காத்தான்குடி டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வீதி மற்றும் CB காசிம் வீதி தொடர்பில் அக்கறையுடன் செயற்பட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
காத்தான்குடி டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வீதியும் CB காசிம் வீதியும் இணையுமிடத்தில் தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தினால் திருத்தவேலைகள் முன்னெடுக்கப்பட்ட
பின்னர் வீதி சேதமடைந்துள்ள நிலையில் அதனை சீரமைப்பது தொடர்பில் 162 கிராம சேவகர் பிரிவுக்கான பிரஜா சக்தி தவிசாளர் தோழர் அன்வர் அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு கடந்த மேமாதத்தில் கடிதம் மூலம் வேண்டுகோள்விடுத்திருந்தார்.
எனினும் இதுதொடர்பில் இதுவரை எவ்வித முயற்ச்சிகளும் எடுக்கப்படவில்லை என்பதுதொடர்பில் கடந்த சில தினங்கலாக ஊடகங்கள் வாயிலாகவும் சுட்டிக்காட்டப்பட்டுவருகின்ற இவ்விடயம் தொடர்பில் வீதி அபிவிருத்தித்திணைக்களத்தின் பிரதம பொறியியலாளருடன் நேற்று நண்பகல் தொலைபேசியில் தொடர்புகொண்டு இவ்விடயத்தினை உடணடியாக கவணத்திலெடுத்து சீரமைப்புப் பணிகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்.
இவ்விடயம் தொடர்பில் அக்கறையுடன் செயற்பட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்த 162 கிராம சேவகர் பிரிவுக்கான பிரஜா சக்தி தவிசாளர் தோழர் அன்வர், ஊடகவியலாளர்கள்,
காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களான கலீல்பாரி, முஜீப் ஜுனைத் ஆகியோருக்கும் எனது நன்றிகளைத்
தெரிவித்துக்கொள்கின்றேன்.
காத்தான்குடி டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வீதி மற்றும் CB காசிம் வீதி தொடர்பில் அக்கறையுடன் செயற்பட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 11, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 11, 2026
Rating:

கருத்துகள் இல்லை: