Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

සිංහල පරිවර්තනය සමඟ) மூவின மக்களையும் இணைக்கும் "இலங்கையர் தினம்"— பிரிவினை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் புதிய தேசிய அடையாளம்!


සිංහල පරිවර්තනය සමඟ) மூவின மக்களையும் இணைக்கும் "இலங்கையர் தினம்"— பிரிவினை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் புதிய தேசிய அடையாளம்! 

மதவாத ஆயுங்களை பயண்படுத்தி மக்களை பிளவுபடுத்த முடியாது.

இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மூவின மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் ஒரு பொதுவான தேசிய கலாச்சாரப் பெருநாளை உருவாக்குவது நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும்.

இந்தியாவின் கேரளா மாநிலத்தின் 'ஓணம்' பண்டிகையைப் போல, மத வேறுபாடுகளைக் கடந்து 'அனைவரும் இலங்கையர்கள்' என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும்.

இலங்கை என்பது பிரிந்து வாழ வேண்டிய நாடல்ல. அனைவரும் சம உரிமையுடன், சம மரியாதையுடன்,அமைதியாக வாழும் ஒரே இலங்கையர் சமூகமாக முன்னேற வேண்டிய நாடாகும். 

இலங்கையில் சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய மூவினங்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் ஒரு பொதுவான தேசிய பெருநாள் தினத்தை உருவாக்குவது என்பது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் "சகலருக்கும் சமத்துவமான வாழ்வு மற்றும் ஒருங்கிணைந்த இலங்கை" என்ற கொள்கைக்கு மிக வலுவானதொரு அடித்தளமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இத்தகைய முயற்சி எந்தவொரு சமூகத்தின் மத அல்லது கலாச்சார அடையாளத்தையும் அழிப்பதற்கானது அல்ல. மாறாக, வெவ்வேறு மதங்களையும் இனங்களையும் சேர்ந்த மக்கள் ஒரே நாட்டின் குடிமக்களாக, ஒரே மக்களாக, ஒருவருடைய உரிமையை மற்றொருவர் மதித்து வாழ்வதற்கான தேசிய உணர்வை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாக இருக்கின்றது.

ஆனால், கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல் காலங்களில், இதுபோன்ற தேசிய ஒருமைப்பாட்டுக்கான கருத்துக்கள்கூட சில முஸ்லிம் தனித்துவ அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களால் மதவாதக் கோணத்தில் திரிபுபடுத்தப்பட்டன. முஸ்லிம் மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி, அநுர குமார திசாநாயக்கவுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் எதிரான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் மதவாத தேர்தல் மேடைகளாக மாற்றியமைத்தார்கள்.


அநுர குமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள் தடை செய்யப்படும் என்றும், புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்ற முடியாது என்றும், மீலாத்துன் நபி நிகழ்வுகள் தடை செய்யப்படும் என்றும், நோன்புக் காலங்களில் முஸ்லிம் பாடசாலைகள் திறக்கப்படும் என்றும், இறுதியில் முஸ்லிம்களின் மத, பண்பாட்டு, கலாச்சார உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு அவர்கள் நாட்டில் ஓரங்கட்டப்படுவார்கள் என்றும் பல்வேறு அச்சமூட்டும் பிரசாரங்களை முன்னெடுத்தார்கள்.

இவை வெறும் அரசியல் கருத்து வேறுபாடுகளாக மட்டும் பார்க்க முடியாது. ஒரு சமூகத்தின் மத உணர்வுகளையும் எதிர்கால வாழ்வையும் அச்சுறுத்தும் வகையில் முன்வைக்கப்பட்ட இத்தகைய பிரசாரங்கள், தேர்தல் வெற்றிக்காக மக்களின் உணர்வுகளைப் பயன்படுத்திய அருவருப்பான அரசியல் கலாச்சாரத்தின்  வெளிப்பாடாகவே மூவின மக்கள் மத்தியில் உள்ள புத்திஜீகள் மற்றும் நடுநிலை சிந்தனையாளர்களால் பார்க்கப்பட்டன.

ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் உண்மை நிலை என்ன? அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இரண்டு வருட காலத்திற்குள், முஸ்லிம் மக்களின் மத உரிமைகள் பறிக்கப்பட்டதாகவோ, அவர்களின் வழிபாட்டு நடைமுறைகள் தடை செய்யப்பட்டதாகவோ, அவர்களின் கலாச்சார அடையாளங்கள் ஒடுக்கப்பட்டதாகவோ எங்கும் இல்லை.
அவர்களுடைய தேர்தல் கால மதவாத கருத்துக்களை திணிக்க மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் மூஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பொய்யாக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து சமூகங்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்ற அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. முஸ்லிம் மக்களும் இலங்கையின் சம உரிமை கொண்ட குடிமக்களே என்ற அணுகுமுறையுடன் அரசாங்கம் செயற்படுகின்றது. தேர்தல் முஸ்லிம் தனித்துவ அரசியல்வாதிகளினால் திணிக்கப்பட்ட மதவாத அச்ச அரசியலுக்கும் NPP ஆட்சியின் நடைமுறை அணுகுமுறைக்கும் இடையிலான வித்தியாசத்தை தெளிவாக ஜனாதிபதியின் ஆட்சி வெளிப்படுத்துகிறது.

அண்டை நாடான இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் எனப் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களுக்கே உரித்தான தனித்தனி பண்டிகைகளும், சமயப் பாரம்பரியங்களும் இருக்கின்றன. எனினும், மத வேறுபாடுகளைத் தாண்டி மாநிலத்தின் ஒருமைப்பாட்டையும், அனைத்து சமூகங்களினதும் சமத்துவமான வாழ்வையும் முன்னிறுத்தும் வகையில் “ஓணம்” பண்டிகையை கேரளாவின் ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடுகின்றனர்.

இதுவே கேரளத்தின் தனித்துவமான சமூகப் பண்பாட்டின் சிறப்பாகும். ஓணம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கான பண்டிகையாக மட்டும் பார்க்கப்படாமல், கேரள மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு பொதுவான கலாசார விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் மத நல்லிணக்கம், சகோதரத்துவம், சமூக ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகிய உயர்ந்த விழுமியங்களை கேரள மக்கள் உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றனர்.


கேரள மக்கள் தங்களது மத அடையாளங்களை மதித்துக் கொண்டே, பொதுவான சமூக அடையாளத்தின் கீழ் ஒன்றிணைந்து வாழ்கின்றனர். “நான் இந்து”, “நான் முஸ்லிம்”, “நான் கிறிஸ்தவர்” என்பதற்கு அப்பால், “நான் ஒரு மலையாளி; நான் கேரளாக்காரன்” என்ற பெருமிதமான அடையாளத்தையும் அவர்கள் முன்னிறுத்துகின்றனர். இந்தப் பொதுவான அடையாளமே கேரள மக்களை இந்தியாவிற்குள்ளும், இந்தியாவிற்கு வெளியிலும் தனித்துவமான சமூகமாக அடையாளப்படுத்துகின்றது.

கேரளாவின் சமூக முன்னேற்றத்திலும் தேசிய மற்றும் கலாச்சார ஒற்றுமை முக்கிய பங்காற்றியுள்ளது. கல்வி, சுகாதாரம், சமூக மேம்பாடு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் போன்ற பல துறைகளில் கேரளா இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மக்களிடையே காணப்படும் சமூகப் பொறுப்பு, கல்வி மீதான ஆர்வம்,மதங்களுக்கிடையே உள்ள சமத்துவம் மற்றும் பொதுநலச் சிந்தனை ஆகியவை மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு வலுச்சேர்க்கின்றன.

எனவே, இந்தியாவின் கேரளா மாநிலத்தின் "ஓணம்" என்பது வெறும் ஒரு தேசிய பண்டிகை அல்ல. அது மதம் எனும் “வேறுபாடுகளுக்குள் ஒற்றுமை” என்ற மகத்தான சமூகச் செய்தியை வெளிப்படுத்தும் ஒரு வாழ்வியல் அடையாளமாகும். மதங்கள் வேறுபட்டாலும் மனிதர்கள் ஒன்றே; வழிபாட்டு முறைகள் வேறுபட்டாலும் மனிதநேயம் ஒன்றே; சமூக அடையாளங்கள் வேறுபட்டாலும் அனைவருக்கும் சமமான மரியாதையும் உரிமையும் இருக்க வேண்டும் என்பதையே ஓணம் பண்டிகை உலகிற்கு உணர்த்துகின்றது.

இந்த நிலையில், எமக்கு மத்தியில் மதவாதக் கருத்துக்கள் எங்கிருந்து உருவாகின்றன? அவற்றை யார் தூண்டுகின்றார்கள்? எதற்காக மக்களின் மத உணர்வுகளை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றார்கள்? என்ற கேள்விகளுக்கான பதிலைத் தேடும்போது, அதன் பின்னால் மக்களின் நலன் சம்பந்தமான எந்த விடயத்தையும் காண முடியாது. அதிகாரத்தைப் பெறவும், தமது தனித்துவ அரசியலைத் தக்கவைத்துக் கொள்ள முயலும் அரசியல் சிந்தனையே என்பதே தெளிவாகிறது.

இலங்கை முஸ்லிம்களின் மதமும் கலாச்சாரமும் அவர்களின் வாழ்வின் அங்கமாகவும் உணர்வு பூர்வமான இறை நம்பிக்கையாகவும் உள்ளது. நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள், மீலாதுன் நபி போன்றவை தலைமுறைகளை இணைக்கும் நம்பிக்கையின் அடையாளங்களாகும். இவற்றை யாரும்  அரசியல் அச்சிருத்தலாக பார்ப்பது முஸ்லிலேல் மக்களின் உணர்வுகளை அவமதிப்பதற்கு சமனாகும்

கடந்த தேர்தல்களில், “அநுர குமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் மத உரிமைகள் பாதிக்கப்படும்” என்ற அச்சத்தை உருவாக்க பல்வேறு மதவாதக் கருத்துக்களை தனித்துவ கட்சிகளின் தலைமைகளால் முன்வைக்கப்பட்டன. ஆனால் முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மையான மக்கள் அத்தகைய மதவாத கருத்துக்களை புறம்தள்ளியும், இனவாத அரசியலை நிராகரித்தும், மாற்றத்திற்கும் சமத்துவத்திற்கும், நம்பிக்கைக்கும் வாக்களித்தனர்.

இன்று மீண்டும் அதே பழைய அரசியல் ஆயுதத்தை எடுக்க முயற்சிப்பவர்கள் ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, முஸ்லிம் மக்களின் மத உணர்வு அவர்களுடையது. எந்தவொரு ஒருங்கிணைந்த தேசத்தின் மீது பற்று வைக்காத அரசியல்வாதிக்கும் அதன் மீது உரிமை எடுத்துக்கொள்ளவோ அல்லது அதை வைத்து முஸ்லிம் சமூகத்தை பிரித்தாளும் அரசியல் செய்யவோ இடமில்லை.

இலங்கை என்பது சிங்களவர், தமிழர், முஸ்லிம் என தனித்தனி அரசியல் முகாம்களாகப் பிரிந்து வாழ வேண்டிய நாடல்ல. அனைவரும் சம உரிமையுடன், சம மரியாதையுடன், அமைதியாக வாழும் ஒரே இலங்கையர் சமூகமாக முன்னேற வேண்டிய நாடாகும். அந்த அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அரசியல் கொள்கைப் பயணமாக உள்ளது.

மதம் மக்களை ஒழுக்கமான மற்றும் சீரான பாதையில் வழி நடத்தட்டும். ஆனால் மதவாத அரசியல் ஆயுதத்தை பயண்படுதி மக்களைப் பிரிக்க அனுமதிக்கக் முடியாது. முஸ்லிம்களின் நம்பிக்கையை மதிப்பதும், அவர்களின் உரிமைகளை உறுதி செய்வதும் பிரிவினை அரசியலாலோ அல்லது மதவாத அரசியல் ஆயுதத்தாலோ இயலவே இயலாத ஒன்றாகும். அதனை சமத்துவமான இலங்கையால் மட்டுமே சாத்தியமாக்க முடியும்.

அதிகாரம் என்பது சிலருக்காக மட்டும் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. அது அனைத்து மக்களுக்கும் உரித்தானதாகும்.
அரசியல் என்பது பிரிவினைக்காக வகுக்கப்பட்ட விடயமும் அல்ல. ஒருமைப்பாட்டுக்காக வரையப்பட்ட சாத்தியமான செயற்பாட்டு நடை முறையாகும்.

அதில், இலங்கை — அனைவருக்கும் சமமான நாடு என்ற வகையில் மதம், மொழி, சமூகப் பின்னணி போன்ற வேறுபாடுகளைத் தாண்டி, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, சகோதரத்துவத்துடனும் மனித நேயத்துடனும் வாழும் சமூகமாக மாற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டிய புதிய அரசியல் கலாச்சாரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றறோம்.

ஒரு பொதுவான நன்னாளில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்படும்போது, இனங்களுக்கு இடையிலான சந்தேகங்களும் விரிசல்களும் நீங்கி, பரஸ்பர நம்பிக்கையும் மரியாதையும் கட்டியெழுப்பப்படும் கடந்த காலப் பிரிவினைவாத அரசியல் சிந்தனைகளில் இருந்து விடுபட்டு, பல்லினத்தன்மை கொண்ட ஒரு நவீன ஜனநாயக நாடாக இலங்கையை உலகிற்கு அடையாளப்படுத்த இது உதவும்.

இலங்கையின் தற்போதைய அரசமைப்பில் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசிய தினங்கள் இருந்தாலும், அவை பெரும்பாலும் அரசியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகளோடு மட்டுமே தொடர்புபட்டவையாக உள்ளன. மாறாக, மக்களின் அன்றாட வாழ்வியலையும், கலாசாரப் பிணைப்பையும் பிரதிபலிக்கும் வகையிலான ஒரு "தேசிய கலாசார பெருநாள்" அல்லது "இலங்கையர் தினம்" போன்றவொன்றை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்துவது இந்த மாற்றத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கும்.

சிங்களவர், தமிழர், முஸ்லிம் என வெவ்வேறு அடையாளங்களைக் கொண்டிருந்தாலும், “நாம் அனைவரும் இலங்கையர்கள்” என்ற பொதுவான தேசிய அடையாளத்தை வலுப்படுத்துவதே எதிர்கால இலங்கைக்கான மிகப்பெரும் தேவையாக உள்ளது.

அதற்கான ஒரு குறியீடாக, மூவின மக்களும் சமமாக பங்கேற்று மகிழக்கூடிய ஒரு பொதுவான தேசியப் பெருநாள் உருவாக்கப்படுமானால், அது ஒரு விழாவை உருவாக்குவது மட்டுமல்லாமல் பிரிவினைகளைத் தாண்டி புதிய தேசிய உணர்வை உருவாக்கும் வரலாற்று முயற்சியின் வெற்றியாகவும் அமையும்.

அதனடிப்படையில், ஒருவரின் மதத்தை மதித்துக்கொண்டே, மற்றவரின் மதத்தையும் மதித்து, பொதுவான சமூக அடையாளத்தின் கீழ் ஒன்றிணைந்து வாழ முடியும். அதனால்தான் "ஓணம்" கேரள மக்களின் மனங்களில் ஒரு பண்டிகையைத் தாண்டி, ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மனித நேயத்தின் தேசியப் பெருவிழாவாக உயர்ந்து நிற்கிறது.

ஆகவே, இந்தியாவின் கேரளா மாநிலத்தில் வாழும் மக்களின் அரசியல் கலாச்சாரம் மற்றும் இன்ன பிற நடவடிக்கைகளை வைத்து பார்க்கும் பொழுது, வெவ்வேறு மத, கலாசாரப் பின்னணிகளைக் கொண்ட மக்கள் தங்களுக்குள் இருக்கும் எல்லைகளைக் கடந்து, "நாங்கள் அனைவரும் இலங்கையர்கள்" என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்ற சமத்துவ வாழ்வியலுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தூரநோக்கு சிந்தனையும் எவறாலும் மறுக்க முடியாத உண்மையை வெளிபடுத்தி நிற்கின்றது.

அஹமட் இர்ஷாட்.
20-09-2026

 ජාතීන් තුනම එකමුතු කරන "ශ්‍රී ලංකා දිනය" - බෙදීමේ දේශපාලනය අවසන් කරන නව ජාතික අනන්‍යතාවයක්!
ජාතීන් තුනම එකමුතු කරන "ශ්‍රී ලංකා දිනය" - බෙදීමේ දේශපාලනය අවසන් කරන නව ජාතික අනන්‍යතාවයක්! 

ආගම්වාදය කියා ජනතාව බෙදන්න බැහැ.

ශ්‍රී ලංකාවේ සිංහල, දෙමළ, මුස්ලිම් ප්‍රජාවන් විසින් සැමරීමට පොදු ජාතික සංස්කෘතික දිනයක් නිර්මාණය කිරීම රටේ ජාතික සමගිය ශක්තිමත් කරනු ඇත.

ඉන්දියාවේ කේරළ ප්‍රාන්තයේ ‘ඕනම්’ උත්සවය මෙන් ආගම් භේදයන් ඉක්මවා ‘සියලු ශ්‍රී ලාංකිකයන්’ යන තනි අනන්‍යතාවය යටතේ ජනතාව එක්විය යුතුය.

ශ්‍රී ලංකාව හුදෙකලාව ජීවත් විය යුතු රටක් නොවේ. සියලු දෙනාම සමාන අයිතිවාසිකම්, සමාන ගෞරවය හා සාමයෙන් ජීවත්වන එකම ශ්‍රී ලාංකීය සමාජයක් ලෙස ඉදිරියට යා යුතු රටකි.
++++++++++++++++++

ශ්‍රී ලංකාවේ සිංහල, දෙමළ, මුස්ලිම් සියලු දෙනා එක්ව සැමරීමට පොදු ජාතික දිනයක් නිර්මාණය කිරීම අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයා ප්‍රමුඛ රජයේ “සැමට සමාන ජීවිතයක් සහ ඒකීය ශ්‍රී ලංකාවක්” යන ප්‍රතිපත්තියට ඉතා ශක්තිමත් පදනමක් වනු නොඅනුමානය.

එවැනි ප්‍රයත්නයක් දරන්නේ කිසිම ජන කොට්ඨාසයක ආගමික හෝ සංස්කෘතික අනන්‍යතාව විනාශ කිරීමට නොවේ. ඒ වෙනුවට, විවිධ ආගම් සහ ජාතීන්ට අයත් මිනිසුන්ට එක රටක පුරවැසියන් ලෙස, එක ජනතාවක් ලෙස, එකිනෙකාගේ අයිතිවාසිකම්වලට ගරු කරමින් ජීවත් වීමට ජාතිකත්වය පිළිබඳ හැඟීම ශක්තිමත් කිරීම එහි අරමුණයි.

නමුත් පසුගිය ජනාධිපතිවරණ සහ පාර්ලිමේන්තු මැතිවරණවලදී ඇතැම් මුස්ලිම් පුද්ගලවාදී දේශපාලන පක්ෂවල සාමාජිකයන් විසින් ජාතික සමගිය පිළිබඳ එවැනි අදහස් පවා කල්ලිවාදී කෝණයකට විකෘති කරන ලදී. ඔවුන් මුස්ලිම් ජනතාවගේ ආගමික හැඟීම් අවුස්සමින් අනුර කුමාර දිසානායකට සහ ජාතික ජන බලවේගයට එරෙහිව දේශපාලන අවියක් කර ගැනීමට ඒවා කල්ලිවාදී මැතිවරණ වේදිකාවක් බවට පත් කළහ.

අනුර කුමාර දිසානායක බලයට ආවොත් මුස්ලිම් උපවාස දිනය තහනම් කරනවා, ශුද්ධ වූ හජ් වගකීම් ඉටු කරන්නේ නැහැ, මිලාතුන් නබි උත්සව තහනම් කරනවා, උපවාස කාලය තුළ මුස්ලිම් පාසල් විවෘත කරනවා, අවසානයේ මුස්ලිම් ජනතාවගේ ආගමික, සංස්කෘතික, සංස්කෘතික අයිතීන් සියල්ල උදුරා දමා රට තුළ කොන් කරනවා.

මේවා හුදු දේශපාලන වෙනස්කම් ලෙස දැකිය නොහැක. ප්‍රජාවක ආගමික හැඟීම්වලට හා අනාගත ජීවිතයට තර්ජනයක් වන ලෙස ඉදිරිපත් කරන මෙවැනි ප්‍රචාර ත්‍රිවිධ කුලවල බුද්ධිමතුන් සහ මධ්‍යස්ථ චින්තකයින් විසින් දුටුවේ මැතිවරණ ජයග්‍රහණය සඳහා ජනතාවගේ හැඟීම් ගසාකන පිළිකුල් සහගත දේශපාලන සංස්කෘතියක ප්‍රකාශනයක් ලෙසය.

නමුත් පාලන තන්ත්‍රය වෙනස් වීමෙන් පසු යථාර්ථය කුමක්ද? අනුර කුමාර දිසානායක ප්‍රමුඛ රජය බලයට පත්වී වසර දෙක තුළ මුස්ලිම් ජනතාවගේ ආගමික අයිතීන් උදුරා ගැනීමක්, ඔවුන්ගේ ආගමික වත්පිළිවෙත් තහනම් කිරීමක් හෝ ඔවුන්ගේ සංස්කෘතික අනන්‍යතාවයන් යටපත් කිරීමක් කොතැනකවත් සිදුව නැත.
ඔවුන්ගේ මැතිවරණ කාලයේ ආගමික මත පැටවීමට දරන උත්සාහයන් සියල්ල මුස්ලිම් ප්‍රජාව අතර අපකීර්තියට පත්ව ඇත.

එසේම සියලු ජන කොටස් සමාන අයිතිවාසිකම් සහිතව ජීවත් විය යුතු බවට රජයේ දේශපාලන ස්ථාවරය නිරන්තරයෙන් අවධාරණය කර ඇත. මුස්ලිම් ජනතාව ශ්‍රී ලංකාවේ සමාන පුරවැසියන් යන ආකල්පයෙන් රජය ක්‍රියා කරයි. මැතිවරණ මුස්ලිම් අන්තවාදී දේශපාලඥයින් විසින් පනවා ඇති කල්ලිවාදී භීතිකා දේශපාලනය සහ NPP පාලනයේ ප්‍රායෝගික ප්‍රවේශය අතර වෙනස ජනාධිපති පාලනය පැහැදිලිවම පෙන්නුම් කරයි.

ඉන්දියාවේ අසල්වැසි ප්‍රාන්තවලින් එකක් වන කේරලයේ මුස්ලිම්, හින්දු සහ ක්‍රිස්තියානි වැනි විවිධ ආගම්වලට අයත් මිනිසුන් වාසය කරයි. සෑම ප්‍රජාවකටම ආවේණික වූ උත්සව සහ ආගමික සම්ප්‍රදායන් ඇත. කෙසේ වෙතත්, සමස්ත කේරළ ජනතාව "ඕනම්" උත්සවය සමරනු ලබන්නේ ප්‍රාන්තයේ සමගිය සහ ආගමික වෙනස්කම්වලින් ඔබ්බට සියලු ජන කොටස්වල සමාන ජීවිතය ප්‍රවර්ධනය කිරීම සඳහා ය.

කේරළයේ අද්විතීය සමාජ සංස්කෘතියේ හොඳම දේ මෙයයි. ඔනම් යනු කිසියම් ආගමක් සඳහා වන උත්සවයක් ලෙස පමණක් නොව, කේරළයේ සියලුම ජනයා එක්සත් කරන පොදු සංස්කෘතික උත්සවයක් ලෙස සමරනු ලැබේ. මේ හරහා කේරළ ජනතාව ආගමික සහජීවනය, සහෝදරත්වය, සමාජ සමගිය සහ අන්‍යෝන්‍ය ගෞරවය යන උසස් සාරධර්ම ලොවට පෙන්වා දෙනවා.

කේරළ ජනතාව තම ආගමික අනන්‍යතාවයන්ට ගරු කරන අතර පොදු සමාජ අනන්‍යතාවයක් යටතේ එකට ජීවත් වෙති. "මම හින්දු", "මම මුස්ලිම්", "මම ක්‍රිස්තියානි" හැරුණු විට, ඔවුන් "මම මලයාලි; මම කේරළ ජාතිකයෙක්" යන සාඩම්බර අනන්‍යතාවයක් ද ප්‍රක්ෂේපණය කරති. මෙම පොදු අනන්‍යතාවය කේරළයේ ජනතාව ඉන්දියාව තුළ සහ ඉන්දියාවෙන් පිටත අද්විතීය ප්‍රජාවක් ලෙස සලකුණු කරයි.

කේරලයේ සමාජ ප්‍රගතිය සඳහා ජාතික හා සංස්කෘතික සමගිය ද වැදගත් කාර්යභාරයක් ඉටු කර ඇත. අධ්‍යාපනය, සෞඛ්‍ය, සමාජ සංවර්ධනය, විදේශ රැකියා සහ ආර්ථික ප්‍රගතිය වැනි ක්ෂේත්‍ර රැසකින් කේරළය ඉන්දියාවේ ප්‍රමුඛතම ප්‍රාන්තයකි. රාජ්‍යයේ ප්‍රගතිය සඳහා සමාජ වගකීම, අධ්‍යාපනය කෙරෙහි ඇති උනන්දුව, අන්තර් ආගමික සමානාත්මතාවය සහ ජනතාව අතර පොදු සුබසාධන චින්තනය ශක්තිමත් වෙමින් පවතී.

ඉතින්, ඉන්දියාවේ කේරළ ප්‍රාන්තයේ "ඕනම්" යනු ජාතික උත්සවයක් පමණක් නොවේ. එය ආගම නම් "විවිධත්වයේ එකමුතුකම" යන මහා සමාජ පණිවිඩය දෙන ජීව විද්‍යාත්මක සංකේතයකි. ආගම් වෙනස් වුවත් මිනිසුන් එක හා සමානයි; ලබ්ධීන් වෙනස් වුව ද මනුෂ්‍යත්වය එක ම ය; සමාජ අනන්‍යතාව කුමක් වුවත් සැමට සමාන ගෞරවයක් හා අයිතිවාසිකම් තිබිය යුතු බව ඕනම් උත්සවය ලොවට කියාපායි.

මේ අවස්ථාවේ අප අතර ආගමික අදහස් ඇතිවන්නේ කොතැනින්ද? ඔවුන්ව පොළඹවන්නේ කවුද? මිනිසුන්ගේ ආගමික හැඟීම් දේශපාලන ආයුධයක් කර ගන්නේ ඇයි? කියන ප්‍රශ්නවලට උත්තර හොයනකොට ඒක පිටිපස්සේ මිනිස්සුන්ගේ සුබසාධනයට සම්බන්ධ දෙයක් හොයාගන්න බෑ. දේශපාලන චින්තනය යනු බලය ලබා ගැනීමටත් තමන්ටම ආවේණික දේශපාලනයක් පවත්වා ගැනීමටත් උත්සාහ කරන එකක් බව පැහැදිලිය.

ශ්‍රී ලාංකික මුස්ලිම්වරුන්ගේ ආගම සහ සංස්කෘතිය ඔවුන්ගේ ජීවිතයේ කොටසක් වන අතර දැඩි ඇදහිල්ලකි. Eid al-Adha, Eid al-Adha, Eid al-Adha, Eid al-Adha යනු පරම්පරාවන් සම්බන්ධ කරන ඇදහිල්ලේ සංකේත වේ. කවුරුන් හෝ මේවා දේශපාලන ප්‍රකාශනයක් ලෙස දැකීම මුස්ලිම් ජනතාවගේ හැඟීම්වලට නිග්‍රහ කිරීමට සමානය

පසුගිය මැතිවරණවලදී “අනුර කුමාර දිසානායක බලයට පැමිණියහොත් මුස්ලිම් ජනතාවගේ ආගමික අයිතීන්ට බාධාවක් වේවි” යන බිය ඇති කිරීමට එක් එක් පක්ෂවල නායකයන් විවිධ කල්ලිවාදී අදහස් ඉදිරිපත් කළා. නමුත් බහුතර මුස්ලිම් ප්‍රජාව එවැනි නිකායික අදහස් ප්‍රතික්ෂේප කර, වාර්ගික දේශපාලනය ප්‍රතික්ෂේප කර වෙනසක්, සමානාත්මතාවය සහ විශ්වාසය වෙනුවෙන් ඡන්දය දුන්හ.

අද පරණ දේශපාලන ආයුධයම නැවත අතට ගන්න හදන අය එක දෙයක් තේරුම් ගත යුතුයි. එනම් මුස්ලිම් ජනතාවගේ ආගමික විඥානය ඔවුන්ගේය. කිසිම ඒකීය ජාතියක් වෙනුවෙන් කැප නොවන දේශපාලඥයෙකුට එහි අයිතියක් කියන්නට හෝ ඒ මත මුස්ලිම් ප්‍රජාව දේශපාලනීකරණය කිරීමට තැනක් නැත.

ශ්‍රී ලංකාව යනු සිංහල, දෙමළ, මුස්ලිම් ලෙස වෙනම දේශපාලන කඳවුරුවලට බෙදිය යුතු රටක් නොවේ. සියලු දෙනාම සමාන අයිතිවාසිකම්, සමාන ගෞරවය හා සාමයෙන් ජීවත්වන එකම ශ්‍රී ලාංකීය සමාජයක් ලෙස ඉදිරියට යා යුතු රටකි. එම දේශපාලන සංස්කෘතිය නිර්මාණය කිරීම ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්‍රමුඛ ජාතික ජන බලවේගයේ නව දේශපාලන ප්‍රතිපත්ති ගමනයි.

මිනිසුන් සදාචාරාත්මක හා සමබර මාවතකට යොමු කිරීමට ආගමට ඉඩ දෙන්න. නමුත් කල්ලිවාදී දේශපාලනයේ ආයුධයට ජනතාව බෙදීමට ඉඩ දිය නොහැක. මුස්ලිම්වරුන්ගේ ඇදහිල්ලට ගරු කිරීම සහ ඔවුන්ගේ අයිතිවාසිකම් සහතික කිරීම බෙදුම්වාදී දේශපාලනයෙන් හෝ නිකායවාදී දේශපාලන ආයුධවලින් කළ නොහැකි දෙයකි. එය කළ හැක්කේ සමානාත්මතාවාදී ශ්‍රී ලංකාවකට පමණි.

බලය යනු සුළු පිරිසකට නිර්මාණය වූ දෙයක් නොවේ. එය සියලු මිනිසුන්ට අයත් වේ.
දේශපාලනය බෙදන කාරණයක් නොවේ. ඒකාබද්ධ කිරීම සඳහා සකස් කළ හැකි මෙහෙයුම් ක්රියා පටිපාටිය.

ශ්‍රී ලංකාව තුළ අප ජීවත් වන්නේ සියලු දෙනාම එක හා සමානව සිටින රටක් ලෙස ආගම්, භාෂා, සමාජ පසුබිම් භේදයන් අභිබවා, එකිනෙකා අතහැර සහෝදරත්වයෙන්, මනුෂ්‍යත්වයෙන් ජීවත්වන සමාජයක් ලෙස වෙනසක් කරා ගමන් කළ යුතු නව දේශපාලන සංස්කෘතියක ය.

ශ්‍රී ලංකාව විවිධත්වයෙන් යුත් නවීන ප්‍රජාතන්ත්‍රවාදී රටක් ලෙස ලොවට හඳුනා ගැනීමට එය ඉවහල් වනු ඇත, අතීත භේදකාරී දේශපාලන අදහස්වලින් මිදී සියලු දෙනා පොදු යහපතක් සඳහා එක්ව ක්‍රියා කරන, ජාතීන් අතර සැකයන් හා විරසක වීම් දුරු වී අන්‍යෝන්‍ය විශ්වාසය හා ගෞරවය ගොඩනැඟෙනු ඇත.

ශ්‍රී ලංකාවේ වත්මන් ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ නිදහස් දිනය සහ ජනරජ දිනය වැනි ජාතික දින තිබුණද ඒවා බොහෝ දුරට දේශපාලන හා ඓතිහාසික සිදුවීම් සමඟ සම්බන්ධ වේ. ඒ වෙනුවට ජනතාවගේ දෛනික ජීවිතය හා සංස්කෘතික බැඳීම් පිළිබිඹු කිරීම සඳහා "ජාතික සංස්කෘතික දිනයක්" හෝ "ශ්‍රී ලංකා දිනයක්" රජය විසින් නිල වශයෙන් හඳුන්වාදීම මෙම වෙනසට බෙහෙවින් ඉවහල් වනු ඇත.

සිංහල, දෙමළ, මුස්ලිම් ලෙස විවිධ අනන්‍යතා තිබුණද අනාගත ශ්‍රී ලංකාවට ඇති ලොකුම අවශ්‍යතාව වන්නේ “අපි සියල්ලෝම ශ්‍රී ලාංකිකයෝය” යන පොදු ජාතික අනන්‍යතාව ශක්තිමත් කිරීමයි.

එහි සංකේතයක් ලෙස තුන් ජාතියටම එකසේ සහභාගි වී භුක්ති විඳිය හැකි පොදු ජාතික දිනයක් නිර්මාණය වුවහොත් එය උත්සවයක් පමණක් නොව භේදවලින් ඔබ්බට ජාතිකත්වය පිළිබඳ නව හැඟීමක් ඇති කිරීමේ ඓතිහාසික වෑයම සාර්ථක වනු ඇත.

ඒ මත පදනම්ව තම ආගමට ගරු කරන අතරම අන් අයගේ ආගමට ගරු කරමින් පොදු සමාජ අනන්‍යතාවයක් යටතේ එකට ජීවත් විය හැකිය. "ඕනම්" කේරළ ජනතාවගේ සිත් තුළ උත්සවයක් අභිබවා එකමුතුකමේ සමානාත්මතාවයේ සහෝදරත්වයේ සහ මනුෂ්‍යත්වයේ ජාතික උත්සවයක් ලෙස ඉහළින්ම සිටින්නේ එබැවිනි.

එබැවින් ඉන්දියාවේ කේරළ ප්‍රාන්තයේ වෙසෙන ජනතාවගේ දේශපාලන සංස්කෘතිය සහ අනෙකුත් ක්‍රියාකාරකම් දෙස බලන විට විවිධ ආගමික හා සංස්කෘතික පසුබිම් ඇති මිනිසුන් දේශසීමා තරණය කර "අපි සැවොම ශ්‍රී ලාංකිකයෝ" යන තනි අනන්‍යතාවය යටතේ එක්විය යුතු බව අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමාගේ දූරදර්ශී චින්තනයෙන් ප්‍රතික්ෂේප කළ නොහැකි කරුණක් අනාවරණය වේ.

අහමඩ් ඉර්ෂාඩ්.
දිනකරන් වරමංජරි,
20-09-2026.
සිංහල පරිවර්තනය සමඟ) மூவின மக்களையும் இணைக்கும் "இலங்கையர் தினம்"— பிரிவினை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் புதிய தேசிய அடையாளம்! Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 21, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.