ලෝම සමාන බවට සමානාත්මතා චින්තනයක් සමාජය තුළ ඇති කිරීම ‘ආතම’ හි අරමුණයි.
“පිරිසිදු ශ්රී ලංකාව රජයේ ප්රතිපත්ති සැලැස්ම නම්, එම සැලැස්ම ජනතාවගේ හදවතට ගෙන ගොස් එය සාර්ථක කර ගැනීමේ සමාජ දර්ශනය ‘අත්තම’යි.
මේ ආකාරයට කෝරළයිපත්තු බටහිර ඔඩ්ෆාමාවාඩි ප්රාදේශීය ලේකම් කොට්ඨාශයට අයත් ඔඩ්ෆාමාවාඩි උතුර බී/2 ප්රදේශයේ අමීර් අලි ක්රීඩාංගනය අසල දුම්රිය මාර්ගය පිරිසිදු කිරීමේ දෙවන අදියර අද 19-09-2026 සෙනසුරාදා උදෑසන අටට ආරම්භ කර ඇත.
Oddamavadi North B/2 Braja Shakti ප්රාදේශීය අධ්යක්ෂ අහමඩ් ඉර්ෂාඩ් මෙම අවස්ථාවට සහභාගී වූ අතර ඔඩ්ඩමාවඩි ප්රාදේශීය ලේකම් කාර්යාලයේ සහකාර ලේකම් එච්.එම්.එම්.ෆාරුක් විශේෂ ආරාධිත අමුත්තා ලෙස ක්ලීන් ශ්රී ලංකා සංවිධායක රබුර්කාන් මෙලලවි, ප්රජා ශක්ති සමූහ ලේකම් රිසානා, ප්රාදේශීය සභා සංවර්ධන සංගමයේ සාමාජිකයින් වන ප්රාජා ශක්ති, සමූර්ති සමූහ සාමාජිකයින් වන ප්රාජා ශක්ති, සමූර්ති සමූහ සාමාජිකයින් කාන්තා ගම් සංවර්ධන සංගමය, මහජන සෞඛ්ය පරීක්ෂක, යුධ හමුදා නිලධාරි දිනුස්ස, යෞවන සමාජ සාමාජිකයින්, බෝට්ටු අළුත්වැඩියා කරන්නන්ගේ සංගමය, ඇතුළු පිරිසක් ද එක්ව සිටියහ.
එමෙන්ම අද දිනය සිහිගන්වමින් සහකාර ප්රාදේශීය ලේකම් එම්.එච්.එම්.ෆාරුක් මහතාගේ ප්රධානත්වයෙන් බෝට්ටු අලුත්වැඩියා සංකීර්ණයේ පොල් පැළයක් ද රෝපණය කෙරිණි.
එමෙන්ම මෙම වසරේ (2026) අගෝස්තු මස 08 වැනිදා සිට සෑම මසකම අවසන් සෙනසුරාදා පැය 4ක (පෙ.ව. 8.00 සිට මධ්යහ්න 12.00 දක්වා) පිරිසිදු කිරීමේ කටයුතු සිදුකිරීමේ වැඩසටහනක් හඳුන්වා දී ක්රියාත්මක කර ඇත.
එය තවදුරටත් ශක්තිමත් කිරීම සඳහා ශ්රී ලංකාවේ බහු වාර්ගික ප්රජාවන් අතර සමගිය, සාමය සහ සහජීවනය ගොඩනැගීමේ අරමුණින් 'සහෝදරත්ව ව්යාපෘතිය' රට පුරා ක්රියාත්මක විය.
මේ අනුව, ශ්රී ලංකාවේ සම්ප්රදායික සමාජ-ආර්ථික රාමුව තුළ "ආතමා" යන්නෙන් අදහස් කරන්නේ ලාභ නොලබන, සාමූහික ශ්රම හුවමාරු පද්ධතියකි. ග්රාමීය ප්රදේශවල, විශේෂයෙන්ම කෘෂිකාර්මික ප්රජාවන් අතර, මුදල් හුවමාරුවකින් තොරව ශ්රමය සමසේ බෙදා ගැනීම ආත්මා වැඩසටහනේ ප්රධාන තේමාව ලෙස සැලකේ.
අහමඩ් ඉර්ෂාඩ්.
ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் இடம் பெற்ற கிராமிய ஒற்றுமையின் உயிர் நாடி "அத்தம" வேலைத்திட்டத்தின் இரண்டான் கட்டம்.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 19, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 19, 2026
Rating:











கருத்துகள் இல்லை: