Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

(සිංහල පරිවර්තනය සමග)ஓட்டமாவடி B/2ல் NPP அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள கிராமிய ஒற்றுமையின் உயிர் நாடி "அத்தம" வேலைத்திட்டம்.


சமூகத்தில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி, உழைப்பால் அனைவரும் சமம் என்ற சமத்துவச் சிந்தனையை உருவாக்குவதே 'அத்தம' வின் இலக்காகும்.
"க்ளீன் ஸ்ரீ லங்கா’ என்பது அரசாங்கத்தின் கொள்கைத் திட்டம் என்றால், ‘அத்தம’ என்பது அத்திட்டத்தை மக்களின் இதயங்களுக்குக் கொண்டு சேர்த்து வெற்றியாக்குவதற்கான சமூகக் தத்துவமாகவும் உள்ளது.


அதனடிப்படையில்,  இவ்வருடம் (2026) ஆகஸ்ட் 08 முதல் ஒவ்வொரு மாதத்தின் இறுதி வாரச் சனிக்கிழமையன்று 4 மணிநேரம் (காலை 8:00 முதல் நண்பகல் 12:00 வரை) தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற செயற்திட்டம் அறிமுகப் படுத்தப்படுகின்றது.


அதற்கமைவாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓட்டமாவடி B/2 பிரிவில் உள்ள அமீர் அலி விளையாட்ரங்கு அமைந்திருக்கும் பிரதேசத்தை சுத்தம் செய்யும் பணிகளாக பிராஜசக்தின் ஏற்பாட்டில் கிராமிய ஒற்றுமையின் உயிர் நாடி "அத்தம" வேலைத்திட்டமானது இன்று (08-08-2026) காலை 8.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.


ஓட்டமாவடி B/2 பிரஜாசக்தி தவிசாளர் அஹமட் இர்ஷாட் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுக்கு கோறளைப்பற்று மேற்கு பி.பதேச செயலத்தின் செயலாளர் ஏ.தாஹிர், உதவிச் செயலாளர் எம்.எச்.எம்.பாரூக், பிரதேச வைத்திய சுகாதார அதிகாரி வைத்தியர் தாரிக், க்ளீன்சிறீலங்கா அமைப்பாளர் புர்க்கான் மெளலவி, பொதுச் சுகாதார பரிசோதக அதிகாரிகளான நெளபல், சியாம், பிரஜாசக்தி செயாலாளர் றிசானா, ஏ.ஹனீபா (YSO), பிரதேச சபை உறுப்பினர் மாஜிதா, பிரதேச மாதர் சங்க அமைப்பினர், பிரஜாசக்தி உறுப்பினர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

(அஹமட் இர்ஷாட்)



ඔට්ටමාවාඩි බී/2 හි එන්පීපී රජය විසින් හඳුන්වා දුන් ග්‍රාමීය එකමුතුවේ ජීවනාලිය "ආතම" යෝජනා ක්‍රමයයි.


දුප්පත් පොහොසත් භේදයකින් තොරව රැකියාවෙන් සියල්ලෝම සමාන වන සමානාත්මතා චින්තනයක් සමාජය තුළ ඇති කිරීම ‘ආත්ම’ හි අරමුණයි.
“පිරිසිදු ශ්‍රී ලංකාව” රජයේ ප්‍රතිපත්ති සැලැස්ම නම්, එම සැලැස්ම ජනතාවගේ හදවතට ගෙන ගොස් එය සාර්ථක කර ගැනීමේ සමාජ දර්ශනයද “අත්තම” වේ.


ඒ මත පදනම්ව මේ වසරේ (2026) අගෝස්තු 08 වැනිදා සිට සෑම මසකම අවසන් සෙනසුරාදා දින පැය 4ක (පෙ.ව. 8.00 සිට මධ්‍යහ්න 12.00 දක්වා) පිරිසිදු කිරීමේ කටයුතු සිදු කළ යුතු බවට වැඩපිළිවෙළක් හඳුන්වා දෙනවා.


ඒ අනුව කෝරළෙයිපත්තුව බටහිර ඔටමාවාඩි ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශයට අයත් ඔට්ටමාවඩි බී/2 කොටසේ අමීර් අලි ක්‍රීඩාංගනය පිහිටි ප්‍රදේශයේ පිරිසිදු කිරීමේ කාර්යය ලෙස ග්‍රාමීය එකමුතුවේ ජීවනාලිය වන "අත්තම" ව්‍යාපෘතිය අද (2026-08-08) පෙ.ව 8.00 ට ප්‍රජාශක්ති සංවිධානයෙන් ආරම්භ කරන ලදී.


ඔට්ටමාවාඩි බී/2 බ්‍රජාශක්ති උප ප්‍රාදේශීය නිලධාරී අහමඩ් ඉර්ෂාඩ් මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවැති මෙම අවස්ථාවට ලේකම් ඒ.තාහීර්, සහකාර ලේකම් එම්.එච්.එම්. ෆාරුක්, ප්‍රාදේශීය වෛද්‍ය සෞඛ්‍ය නිලධාරී වෛද්‍ය තාරික්, ක්ලීන් ශ්‍රී ලංකා සංවිධායක බුර්කාන් මෙලලවි, මහජන සෞඛ්‍ය පරීක්ෂකවරුන් වන නෙලාපාල්, සියාම්, ප්‍රජාශක්ති ලේකම්. රිසානා, ඒ.හනීපා (වයි.එස්.ඕ.), ප්‍රාදේශීය සභා මන්ත්‍රී මජිත, ප්‍රාදේශීය මාතර සංගමයේ සංවිධායකවරු, ප්‍රජාශක්ති මන්ත්‍රීවරු, යෞවන සමාජ සාමාජිකයෝ ඇතුළු ප්‍රාදේශීය ජනතාව රැසක් සහභාගි වූහ.



(සිංහල පරිවර්තනය සමග)ஓட்டமாவடி B/2ல் NPP அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள கிராமிய ஒற்றுமையின் உயிர் நாடி "அத்தம" வேலைத்திட்டம். Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 08, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.