NPP யின் "சிஸ்டம் சேஞ்ச்" எதிர்கட்சிகளையும் மாற்றியமைக்கும் புதிய அரசியல் திசை!
(සිංහල පරිවර්තනය සමග)NPP யின் "சிஸ்டம் சேஞ்ச்" எதிர்கட்சிகளையும் மாற்றியமைக்கும் புதிய அரசியல் திசை!
பாரம்பரிய அரசியல் கூட்டங்களை விட, மக்கள் அரசியல்வாதிகளிடம் சமூக ஊடகங்கள் வாயிலாக நேரடியாகக் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.
போலி வாக்குறுதிகள் மற்றும் தற்காலிக நிவாரணங்கள் மூலம் வாக்குகளைப் பெறும் பழைய உத்தி இனி வேலை செய்யாது என்பதை எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளன.
இரண்டு வருட NPP அரசாட்சியில் மேடைகளில் வெறும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை மட்டும் வழங்கி வாக்குகளைப் பெறும் பழைய அரசியல் கலாசாரத்தை மக்கள் நிராகரிக்கும் மனோநிலைக்கு மாற்றம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வந்த வாக்கு வங்கி அரசியல் மற்றும் மேட்டுக்குடி அரசியல் முறைகள் பலவீனமடைந்து வருவதால், எதிர்க்கட்சித் தலைவர்களும் புதிய தலைமுறை அரசியல் போக்குகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் "சிஸ்டம் சேஞ்ச்" (System Change) அல்லது முறைமை மாற்றம் சார்ந்த செயற்திட்டங்கள், தற்போதைய எதிர்க்கட்சி அரசியல் தலைமைகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களையும் புதிய அரசியல் பாதையை நோக்கி பயணிக்க கட்டாயப்படுத்தியுள்ளது என்பது தற்கால இலங்கை அரசியல் களத்தில் பரவலாக அவதானிக்கப்படும் ஒரு முக்கிய நகர்வாகும்.
"கிளீன் சிறீலங்க" போன்ற நாடளாவிய தூய்மைப்படுத்தல் மற்றும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் களமிறங்கிப் பணியாற்றுவது, சமூகப் பொறுப்புணர்வில் ஏற்பட்டுள்ள ஒரு நேர்மறையான மாற்றத்தைக் காட்டுகிறது.
அரசாங்கத்தின் 'சிஸ்டம் சேஞ்ச்' (System Change) அல்லது கட்டமைப்பு மாற்றக் கொள்கைகள், அரசியல் கலாசாரத்தில் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் அணுகுமுறையில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதற்கு அண்மைக்காலமாக சாதரண மக்களை போல் வீதிக்கிறங்கி சூழலை சுத்தம் செய்யும் எதிர்க்கட்சி தலைவர்களின் செயற்பாடுகள் தெளிவு படுத்துபவைகளாகவும் அமைந்துள்ளது.
"கிளீன் ஸ்ரீலங்கா” (Clean Sri Lanka) மற்றும் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் அரசியல் பாகுபாடுகளைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைத்துள்ளன.
இது சமூகப் பொறுப்புணர்வு, கூட்டுமுயற்சி மற்றும் மக்கள் மையவாத கலாச்சார மாற்றத்திற்கான ஒரு முன்னுதாரணமாக பார்க்கப்படுகின்றது.
எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் வீதிகளுக்குள்ளும், முடுக்குகளுக்குள்ளும் மக்களோடு மக்களாக சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுவதற்கான தாக்கத்தினை NPP அரசாங்கத்தின் "System Change" வேலைத்திட்டம் குறுகிய காலத்திற்குள் ஏற்படுத்தியுள்ளமை அரசாங்கத்துக்கும், தேசியமக்கள் சக்திக்கும் கிடைத்துள்ள வெற்றியாகவே அமைந்துள்ளது.
அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலற்ற நிர்வாக நடைமுறைகள் எதிர்க்கட்சிகளையும் தங்களின் பழைய அரசியல் உத்திகளை மாற்ற கட்டாயப்படுத்தியுள்ளன.
வெறும் விமர்சனங்களுக்கு அப்பால், ஆக்கபூர்வமான மாற்றுத் திட்டங்களை முன்வைக்க வேண்டிய கட்டாயம் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
அரச செலவுகளை குறைத்தல் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற முன்னெடுப்புகள் அரசியல் தளத்தில் ஒரு புதிய ஆரோக்கியமான போட்டியை உருவாக்கியுள்ளன என்றும் கூறலாம்.
குறிப்பிட்ட இரண்டு வருட தேசிய மக்கள் சக்தியினுடைய அரசாட்சியில் மேடைகளில் வெறும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை மட்டும் வழங்கி வாக்குகளைப் பெறும் பழைய அரசியல் கலாசாரத்தை மக்கள் நிராகரிக்கும் மனோநிலைக்கு வந்துள்ளார்கள் என்பதையும் அவதானிக்க முடிகின்றது.
உணர்ச்சிபூர்வமான பேச்சுகளை விடவும் நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் மற்றும் கொள்கைகளை முன்வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு எதிர்க்கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.
தங்களுக்குள் இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அல்லது பழைய முகங்களை மாற்றி, படித்த, இளைய மற்றும் புதிய ஆளுமைகளை முன்னிறுத்த எதிர்க்கட்சிகள் முயல்கின்றன.
உள்வாரி ஜனநாயகம் மற்றும் வெளிப்படைத் தன்மையை பேண வேண்டிய நிலைக்கும் எதிர்க்கட்சிகள் ஆளாகியுள்ளன.
அத்தோடு, அரசாங்கத்தின் திட்டங்களை வெறும் அரசியல் ரீதியாக எதிர்க்காமல், அதைவிடச் சிறந்த மாற்று "சிஸ்டம் சேஞ்ச்" திட்டங்கள் தங்களிடம் உண்டு எனக் காண்பிக்கவும் எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.
மேலும், அரசியல்வாதிகளின் சிறப்புரிமைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற NPP அரசாங்கத்தின் கொள்கை அரசியலில் பொதுமக்கள் மிகத் தெளிவாக இருப்பதால், எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்களது ஆடம்பரப் போக்குகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தங்களின் செயல்பாடுகளுக்கு மக்களிடம் நேரடியாகப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கும் அதிகரித்துள்ளது.
இப்படியான ஒட்டுமொத்த நகர்வானது, இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் ஒரு புதிய போட்டித்தன்மையை உருவாக்கியுள்ளது.
ஆளுங்கட்சி மட்டுமன்றி, எதிர்காலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும் எந்தவொரு எதிர்க்கட்சியும் தீவிரமான "முறைமை மாற்றத்தை" நோக்கி நகர்ந்தால் மட்டுமே அரசியல் ரீதியாக ஏதாவது ஒன்றைக் அடைந்து கொள்ள முடியும் என்ற யதார்த்தத்தை தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் அரசியல் சூழல் உணர்த்தியுள்ளது.
உண்மையான அரசியல் மாற்றம் என்பது அரசாங்கத்திற்கு மட்டும் உரியதல்ல; அது ஒட்டுமொத்த அரசியல் கலாச்சாரம் மற்றும் எதிர்க்கட்சிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இந்த முறைமை மாற்றத்திற்கான நகர்வுகள் பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டும் வருகின்றன.
ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் செயற்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை அவசியமாகிறது.
ஆளுங்கட்சி மட்டுமல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்களின் பழைய அரசியல் முறைகளை மாற்ற வேண்டும் என்ற கருத்து பலமடைந்துள்ளது.
ஊழலை ஒழிப்பதற்கான சட்ட முன்னெடுப்புகள் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வரும் பிரதான அரசாங்கத்தின் இலக்காகவும் மாறியுள்ளது.
அதனால், நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை மட்டும் முன்வைக்காமல், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்க வேண்டிய கட்டாயத்தை NPPயின் புதிய அரசியல் சூழல் உருவாக்கியுள்ளது.
ஆளும் தரப்பு மக்களின் எதிர் பார்ப்புகளுக்கு ஏற்ப வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் போது, எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்களின் பழைய அரசியல் உத்திகளை மாற்றி, தங்களை இன்னும் பொறுப்பு வாய்ந்தவர்களாக காட்ட வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில்,வெறும் கொள்கையற்ற சந்தர்ப்வாத அரசியல் கலாச்சாரத்தால் அல்லது அரசுக்கு எதிரான போலியான விமர்சனங்களையும் தாண்டி, கொள்கை ரீதியான மற்றும் தர்க்கரீதியான விவாதங்களை நோக்கி எதிர்க்கட்சிகள் சற்று சிந்திக்க தொடங்கியுள்ளன.
எனவே, பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வந்த வாக்கு வங்கி அரசியல் மற்றும் மேட்டுக்குடி அரசியல் முறைகள் பலவீனமடைந்து வருவதால், எதிர்க்கட்சித் தலைவர்களும் புதிய தலைமுறை அரசியல் போக்குகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.
அரசாங்கம், எதிர்க்கட்சி, பொதுமக்கள் ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து பயணிக்கும் போதே ஒரு நாட்டின் உண்மையான ஜனநாயகம் மற்றும் கட்டமைப்பு மாற்றம் முழுமையடைகிறது.
அதனை எதிர் தரப்பில் உள்ள கற்றறிந்த அரசியல் புத்திஜீவிகள் புரிந்து செயற்படுவது காலத்தின் தேவையாகும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முறையான மாற்ற (System change) கொள்கைகள் மற்றும் செயற்திட்டங்கள் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களையும் புதிய சிந்தனைப் போக்குகளுக்கு ஏற்ப மாற்றங்களை நோக்கி சிந்திக்கவும் செயற்பாடுகளை மாற்றியமைக்கவும் தூண்டியுள்ளது.
அதே போன்று, கடந்த காலத்தில் சுகபோக பங்களாக்களில் இருந்தவாரு கட்டளை பிறப்பித்தவர்களும், உயர் ரக வாகனங்களில் வந்து கையசைத்தவர்களாக இருந்த எதிர்க்கட்சி தலைவர்கள் இப்படியான அரசு அமுல்படுத்தியுள்ள சிரமதான பணிகளுக்கு வீதிக்கு இறங்கி இருப்பதானது அவர்களுடைய அரசியல் இருப்பானது மேலும் பூச்சியத்திற்கு தள்ளப்பட்டு விடும் என்ற அச்சமே தவிர வேறொன்றுமில்லை.
எதிர்க்கட்சிகள் தங்களின் மக்கள் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், ஊடகக் கவனத்தை ஈர்ப்பதற்குமே இவ்வாறான மக்கள் நலப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்ற விமர்சனங்களையும் மறுக்கவும் முடியாது.
இருந்தாலும், ஒட்டு மொத்தமாக, இவ்வாறான வேலைத்திட்டங்களை தற்காலிக அரசியல் நகர்வாக பார்ப்பதை விடவும் NPP அரசாங்கத்தின் உண்மையான மாற்றத்தின் வெளிப்பாடாகவும், நாட்டை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு எல்லோருடைய பங்களிப்பும் மிக முக்கியமானது என்ற செய்தி சமூகமயப் படுத்தப்படுகின்றது என்றும் கூறலாம்.
இவ்வாறு இலங்கையினுடைய நீண்ட அரசியல் கலாச்சாரம் மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வை எதிர்கட்சிகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதற்காக அவர்கள் புதிய அரசியல் நடைமுறைகள், நலக் கொள்கைகள், மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர்.
பாரம்பரிய அரசியல் கூட்டங்களை விட, மக்கள் அரசியல்வாதிகளிடம் சமூக ஊடகங்கள் வாயிலாக நேரடியாகக் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.
போலி வாக்குறுதிகள் மற்றும் தற்காலிக நிவாரணங்கள் மூலம் வாக்குகளைப் பெறும் பழைய உத்தி இனி வேலை செய்யாது என்பதை எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளன.
அரசியல்வாதிகளுக்கான சொகுசு வாகனங்கள், சிறப்புச் சலுகைகள் மற்றும் வீணான மக்கள் பணப் பயன்பாட்டை NPP எதிர்ப்பதால், எதிர்க்கட்சிகளும் எளிமையான அரசியல் தோற்றத்தைக் எப்படியாவது மக்களுக்கு காட்ட முயல்கின்றன.
எனவே, இலங்கையின் அரசியல் தளம் தற்போது தகுதி, வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் நலன் சார்ந்த புதியதொரு திசையை நோக்கி நகர்வதால் பாரம்பரிய அரசியல்வாதிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
அவ்வாறு மாற்றிக்கொள்ளா விட்டால், அரசியல் ரீதியாகப் அவர்கள் புறக்கணிக்கப்படும் சூழல் உருவாகின்றமையானது தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால இலக்கை நோக்கிய பயணத்திற்கு கிடைத்துள்ள மிகப் பெரும் வெற்றியாகவே அமையும்.
NPP හි "පද්ධති වෙනස් කිරීම" විරුද්ධ පක්ෂ ද වෙනස් කරන නව දේශපාලන දිශාවකි!
සාම්ප්රදායික දේශපාලන රැස්වීම්වලට වඩා සමාජ මාධ්ය හරහා ජනතාව දේශපාලනඥයන්ගෙන් සෘජුවම ප්රශ්න ඇසීමට පටන් ගෙන තිබේ. ව්යාජ පොරොන්දු සහ තාවකාලික සහන ලබාදී ඡන්දය ලබා ගැනීමේ පැරණි උපාය තවදුරටත් ක්රියාත්මක නොවන බව විපක්ෂය තේරුම් ගෙන තිබේ.
ඡන්ද බැංකු දේශපාලනයේ සහ ප්රභූ දේශපාලනයේ සාම්ප්රදායික ක්රම දුර්වල වෙමින් පවතින බැවින් විපක්ෂ නායකයින්ටද නව පරම්පරාවේ දේශපාලන ප්රවණතාවලට අනුගත වීමට සිදුවේ.
NPP පාලනයේ වසර දෙකක කාලය තුළ වේදිකාවල ආකර්ශනීය පොරොන්දු දී ඡන්ද දිනා ගැනීමේ පැරණි දේශපාලන සංස්කෘතිය ජනතාව ප්රතික්ෂේප කර ඇති බව නිරීක්ෂණය කළ හැකිය.
+++++++++++++++++++
ජාතික ජන බලය (NPP) ආණ්ඩුවේ "පද්ධති වෙනස් කිරීම" හෙවත් පද්ධති වෙනස් කිරීමේ වැඩසටහන් වත්මන් විපක්ෂ දේශපාලන නායකයින්ට සැලකිය යුතු බලපෑමක් ඇති කර නව දේශපාලන මාවතකට යාමට ඔවුන්ට බල කර ඇති බව සමකාලීන ශ්රී ලාංකීය දේශපාලන ක්ෂේත්රයේ බහුලව නිරීක්ෂණය වූ ප්රවණතාවකි.
"පිරිසිදු ශ්රී ලංකාව" වැනි රටපුරා සනීපාරක්ෂක හා ඩෙංගු මර්දන වැඩසටහන්වල ඉහළට නැඟී සිටින විපක්ෂ නායකයන් ඇතුළු බොහෝ දෙනකුගේ සමාජ වගකීමේ යහපත් වෙනසක් දක්නට ලැබේ.
පසුගිය කාලයේ සාමාන්ය මිනිසුන් මෙන් පරිසරය පිරිසිදු කිරීමට පාරට බැස විපක්ෂයේ පක්ෂ නායකයන්ගේ ක්රියා කලාපය ආණ්ඩුවේ ‘පද්ධති වෙනස’ හෙවත් ව්යුහාත්මක වෙනස්වීම් ප්රතිපත්ති දේශපාලන සංස්කෘතියට සහ මහජන නියෝජිතයන්ගේ ආකල්පවලට ඇති කර ඇති බලපෑම මනාව පෙන්නුම් කරයි.
"පිරිසිදු ශ්රී ලංකාව" සහ ජාතික ඩෙංගු මර්දන වැඩසටහන දේශපාලන භේදයකින් තොරව සියලු දෙනා එකමුතු කර ඇත. එය සමාජීය වගකීම් සහගත, සහයෝගී සහ පුද්ගල කේන්ද්රීය සංස්කෘතික වෙනසක් සඳහා වන ආදර්ශයක් ලෙස සැලකේ.
NPP ආණ්ඩුවේ "පද්ධති වෙනසක්" වැඩසටහන මගින් විරුද්ධ පක්ෂ නායකයින්ට සහ ස්වේච්ඡා සේවකයන්ට වීදි සහ වීදි පිරිසිදු කිරීමේ කාර්යයේ නිරත වීමට බලපෑමක් ඇති කිරීම රජයට සහ ජාතික ජන බලවේගයේ
සාර්ථකත්වයකි.
ආණ්ඩුවේ විනිවිදභාවය සහ දූෂණයෙන් තොර පාලන භාවිතයන් නිසා විරුද්ධ පක්ෂවලට ද තම පැරණි දේශපාලන උපාය මාර්ග වෙනස් කිරීමට සිදු වී තිබේ. හුදු විවේචනවලින් ඔබ්බට, සාධනීය විකල්ප සැලසුම් ඉදිරිපත් කිරීමට විපක්ෂ නායකයින්ට ද බල කෙරී ඇත. රාජ්ය වියදම් අඩු කිරීම, නීතියේ ආධිපත්යය වැනි ක්රියාදාමයන් දේශපාලන ක්ෂේත්රය තුළ නව සෞඛ්ය සම්පන්න තරගයක් නිර්මාණය කර ඇති බව ද කිව හැකිය.
ජාතික ජන බලය ආණ්ඩුවේ දෙවසර තුළ වේදිකා මත ආකර්ශනීය පොරොන්දු පමණක් දෙමින් ඡන්දය දිනා ගැනීමේ පැරණි දේශපාලන සංස්කෘතිය ජනතාව විසින් ප්රතික්ෂේප කර ඇති බවද නිරීක්ෂණය කළ හැකිය. චිත්තවේගීය වාචාල කතාවලට වඩා ප්රායෝගික සැලසුම් සහ ප්රතිපත්ති ඉදිරිපත් කිරීමට විරුද්ධ පක්ෂවලට බල කෙරේ.
විරුද්ධ පක්ෂ උත්සාහ කරන්නේ තමන් තුළ ඇති පැරණි හෝ දූෂිත මුහුණු වෙනුවට උගත්, තරුණ සහ නැවුම් පෞරුෂයන් ප්රක්ෂේපණය කිරීමට ය. අභ්යන්තර ප්රජාතන්ත්රවාදය සහ විනිවිදභාවය පවත්වා ගැනීමට විරුද්ධ පක්ෂවලට ද බලකෙරේ. ඊට අමතරව, ආණ්ඩුවේ සැලසුම්වලට දේශපාලන වශයෙන් විරුද්ධ වීමට වඩා හොඳ විකල්ප "පද්ධති වෙනස් කිරීමේ" සැලසුම් තමන්ට ඇති බව පෙන්වීමට විරුද්ධ පක්ෂ දඟලමින් සිටිති.
එමෙන්ම දේශපාලඥයින්ගේ වරප්රසාද අහෝසි කිරීමේ NPP ආණ්ඩුවේ ප්රතිපත්තිය පිළිබඳව මහජනතාවට ඉතා පැහැදිලිව පෙනී සිටින හෙයින්, විපක්ෂයේ නායකයින්ට ද ඔවුන්ගේ විචිත්රවත් ප්රවනතාවන් අඩු කර ගැනීමට සිදු වී තිබේ. පාර්ලිමේන්තුවේ සහ පිටතදී කරන ක්රියාකාරකම් සම්බන්ධයෙන් ජනතාවට සෘජුව පිළිතුරු දීමේ වගකීම විපක්ෂයටද වැඩි වී තිබේ.
මෙම සමස්ත පියවර ශ්රී ලංකාවේ දේශපාලන සංස්කෘතිය තුළ නව තරඟකාරී මාවතක් නිර්මාණය කර ඇත. ආණ්ඩු පක්ෂයට පමණක් නොව, අනාගතයේ බලය අපේක්ෂා කරන ඕනෑම විරුද්ධ පක්ෂයකට දේශපාලන වශයෙන් ඕනෑම දෙයක් අත්කර ගත හැක්කේ රැඩිකල් "ක්රම වෙනසක්" කරා ගමන් කළහොත් පමණක් බව ජාතික ජන බලවේගයේ වත්මන් දේශපාලන වටපිටාව යථාර්ථය හෙළිදරව් කර ඇත.
සැබෑ දේශපාලන වෙනස රජයට පමණක් අයිති දෙයක් නොවේ; එය සමස්ත දේශපාලන සංස්කෘතියේ සහ විරුද්ධ පක්ෂවල වෙනසක් ඇති කළ යුතුය. ජාතික ජනබල ආණ්ඩුව යටතේ මෙම ක්රමය වෙනස් කිරීමට ගෙන ඇති පියවර විවිධ පැතිවලින් විවාදයට ලක්ව ඇත.
පාලකයන්ගේ හා නිලධාරීන්ගේ ක්රියාකාරකම්වලද විනිවිදභාවය අවශ්ය වේ. ආණ්ඩු පක්ෂය පමණක් නොව විපක්ෂයේ පක්ෂ නායකයන් ද තම පැරණි දේශපාලන ක්රමය වෙනස් කළ යුතු බවට මතයක් ශක්තිමත් කර ඇත. දූෂණය මුලිනුපුටා දැමීමේ ව්යවස්ථාදායක මුලපිරීම් සහ ආර්ථික ප්රතිසංස්කරණ ද රජයේ ප්රධාන ඉලක්කයක් බවට පත්ව ඇති අතර එය අඛණ්ඩව නිරීක්ෂණය කෙරේ.
එබැවින් පාර්ලිමේන්තුවේ සහ ඉන් පිටත විවේචන ඉදිරිපත් කිරීම පමණක් නොව මහජන සුබසාධන ව්යාපෘති සඳහා සාධනීය දායකත්වයක් ලබාදීමේ අවශ්යතාවක් එන්.පී.පී.යේ නව දේශපාලන වටපිටාව විසින් විපක්ෂයට නිර්මාණය කර ඇත.
ආණ්ඩු පක්ෂය ජනතාවගේ ප්රතිවිරෝධතාවලට විනිවිද භාවයෙන් යුතුව ක්රියා කරන අතරවාරයේ විපක්ෂයේ නායකයින්ට තම පැරණි දේශපාලන උපක්රම වෙනස් කර වඩා වගකීම් සහගත බව පෙන්වීමේ බලගතු අවශ්යතාවයක් පවතී.
ඒ අර්ථයෙන් ගත් කල, හුදු ප්රතිපත්ති විරහිත අවස්ථාවාදී දේශපාලන සංස්කෘතියෙන් හෝ රජයට එරෙහි ව්යාජ විවේචනවලින් ඔබ්බට ප්රතිපත්තිමය සහ තාර්කික වාද විවාද දෙසට විරුද්ධ පක්ෂ මඳක් වැඩිපුර සිතන්නට පටන් ගෙන තිබේ.
එබැවින් ඡන්ද බැංකු දේශපාලනයේ සහ මෙට්ටුකුඩි දේශපාලනයේ සාම්ප්රදායික ක්රම දුර්වල වෙමින් පවතින බැවින් විපක්ෂ නායකයින්ටද නව පරම්පරාවේ දේශපාලන ප්රවණතාවලට අනුගත වීමට සිදුවේ. රටක සැබෑ ප්රජාතන්ත්රවාදය සහ ව්යුහාත්මක පරිවර්තනය සම්පූර්ණ වන්නේ ආණ්ඩු, විපක්ෂය සහ මහජනතාව යන පක්ෂ තුනම එකට ගමන් කළ විටය. විරුද්ධ පැත්තේ සිටින උගත් දේශපාලන බුද්ධිමතුන් එය තේරුම් ගෙන ක්රියා කිරීම යුගයේ අවශ්යතාවයකි.
ජාතික ජන බලය ආණ්ඩුවේ ක්රම වෙනස් කිරීමේ ප්රතිපත්ති සහ වැඩසටහන් වෙනස්වීම් ගැන සිතීමටත්, නව ප්රවණතාවලට අනුව තම ක්රියාකාරකම් සකස් කර ගැනීමටත් විපක්ෂ දේශපාලන නායකයන් පොළඹවා ඇත.
එලෙසම පසුගිය කාලයේ සුපිරි බංගලාවල සිට ඇනවුම් කළ, ඉහළ පෙළේ වාහනවලින් පැමිණ අත වනන විපක්ෂයේ නායකයන් ආණ්ඩුව ක්රියාත්මක කරන මෙවැනි දුෂ්කර කාර්යයන් සඳහා පාරට බසින්නේ තම දේශපාලන පැවැත්ම වළපල්ලට ඇද දමනු ඇතැයි යන බිය මිස අන් කිසිවක් නොවේ.
විපක්ෂයේ පක්ෂ මෙවැනි මහජන සුබසාධන කටයුතුවල නියැලෙන්නේ තම ජනප්රිය බලපෑම පවත්වා ගැනීමට සහ මාධ්ය අවධානය දිනා ගැනීමට බවට එල්ල වන විවේචන ප්රතික්ෂේප කළ නොහැකිය.
කෙසේ වෙතත් සමස්තයක් ලෙස ගත්විට මෙවැනි වැඩසටහන් තාවකාලික දේශපාලන ක්රියාමාර්ගයක් ලෙස දකිනවාට වඩා රට පිරිසුදුව නිරෝගීව තබා ගැනීමට සියලු දෙනාගේම දායකත්වය වඩාත් වැදගත් බවට සමාජගත වෙමින් පවතින බවත් NPP ආණ්ඩුවේ සැබෑ වෙනසක ප්රකාශනයක් ලෙසින් පැවසිය හැකිය.
මේ අනුව ශ්රී ලංකාවේ දීර්ඝ දේශපාලන සංස්කෘතිය වෙනසක් කරා ගමන් කරන මේ වකවානුවේ ජාතික ජන බලවේගයේ පාලන තන්ත්රය වෙනස් වීම නිසා ඇති වූ දේශපාලන පිබිදීමට විරුද්ධ පක්ෂවලට මුහුණ දීමට සිදුව තිබේ. මේ සඳහා ඔවුන්ට නව දේශපාලන භාවිතයන්, සුබසාධන ප්රතිපත්ති සහ විනිවිදභාවය අනුගමනය කිරීමට බලකෙරේ.
සාම්ප්රදායික දේශපාලන රැස්වීම්වලට වඩා සමාජ මාධ්ය හරහා ජනතාව දේශපාලනඥයන්ගෙන් සෘජුවම ප්රශ්න ඇසීමට පටන් ගෙන තිබේ. ව්යාජ පොරොන්දු සහ තාවකාලික සහන ලබාදී ඡන්දය ලබා ගැනීමේ පැරණි උපාය තවදුරටත් ක්රියාත්මක නොවන බව විපක්ෂය තේරුම් ගෙන තිබේ.
දේශපාලකයන්ට සුඛෝපභෝගී වාහන, විශේෂ වරප්රසාද සහ ජනතා මුදල් නාස්තියට NPP විරුද්ධ වීම නිසා විරුද්ධ පක්ෂද උත්සාහ කරන්නේ කෙසේ හෝ සරල දේශපාලන ප්රතිරූපයක් ජනතාවට පෙන්වීමටය.
එබැවින් ශ්රී ලංකාවේ දේශපාලන භූමිය දැන් කුසලතා, විනිවිදභාවය සහ මහජන අවශ්යතා යන නව දිශානතියකට ගමන් කරමින් සිටින බැවින් සාම්ප්රදායික දේශපාලඥයින්ගේ අවශ්යතාවයක් පවතී. මෙය වෙනස් නොකළහොත් දේශපාලන වශයෙන් ඔවුන් නොසලකා හරින තත්ත්වය ජාතික ජන බලවේගයේ අනාගත ඉලක්කය කරා යන ගමනේ ලොකුම ජයග්රහණය වනු ඇත.
අහමඩ් ඉර්ෂාඩ්.
අද දිනකරන් පුවත්පත,
NPP யின் "சிஸ்டம் சேஞ்ச்" எதிர்கட்சிகளையும் மாற்றியமைக்கும் புதிய அரசியல் திசை!
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 29, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 29, 2026
Rating:


கருத்துகள் இல்லை: