கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையை மேம்படுத்த தூதரகப் பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல்
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகப் பிரதிநிதிகளுடனான விசேட வலையமைப்பு இரவு விருந்து மற்றும் கலந்துரையாடல் மட்டக்களப்பு பாசிக்குடா அனந்தயா ரிசோர்ட் அன்ட் ஸ்பா ஹோட்டலில் நேற்று (18) இரவு நடைபெற்றது.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகப் பிரதிநிதிகள் அமைச்சருடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதன்போது கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சி, இயற்கை வளங்கள், கலாசாரப் பாரம்பரியம், சுற்றுலா வாய்ப்புகள் மற்றும் உள்ளூர் உற்பத்திகளை சர்வதேச ரீதியில் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
மேலும், கிழக்கு மாகாணத்தின் தனித்துவமான இயற்கை மற்றும் கலாசார வளங்களை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலப்படுத்துதல், சுற்றுலாத்துறையில் முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் சர்வதேச வலையமைப்புகளைப் பயன்படுத்தி பிராந்திய சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் பாரம்பரியத்தையும் கலாசாரப் பன்முகத்தன்மையையும் எடுத்துக்காட்டும் வகையில் சிறப்பு கலாசார நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றது.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 19, 2026
Rating:

கருத்துகள் இல்லை: