Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

සිංහල පරිවර්තනය සමඟ) அரசியல் சதித் திட்டங்கள் தீட்டப்படும் இடங்களாக மாறும் சிறைச்சாலைகள்.! சிறைக் கலவரங்களின் உண்மைப் பின்னணி.!


සිංහල පරිවර්තනය සමඟ) அரசியல் சதித் திட்டங்கள் தீட்டப்படும் இடங்களாக மாறும் சிறைச்சாலைகள்.!
சிறைக் கலவரங்களின் உண்மைப் பின்னணி.!

சிறைகளில் கலவரங்களை ஏற்படுத்தி (நீர்கொழும்பு சிறை மோதல்கள்) அரசையும்  பாதுகாப்பு துறையினரையும் திசை திருப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கைப்பற்றப்டும் போதைப் பொருட்கள் மீண்டும் சமூகத்திற்குள் செல்வதைத் தடுக்க, அவற்றை பறிமுதல் செய்த இடத்திலேயே உடனடியாக அழிப்பதற்கான புதிய சட்ட மூலங்களை உருவாக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.


டைனமிக் செக்யூரிட்டி" (Dynamic Security) மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடுகள் மூலம், சிறைச்சாலைகள் பழிவாங்கும் இடங்களாக அன்றி, குற்றவாளிகளைச் சீர்திருத்தும் மையங்களாக மாற்றுவதே தற்போதைய NPP அரசாங்கத்தின் நீண்டகால இலக்குமாக உள்ளது.


கலவரங்களைத் தூண்டுதல், அவசர நிலையை உருவாக்குதல், சட்ட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தல் போன்ற செயல்கள் மூலம் சிறைச்சாலைகளை அரசியல் தாக்கங்கள் நிறைந்த களமாக மாற்ற திரைமறைவில் முயற்சிக்கப்படுகின்றது.


இலங்கையிலும் கடந்த தேர்தல் காலங்களில் பணபலம், ஆட்பலம் மூலம் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுதல் மற்றும் எதிர்த்தரப்பினரை அச்சுறுத்துதல் போன்றவற்றுக்கு போதைப்பொருள் வியாபார மற்றும் பாதாள உலகக் குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை சிறைச்சாலைகளில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அதிகாரத்தைக் கைப்பற்றவோ அல்லது நிர்வாகத்தை சீர்குலைக்க முயல்வதுடன், இது தொடர்பான கலவரங்கள் மற்றும் வன்முறைகள் அரசியல் மற்றும் பாதுகாப்பு விவாதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

இலங்கை சிறைச்சாலைகளை அரசியல் களமாக மாற்றுவதற்கு போதைப்பொருள் வியாபாரிகள் முயற்சி செய்யலாம் அல்லது தூண்டப்படலாம் என்பது தற்போதைய சூழலில் மிக முக்கியமான மற்றும் தீவிரமான ஒரு அவதானிப்பாகும்.

கைதிகளுக்கு இடையேயான மோதல்களைத் தூண்டிவிட்டு, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறை நிர்வாகத்தைக் குழப்பும் முயற்சியாகவும் பார்க்கப்படுகின்றது. இது சிறைச்சாலைகளில் உள்ள பாதுகாப்பை பலவீனப்படுத்தவும், சட்டவிரோதச் செயல்களைத் தொடர திரைமறைவில் இருந்து செயற்படுத்தும் திட்டமாக அமையலாம் என்பது பலரது பார்வையாகும்.


கைதிக் குழுக்களுக்கு இடையே வேண்டுமென்றே சண்டைகளை உருவாக்குதல், பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்தை திசை திருப்புதல், நேர்மையான அதிகாரிகளை அச்சுறுத்துவது அல்லது விலை பேசுவது, சிறைக்குள்ளேயே தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துவது போன்ற முக்கிய உத்திகளாகவும் செயற்படுத்தப்படுகின்றது.

சிறைச்சாலைகளுக்குள் இருந்து திட்டமிடப்படும் குற்றச்செயல்கள் மற்றும் அரசியல் ரீதியான தாக்கங்கள் குறித்து இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினரும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போதைய அரசாங்கத்தின் நாட்டை பொருளாதார ரீதியாக கட்டி யெழுப்பும்  "க்ளீன் சிறீலங்கா" எனும் தேசத்தை தூய்மையாக்கும் திட்டத்தின் இலக்கினை நோக்கிய பயணத்தில் சட்டமும், நீதித்துறையும், பொலிஸ் ஆணைக்குழுவும் சுயாதீனமாக்கப்பட்டு போதைப்பொருள் கலாச்சாரத்துக்கு எதிராக கடமைகளை அரசியல் தலையீடுகளுக்கு அப்பால் செயற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் இலங்கை சிறைச்சாலைகளில் போதைப்பொருள் வியாபாரிகள் தங்களுடைய கட்டமைப்புக்களைப் பயன்படுத்திச் சிறைக்குள்ளிருந்தும், வெளியேயும் அரசியல் மற்றும் குற்றச் செயல்களை ஒருங்கிணைக்க முயல்கின்றனர்.

போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டிய கருப்புப் பணத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளை விலைக்கு வாங்குதல், தேர்தல் காலங்களில் வன்முறைகளைப் பயன்படுத்துதல் மற்றும் சிறைக் கலவரங்களைத் தூண்டி அவசர நிலையை உருவாக்குவதுடன், சட்ட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தல் போன்ற செயல்கள் மூலம் சிறைச்சாலைகளை அரசியல் தாக்கங்கள் நிறைந்த களமாக மாற்ற அவர்கள் துணை போகிறார்கள்.

ஆட்சியாளர்கள் என்ற வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், சிறைச்சாலைகள் குற்றவியல் மற்றும் அரசியல் தளங்களாக மாறுவதைத் தடுக்கவும், அண்மைய நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலை மோதல்களைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப மேம்பாடுகளை அதிகரிக்கவும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் தங்களின் வியாபாரப் பின்னடைவுகளை மறைக்க சிறைக்குள் கைதிகளைத் தூண்டிவிட்டு கலவரங்கள் அல்லது போராட்டங்களை உருவாக்கலாம்.  அல்லது  தப்பியோடும் முயற்சிகளுக்கோ,  தண்டனைக் குறைப்புக்கோ ஆதரவு தேடும் வகையில், வெளியில் உள்ள சில அரசியல் சக்திகளை இவர்கள் பயன்படுத்த முயற்சிக்கலாம் என்பது தற்பொழுது எழுந்துள்ள பிரச்சனையாகும்.

சிறைகளில் கலவரங்களை ஏற்படுத்தி (நீர்கொழும்பு சிறை மோதல்கள்) அரசையும் பாதுகாப்புத் துறையினரையும் திசை திருப்பும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முடக்க அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி நெருக்கடிகளை உண்டாக்கும் திரைமறைவு திட்டங்களாகவும் உருவெடுத்துள்ளன. 

அதிலும் முக்கியமாக, நெருக்கடியான சூழலைப் பயன்படுத்தி விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தும் முயற்சிகள் பிரதான கருப்பொருளாக உள்ளது. அதற்காக கைதிகளுக்கு இடையே வேண்டுமென்றே மோதல்களை ஏற்படுத்தி சிறைச்சாலை அமைதியைச் சீர்குலைக்கும் முயற்சியும் செயற்படுத்தப்படுகின்றது.

அரசியல் அதிகாரம் மற்றும் குற்றவியல் உலகிற்கு இடையிலான இந்தத் தொடர்பு பல தசாப்தங்களாகப் பல்வேறு நாடுகளில் சமூக அமைதியைக் கெடுக்கும் ஒரு முக்கிய காரணியாக இருந்து வருகிறது. இலங்கையிலும் கடந்த தேர்தல் காலங்களில் பணபலம், ஆட்பலம் மூலம் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுதல் மற்றும் எதிர்த்தரப்பினரை அச்சுறுத்துதல் போன்றவற்றுக்கு போதைப்பொருள் வியாபார, பாதாள உலகக் குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான கறுப்புப் பணம், தேர்தல் நிதியாகவும் அரசியல் அதிகாரத்த நோக்கி பயணித்த கட்சிகளுக்குப் பாய்ந்துள்ளமை தற்பொழுது அம்பலமாகி வருகின்றது. உயர்மட்ட அரசியல் தொடர்புகள் இருப்பதால், இவர்கள் கைது செய்யப்பட்டாலும் வலுவான சாட்சிகள் இல்லாமல் தப்பித்துவிடும் கலாச்சாரம் இருந்துள்ளதுடன், வழக்குகளைக் கிடப்பில் போடச் செய்யும் அரசியல் அதிகாரங்கள் பாவிக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.

ஜனநாயக அமைப்பைப் பாதுகாக்கவும், குற்றங்களை ஒழிக்கவும், அரசியல் கட்சிகளின் குற்றப்பின்னணி உள்ளவர்களைப் புறக்கணிப்பற்கும், கடுமையான சிறைச்சாலைச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும், சுதந்திரமான நீதித்துறை செயற்பாடுகள்  இன்றியமையாதவை ஆகும். 

அந்த வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் ஆயுதக் கடத்தல்களை ஒடுக்குவதற்கு மிகக் கடுமையான மற்றும் திடமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

நாடு தழுவிய ரீதியில் போதைப்பொருள் விநியோக வலையமைப்புகளை முடக்குவதற்காக “நாடே ஒன்றாக” (A Nation United) என்ற விசேட பாதுகாப்புப் பிரிவு மற்றும் கூட்டு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்படும் போதைப் பொருட்கள் மீண்டும் சமூகத்திற்குள் செல்வதைத் தடுக்க, அவற்றை பறிமுதல் செய்த இடத்திலேயே உடனடியாக அழிப்பதற்கான (Instant Drug Destruction) புதிய சட்ட மூலங்களை உருவாக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களையும் அரசு பறிமுதல் செய்து வருகின்றது. சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற கொள்கையின் அடிப்படையில், எந்தவொரு அரசியல் அல்லது தகுதிப் பின்னணியையும் பாராது குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டப் போவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இவைகள் குற்றமிழைத்தவர்கள் பார்வையில் அரசாங்கத்துக்கு எதிரான சவால்மிக்க விடயமாகவும் மாறியுள்ளது.

இவ்வாறான பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைப்பதற்காகவும், திட்டமிடப்பட்ட முயற்சிகளை முறியடிக்க சிறைச்சாலைத் திணைக்களம், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் உளவுத்துறையினர் இணைந்து தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், களுத்துறை, பூசா போன்ற அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலைகளின் வெளிப்பாதுகாப்பு விசேட அதிரடிப்படையினரிடம் (STF) ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளுக்குள் கையடக்கத் தொலைபேசி பாவனையைத் தடுக்க ஜேமர்கள் (Jammers) மற்றும் நவீன ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு உதவும் ஊழல்மிக்க சிறைச்சாலை அதிகாரிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறைச்சாலைகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்கவும், நிர்வாகக் குறைபாடுகளைத் தவிர்க்கவும் சிறப்பு விசாரணைகள் நடந்து வருகின்றன. அதனோடு சேர்த்து, சிறை நெருக்கீட்டைக் குறைக்க மாற்று வழிகள் மற்றும் புணர்வாழ்வு மையங்களை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குழுத் தலைவர்களை ஏனைய கைதிகளிடமிருந்து பிரித்து வைப்பதற்காக பிரத்யேக உயர் பாதுகாப்பு சிறைச்சாலை அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அத்தோடு, சிறைகளுக்குள் போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க விசேட மோப்ப நாய் பிரிவுகள் சோதனைகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.

தற்போதுள்ள 11,000 கைதிகள் கொள்ளளவிற்கு மாறாக 39,000க்கும் அதிகமான கைதிகள் உள்ளதால், வெலிசர பகுதியில் புதிய சிறைச்சாலை ஒன்றை அமைப்பதற்கும், தற்காலிகக் கட்டடங்களைச் சிறைகளாக மாற்றுவதற்கும் தேசிய மக்கள் சக்தி  அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

சிறை நெரிசலைக் குறைக்கும் நோக்கில், குறிப்பிட்ட கைதிகளை இலத்திரனியல் கண்காணிப்புடன் (Electronic Monitoring) வீட்டுக்காவலில் வைப்பதற்கான ஆரம்பகட்ட சட்டமூல வரைபுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சிறையில் உள்ளவர்களில் 70% விகிதத்தினர் போதைப்பொருள் விவகாரங்களுடன் தொடர்புடையவர்கள் என்பதால், அவர்களைச் சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் புனர்வாழ்வு மையங்களை அமைத்து சமூகமயப்படுத்த அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது.

ஜனாதிபதிஅநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் இத்தகைய "டைனமிக் செக்யூரிட்டி" (Dynamic Security) மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடுகள் மூலம், சிறைச்சாலைகள் பழிவாங்கும் இடங்களாக அன்றி, குற்றவாளிகளைச் சீர்திருத்தும் மையங்களாக மாற்றுவதே தற்போதைய NPP அரசாங்கத்தின் நீண்டகால இலக்குமாக உள்ளது.

கடந்த காலத்தில் பல ஆயிரம் கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின், ஐஸ் (கிரிஸ்து மெத்தபெட்டமைன்) மற்றும் கொக்கெய்ன் போன்ற போதைப்பொருட்கள் அரச நடவடிக்கைகளின் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளன. போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதத் தொடர்புகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் உடனடியாக விலகுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இதுவே இன்று இலங்கை சிறைச்சாலைகளை அரசியல் களமாக மாற்றுவதற்கான முயற்சிகளுக்கு பின்னால் போதைப்பொருள் வியாபாரிகள்  தூண்டப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளைமைக்கான பிரதான காரணமாக உள்ளது. அதற்காக சிறைச்சாலைகளில் உள்ள பாதுகாப்பை பலவீனப்படுத்தவும், சட்டவிரோதச் செயல்களைத் தொடரவும் திரைமறைவில் நாடகங்கள் அரங்கேற்றப்படலாம்.

எது எவ்வாறாக இருந்தாலும், அரசாங்கம் மேற்கொள்ளும் இவ்வாறான ஒருங்கிணைந்த தடைகள் மூலம் சிறைச்சாலைகள் அரசியல் அல்லது குற்றவியல் தளங்களாக மாறுவது ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும், இந்த சவாலை முற்றாக ஒழிக்க தொடர்ச்சியான கண்காணிப்பும் நவீன தொழில்நுட்ப மேம்பாடுகளும் அவசியமாகின்றன என்பதே உண்மை.

அஹமட் இர்ஷாட்.

அரசியல் சதித் திட்டங்கள் தீட்டப்படும் இடங்களாக மாறும் சிறைச்சாலைகள்.!
சிறைக் கலவரங்களின் உண்மைப் பின்னணி.! බන්ධනාගාර දේශපාලන කුමන්ත්‍රණ කරන තැන් බවට පත්වෙයි.!
බන්ධනාගාර කැරැල්ලේ ඇත්ත පසුබිම.!

බන්ධනාගාර(Negambo Prison Incidents)  කලකෝලාහල ඇතිකර රජය සහ ආරක්ෂක අංශ වෙනතකට යොමු කිරීමේ උත්සාහයක් දරයි.

අත්අඩංගුවට ගත් මත්ද්‍රව්‍ය යළි ප්‍රජාවට ඇතුළුවීම වැළැක්වීම සඳහා අත්අඩංගුවට ගන්නා අවස්ථාවේදීම ඒවා වහාම විනාශ කිරීම සඳහා නව නීතිමය මූලාශ්‍ර නිර්මාණය කරන ලෙස ජනාධිපතිවරයා නියෝග කර තිබේ.

"ගතික ආරක්‍ෂාව"( Dynamic Security )  සහ තාක්‍ෂණය භාවිතයෙන්, වත්මන් එන්පීපී රජයේ දිගුකාලීන ඉලක්කය වන්නේ බන්ධනාගාර පළිගැනීමේ ස්ථාන වලට වඩා අපරාධකරුවන් ප්‍රතිසංස්කරණය කිරීමේ මධ්‍යස්ථාන බවට පරිවර්තනය කිරීමයි.

කැරලි ඇවිලවීම, හදිසි නීතිය ඇති කිරීම, නීතිමය කටයුතු කඩාකප්පල් කිරීම ආදිය මගින් තිරය පිටුපස සිට බන්ධනාගාර දේශපාලන පිටිය බවට පත් කිරීමට උත්සාහ කරනවා.
+++++++++++++++++++++++
මත්ද්‍රව්‍ය ජාවාරම් සහ පාතාල කණ්ඩායම් ශ්‍රී ලංකාවේ මීට පෙර මැතිවරණවලදී මුදල් විශුද්ධිකරණය, මිනිස් බලය අල්ලා ගැනීම සහ විරුද්ධවාදීන් බිය ගැන්වීම සඳහා යොදාගෙන ඇත.

මත්ද්‍රව්‍ය ජාවාරම්කරුවන් සහ සංවිධානාත්මක අපරාධකරුවන් බලය අල්ලා ගැනීමට හෝ පරිපාලනය කඩාකප්පල් කිරීමට උත්සාහ කරන ශ්‍රී ලංකාවේ බන්ධනාගාරවල කැරලි සහ ප්‍රචණ්ඩත්වය දේශපාලන හා ආරක්ෂක විවාදවලට තුඩු දී තිබේ.

මත්ද්‍රව්‍ය ජාවාරම්කරුවන් ශ්‍රී ලංකාවේ බන්ධනාගාර දේශපාලන ක්ෂේත්‍ර බවට පත් කිරීමට උත්සාහ කිරීම හෝ පෙළඹවීම වත්මන් සන්දර්භය තුළ ඉතා වැදගත් සහ බැරෑරුම් නිරීක්ෂණයකි.

රැඳවියන් අතර ගැටුම් ඇතිකරමින් බන්ධනාගාර පරිපාලනය කඩාකප්පල් කිරීමට මත්ද්‍රව්‍ය ජාවාරම්කරුවන් දරන උත්සාහයක් ලෙසද එය සැලකේ. මෙය බන්ධනාගාරවල ආරක්‍ෂාව දුර්වල කර නීතිවිරෝධී ක්‍රියා ඉදිරියට ගෙන යාමේ රහසිගත වැඩපිළිවෙළක් විය හැකි බව බොහෝ දෙනාගේ අදහසයි.

සිරකරුවන් කණ්ඩායම් අතර හිතාමතා සටන් ඇති කිරීම, ආරක්ෂක නිලධාරීන්ගේ අවධානය වෙනතකට යොමු කිරීම, අවංක නිලධාරීන්ට තර්ජනය කිරීම හෝ කප්පම් ගැනීම, ආධිපත්‍යය සඳහා බන්ධනාගාරය තුළ සන්නිවේදන උපකරණ භාවිතා කිරීම ද ප්‍රධාන උපක්‍රම ලෙස භාවිතා වේ.

ශ්‍රී ලංකා ආරක්ෂක අංශ සහ සමාජ ක්‍රියාකාරීන් බන්ධනාගාර තුළ සිට සංවිධානාත්මක අපරාධ සහ දේශපාලන බලපෑම් පිළිබඳව නිරන්තරයෙන් අනතුරු අඟවයි.

ඒ ආකාරයට රට ආර්ථික වශයෙන් ගොඩනැගීමේ වත්මන් රජයේ "පිරිසිදු ශ්‍රී ලංකා" වැඩසටහනේ ඉලක්කය කරා යන ගමනේදී නීතිය, අධිකරණය, පොලිස් කොමිසම ස්වාධීන කර දේශපාලන ඇඟිලි ගැසීම්වලින් ඔබ්බට මත්ද්‍රව්‍ය සංස්කෘතියට එරෙහිව තම රාජකාරිය ඉටුකරමින් සිටී.

මෙම තත්ත්වය තුළ ශ්‍රී ලංකාවේ බන්ධනාගාරවල සිටින මත්ද්‍රව්‍ය ජාවාරම්කරුවන් බන්ධනාගාරය තුළ සහ ඉන් පිටත දේශපාලන හා අපරාධ ක්‍රියාකාරකම් සම්බන්ධීකරණය කිරීම සඳහා ඔවුන්ගේ ව්‍යුහයන් භාවිතා කරයි.

මත්ද්‍රව්‍ය ව්‍යාපාරයෙන් උපයාගත් කළු සල්ලි දේශපාලනඥයන් මිලට ගැනීම සඳහා යොදවා, මැතිවරණ කාලවලදී ප්‍රචණ්ඩත්වය යොදා ගනිමින්, හදිසි නීතිය ඇති කිරීමට බන්ධනාගාර කෝලාහල අවුස්සමින්, නීතිමය ක්‍රියාමාර්ග කඩාකප්පල් කරමින්, බන්ධනාගාර දේශපාලන පිටිය බවට පත් කිරීමට උපකාරී වේ.

පාලකයන් ලෙස පසුගිය මීගමුව සහ මහර බන්ධනාගාර ගැටුමෙන් පසු බන්ධනාගාර අපරාධ සහ දේශපාලන වේදිකා බවට පත්වීම වැලැක්වීමටත් ආරක්‍ෂාව සහ නවීන තාක්‍ෂණික දියුණුව වැඩි කිරීමටත් ජනාධිපති අනුර කුමාර දිසානායක ප්‍රමුඛ ජාතික ජනතා ශක්ති (NPP) රජය දැඩි පියවර ගනිමින් සිටී.

මත්ද්‍රව්‍ය ජාවාරම්කරුවන්ට බන්ධනාගාර තුළ රැඳවියන් උසිගන්වා ඔවුන්ගේ ව්‍යාපාරික පසුබෑම වසා ගැනීමට කැරලි හෝ විරෝධතා ඇති කළ හැකිය.  එසේත් නැතිනම් ඔවුන් පැන යාමට උත්සාහ කිරීම හෝ දඬුවම් වෙනස් කිරීම සඳහා සහාය ලබා ගැනීම සඳහා බාහිර දේශපාලන බලවේග භාවිතා කිරීමට උත්සාහ කළ හැකිය.

බන්ධනාගාර තුළ  කලකෝලාහල ඇතිකර රජය සහ ආරක්ෂක අංශ වෙනතකට යොමු කිරීමේ උත්සාහයක් දරයි. මත්ද්‍රව්‍ය විරෝධී ප්‍රයත්නයන් අඩාල කිරීමට දේශපාලන සම්බන්ධතා යොදා ගනිමින් අර්බුද ඇති කිරීමේ රහසිගත යෝජනා ක්‍රම බවට ද ඒවා පරිණාමය වී ඇත.

වඩාත් වැදගත් වන්නේ අර්බුදකාරී තත්ත්වය යොදා ගනිමින් විමර්ශන සහ අධිකරණ ක්‍රියාදාමයන් ප්‍රමාද කිරීමට උත්සාහ කිරීම ප්‍රධාන තේමාවක් වී තිබීමයි. ඒ සඳහා සිරකරුවන් අතර ගැටුම් ඇතිකරමින් බන්ධනාගාරයේ සාමය කඩ කිරීමට උත්සාහ දරනවා.

දේශපාලන බලය සහ අපරාධ ලෝකය අතර ඇති මෙම සම්බන්ධය දශක ගණනාවක් තිස්සේ විවිධ රටවල සමාජ සාමය කඩාකප්පල් කරන ප්‍රධාන සාධකයකි. මත් ද්‍රව්‍ය ව්‍යාපාරය සහ පාතාල කණ්ඩායම් ශ්‍රී ලංකාවේ මීට පෙර මැතිවරණවලදී මුදල්, පිරිස් බලය හරහා ඡන්ද මධ්‍යස්ථාන අල්ලාගෙන විපක්ෂයට තර්ජනය කර ඇත.

එපමණක් නොව මත්ද්‍රව්‍ය ජාවාරමෙන් ලබාගත් කළු සල්ලි කෝටි ගණන් දේශපාලන බලය කරා ගමන් කළ පක්ෂවලට මැතිවරණ අරමුදල් ලෙස ගලා ගොස් ඇති බවද දැන් හෙළිවෙමින් තිබේ. මොවුන්ගේ ඉහළ දේශපාලන සබඳතා නිසා අත්අඩංගුවට ගත්තද ප්‍රබල සාක්ෂිකරුවන් නොමැතිව පලා යන සංස්කෘතියක් තිබූ අතර දේශපාලන බලතල යොදා ගනිමින් නඩු කල් දැමූ බවද ප්‍රකටය.

ප්‍රජාතන්ත්‍රවාදී ක්‍රමය ආරක්‍ෂා කිරීමට, අපරාධ පිටුදැකීමට, අපරාධ වාර්තා ඇති දේශපාලන පක්ෂවලින් ඈත්වීමට, බරපතළ බන්ධනාගාර ප්‍රතිසංස්කරණ සිදුකිරීමට ස්වාධීන අධිකරණයක් අත්‍යවශ්‍ය වේ.

ඒ සම්බන්ධයෙන් අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයා ප්‍රමුඛ වත්මන් රජය නීතිවිරෝධී මත්ද්‍රව්‍ය ජාවාරම්, පාතාල කණ්ඩායම්වල ක්‍රියාකාරකම් සහ ආයුධ ජාවාරම් මැඬලීම සඳහා ඉතා දැඩි සහ ශක්තිමත් ක්‍රියාමාර්ග ගනිමින් සිටී.

රටපුරා මත්ද්‍රව්‍ය බෙදාහැරීමේ ජාල අඩාල කිරීම සඳහා "A Nation United" නමින් විශේෂ ආරක්ෂක ඒකකයක් සහ ඒකාබද්ධ මෙහෙයුමක් ක්‍රියාත්මක කර තිබේ. අත්අඩංගුවට ගත් මත්ද්‍රව්‍ය යළි සමාජයට ඇතුළුවීම වැළැක්වීම සඳහා මත්ද්‍රව්‍ය අත්අඩංගුවට ගත් ස්ථානයේම ක්ෂණිකව විනාශ කිරීම සඳහා නව නීතිමය මූලාශ්‍ර නිර්මාණය කරන ලෙස ජනාධිපතිවරයා නියෝග කර තිබේ.

මත්ද්‍රව්‍ය ජාවාරමෙන් නීතිවිරෝධී ලෙස උපයාගත් රුපියල් කෝටි ගණනක වත්කම් රජයද රාජසන්තක කරමින් සිටී. "නීතිය ඉදිරියේ සියල්ලෝම සමානය" යන මූලධර්මය මත දේශපාලන හෝ වෘත්තීය පසුබිම කුමක් වුවත් අපරාධකරුවන්ට එරෙහිව නීතිය ක්‍රියාත්මක කරන බව ජනාධිපති මාධ්‍ය අංශය සහ ආරක්ෂක අමාත්‍යාංශය දිගින් දිගටම අවධාරණය කරයි. මේවා අපරාධකාරයන්ගේ පැත්තෙන් ද රජයට අභියෝගයක් වී ඇත.

මෙවැනි ගැටලුවලට තිත තැබීම සඳහා බන්ධනාගාර දෙපාර්තමේන්තුව, පොලිස් මත්ද්‍රව්‍ය නාශක අංශය සහ බුද්ධි අංශ එක්ව සැලසුම් සහගත උත්සාහයන් ව්‍යර්ථ කිරීමට අඛණ්ඩ අධීක්ෂණ කටයුතු සිදු කරයි.

ඒ අනුව කළුතර සහ පූසා වැනි උපරිම ආරක්‍ෂිත බන්ධනාගාරවල බාහිර ආරක්‍ෂාව විශේෂ කාර්ය බළකායට (STF) පවරා ඇත. බන්ධනාගාර තුළ ජංගම දුරකථන භාවිතය වැලැක්වීම සඳහා ජෑමර් සහ නවීන ස්කෑනර් යන්ත්‍ර සවි කෙරෙනවා.

මත්ද්‍රව්‍ය ජාවාරම්කරුවන්ට උදව් කරන දූෂිත බන්ධනාගාර නිලධාරීන් හඳුනාගෙන ඔවුන්ට එරෙහිව දැඩි නීතිමය ක්‍රියාමාර්ග ගැනීමට කටයුතු කරනවා. බන්ධනාගාරවල සිදුවන නීතිවිරෝධී ක්‍රියා මැඩලීමට සහ පරිපාලනමය දෝෂ මඟහරවා ගැනීමට විශේෂ විමර්ශන ක්‍රියාත්මකයි. මීට අමතරව බන්ධනාගාර තදබදය අවම කිරීම සඳහා විකල්ප සහ පුනරුත්ථාපන මධ්‍යස්ථාන පුළුල් කිරීමට සැලසුම් කර ඇත.

එමෙන්ම මත්ද්‍රව්‍ය ජාවාරම්කරුවන් සහ පාතාල නායකයින් අනෙකුත් රැඳවියන්ගෙන් වෙන් කිරීමට විශේෂ අධි ආරක්ෂිත බන්ධනාගාර ඒකක යොදා ගැනේ. මීට අමතරව බන්ධනාගාර තුළට මත්ද්‍රව්‍ය සහ මත්ද්‍රව්‍ය ප්‍රවාහනය කිරීම වැළැක්වීම සඳහා විශේෂ රහස් පරීක්ෂක ඒකක ද යොදවා ඇත.

දැනට රැඳවියන් 11,000ට වඩා 39,000කට අධික රැඳවියන් සිටින අතර, ජාතික ජන බලවේගය රජය වැලිසර නව බන්ධනාගාරයක් ඉදිකිරීමට සහ තාවකාලික ගොඩනැගිලි බන්ධනාගාර බවට පත් කිරීමට අවසර ලබා දී ඇත.

බන්ධනාගාර තදබදය අවම කිරීමේ උත්සාහයක් ලෙස ඇතැම් සිරකරුවන් ඉලෙක්ට්‍රොනික නිරීක්ෂණ සහිතව නිවාස අඩස්සියේ තැබීමට මූලික කෙටුම්පත් සකස් කරමින් පවතී. බන්ධනාගාරගතව සිටින පිරිසෙන් 70%ක් මත්ද්‍රව්‍යවලට සම්බන්ධ අය බැවින් ඔවුන් සිරගත කිරීම වෙනුවට සෑම දිස්ත්‍රික්කයකම පුනරුත්ථාපන මධ්‍යස්ථාන පිහිටුවා ඔවුන් සමාජගත කිරීමට රජය මුදල් වෙන්කර තිබේ.

වත්මන් NPP ආන්ඩුවේ දිගුකාලීන ඉලක්කය වන්නේ මෙවැනි "ගතික ආරක්‍ෂාව" සහ ජනාධිපති අනුර කුමාර දිසානායකගේ ආණ්ඩුවේ තාක්‍ෂණික යෙදුම් හරහා බන්ධනාගාර අපරාධකරුවන් ප්‍රතිසංස්කරණය කිරීමේ මධ්‍යස්ථාන බවට පත් කිරීම මිස පළිගැනීමේ ස්ථාන නොවේ.

පසුගිය කාලයේ රජයේ මෙහෙයුම් හරහා හෙරොයින්, අයිස් (ක්‍රිස්ටල් මෙතම්ෆෙටමින්) සහ කොකේන් කිලෝග්‍රෑම් දහස් ගණනක් අත්අඩංගුවට ගෙන ඇත. මත්ද්‍රව්‍ය සහ පාතාල කල්ලිවලට දේශපාලන රැකවරණ ලබාදීම සම්පූර්ණයෙන්ම නවතා දමා ඇති අතර නීතිවිරෝධී සබඳතාවලට සම්බන්ධ පොලිස් නිලධාරීන්ට සහ සිවිල් සේවකයන්ට වහාම ඉන් ඉවත් වන ලෙසට අනතුරු අඟවා තිබේ.

අද ශ්‍රී ලංකාවේ බන්ධනාගාර දේශපාලන පිටිය බවට පත් කිරීමට දරන ප්‍රයත්නය පිටුපස මත්ද්‍රව්‍ය ජාවාරම්කරුවන් සිටිය හැකි බවට සැක මතුවීමට ප්‍රධාන හේතුව එයයි. ඒ සඳහා බන්ධනාගාරවල ආරක්‍ෂාව දුර්වල කර නීති විරෝධී ක්‍රියා දිගටම කරගෙන යන නාට්‍ය තිරය පිටුපස වේදිකාගත කළ හැකිය.

එය එසේ වුවද, ආණ්ඩුවේ මෙවැනි ඒකාබද්ධ තහංචි නිසා සිරගෙවල් දේශපාලන හෝ අපරාධ මර්මස්ථාන බවට පත්වීම සීමා කර ඇතත්, මෙම අභියෝගය මුළුමනින්ම තුරන් කිරීම සඳහා අඛණ්ඩ නිරීක්ෂණ සහ නවීන තාක්ෂණික වර්ධනයන් අවශ්‍ය බව සත්‍යයකි.

අහමඩ් ඉර්ෂාඩ්.
අද දිනකරන් පුවත්පත, 
10-08-2026.
සිංහල පරිවර්තනය සමඟ) அரசியல் சதித் திட்டங்கள் தீட்டப்படும் இடங்களாக மாறும் சிறைச்சாலைகள்.! சிறைக் கலவரங்களின் உண்மைப் பின்னணி.! Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 11, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.