புதிய காத்தான்குடி நூரானியா ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தின் சிறந்த முன்மாதிரி.
புதிய காத்தான்குடி நூரானியா ஜூம்ஆ பள்ளிவாயலில் நீண்டகாலமாக பணியாற்றி வருகின்ற பேஷ் இமாம் மற்றும் முஅத்தீன் ஆகியோரை நிருவாகத்தின் ஏற்பாட்டில் புனித உம்ரா கடமைக்கு அனுப்பி வைக்கின்ற நிகழ்வு இன்று (20.09.2026) இஷா தொழுகையின் பின்னர் பள்ளிவாயலில் தலைவர் அல்ஹாஜ் BM. பாயிஸ் தலைமையில் இடம் பெற்றது.
புதிய காத்தான்குடி நூரானியா ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபையானது காத்தான்குடி வரலாற்றில் மிக முன்னுதாரணமாக பல விடயங்களை சிறப்பாக செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
நூரானியா ஜூம்ஆ பள்ளிவாயலில் கடமையாற்றிவரும் மௌலவி, அல்ஹாபிழ் NMM. சபான் (பலாஹி)
மற்றும் முஅத்தீன் MTM.வஜூகுதீன் ஆகியோரே புனித உம்ரா கடமைக்கு செல்கின்றனர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
சிறப்பு மிக்க நிகழ்வில் பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர்கள்,
உலமாக்கள்,ஜமாஅத்தார்கள், உம்ரா செல்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பள்ளிவாயல் பேஷ் இமாம் M. முஸ்தக்கீம்
(பலாஹி) நெறிப்படுத்தலுடன் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் காத்தான்குடி 5 மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் இமாம் M. பாயிஸ் (ஹுமைதி) இன் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இவர்களின் புனித பயணம் சிறப்பாக அமைய அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்.
(ஏ.எல்.டீன் பைரூஸ்)
-
புதிய காத்தான்குடி நூரானியா ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தின் சிறந்த முன்மாதிரி.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 21, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 21, 2026
Rating:































கருத்துகள் இல்லை: