Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கிழக்கு மாகாண சாலைப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தவிசாளரின் பொறுப்புக்கள் ஏராளம் நிறைந்தது....


கிழக்கு மாகாண சாலைப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தவிசாளராக (Chairman) தோழர் MBM. பிர்தௌஸ் (நளீமி) பதவியேற்றுள்ளார்.

மேற்படி நியமனத்துக்கான கடிதம் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர ஊடாக இன்று (20) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சாலைப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை (Eastern Province Road Passenger Transport Authority (EPRPTA) என்பது கிழக்கு மாகாணத்தில் சாலை வழி பொதுப் போக்குவரத்து (மாகாண பஸ் சேவைகள்) ஒழுங்குபடுத்தும் சட்டபூர்வ நிறுவனமாகும்.

கிழக்கு மாகாண சாலைப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின்  தவிசாளரின்  பெறுப்புக்கள் இலேசுபட்டவையல்ல நீதீ, நேர்மை, பேதமின்றி பணியாற்றவேண்டிய ஒரு மகத்தான பதவியாகும். 

கிழக்கு மாகாண சாலைப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின்  தவிசாளரின்  பெறுப்புக்கள் ஏராளம் நிறைந்தவை என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை.அதனையே தோழர் MBM. பிர்தௌஸ் (நளீமி) பொறுப் பேற்றுள்ளார்.

மேற்படி பொறுப்புக்ககளை திறம்படச்செய்யும் ஆற்றல் தோழர் MBM. பிர்தௌஸ் (நளீமி) உண்டு. 

தேசிய மக்கள் சக்தி அரசு வழங்கிய இந்த நியமணம் தோழர் MBM. பிர்தௌஸ் (நளீமி) கொடுத்த மகத்தான கெளரவமாகும்.

இது மாகாண சபைக்கு உட்பட்ட அதிகாரசபையாக செயல்படுகிறது.

முக்கிய பணிகள்;

  • மாகாண பஸ் அனுமதிப்பத்திரங்களை (Route Permits) வழங்குதல் மற்றும் புதுப்பித்தல்.
  • தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பஸ் சேவைகளை ஒழுங்குபடுத்துதல்.
  • புதிய பஸ் பாதைகளை திட்டமிடுதல்.
  • பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான போக்குவரத்து சேவையை உறுதி செய்தல்.
  • பஸ் நிலையங்கள் மற்றும் பயணிகள் வசதிகளை மேம்படுத்துதல்.
  • போக்குவரத்து தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகளைப் பரிசீலித்தல். உட்பட மேலும் பல.
  •     
  • செயற்பாட்டு எல்லை .

  • கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் சேவையாற்றுகிறது:  
  • திருகோணமலை.
  • மட்டக்களப்பு.
  • அம்பாறை.  என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கிழக்கு மாகாண சாலைப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தவிசாளரின் பொறுப்புக்கள் ஏராளம் நிறைந்தது.... Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 20, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.