Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

புனரமைக்கப்பட்ட ஓட்டமாவடி புகாரி ஹாஜியார் வீதி – மக்கள் பயன்பாட்டிற்கு..!!!


ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பல வீதிகள் கடந்த காலங்களில் குன்றும் குழியுமாக காணப்பட்ட நிலையில், அவற்றில் ஒன்றான புகாரி ஹாஜியார் வீதி தற்போது புனரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், மக்களின் நீண்டகால தேவையை கருத்திற்கொண்டு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் ஊடாக இவ்வீதியை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து, மக்கள் எவ்வித தடைகளுமின்றி இவ்வீதியைப் பயன்படுத்தி வருகின்றனர்.


கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் என்ற வகையில், புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் புகாரி ஹாஜியார் வீதியை நேரில் சென்று பார்வையிட்டேன். இதன்போது அப்பகுதியில் வசிக்கும் மக்களை சந்தித்து, வீதியின் தற்போதைய நிலைமை தொடர்பாக அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தேன்.

நீண்டகாலமாக குன்றும் குழியுமாக காணப்பட்ட வீதி தற்போது சிறப்பாக புனரமைக்கப்பட்டு மக்கள் போக்குவரத்துக்கு இலகுவாக மாறியுள்ளமை குறித்து அப்பகுதி மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், வீதியை புனரமைத்து வழங்கியமைக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு தங்களது நன்றியையும் தெரிவித்தனர்.

மக்களின் அன்றாட தேவைகளுடன் நேரடியாக தொடர்புபட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே மக்களை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளின் நோக்கமாகும்.

மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து – தீர்வுகளை நடைமுறைப்படுத்தி – மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
மக்களுக்கான ஆட்சி • மக்கள் நலனுக்கான அபிவிருத்தி

ප්‍රතිසංස්කරණය කරන ලද බුහාරි හජ්ජියාර් වීදිය – ජනතාවගේ භාවිතයට..!!!

ඔට්ටමාවඩි ප්‍රාදේශීය සභාවට අයත් බොහෝ මාර්ග පසුගිය කාලය තුළ වලවල් හා ගැටිති සහිතව අබලන් තත්ත්වයක පැවති අතර, එවැනි මාර්ග අතරින් එකක් වූ බුහාරි හජ්ජියාර් වීදිය මේ වන විට ප්‍රතිසංස්කරණය කර ජනතාවගේ භාවිතයට ලබා දී ඇත.

ජාතික ජන බලවේග රජය බලයට පත්වීමෙන් අනතුරුව, ජනතාවගේ දිගුකාලීන අවශ්‍යතාවය සැලකිල්ලට ගනිමින් පළාත් සභා අරමුදල් වෙන් කිරීම හරහා මෙම මාර්ගය ප්‍රතිසංස්කරණය කිරීම සඳහා අවශ්‍ය කටයුතු සිදු කරන ලදී. මේ වන විට ප්‍රතිසංස්කරණ කටයුතු අවසන් කර ඇති අතර, ජනතාව කිසිදු බාධාවකින් තොරව මෙම මාර්ගය භාවිතා කරමින් සිටිති.

නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාරවරයාගේ සම්බන්ධීකරණ ලේකම්වරයා ලෙස, ප්‍රතිසංස්කරණ කටයුතු අවසන් කිරීමෙන් අනතුරුව බුහාරි හජ්ජියාර් වීදිය වෙත ගොස් එහි වත්මන් තත්ත්වය නිරීක්ෂණය කළෙමි. එහිදී ප්‍රදේශයේ ජනතාව හමුවී, මාර්ගයේ වත්මන් තත්ත්වය පිළිබඳ ඔවුන්ගේ අදහස් ද විමසා දැන ගත්තෙමි.

දිගු කාලයක් තිස්සේ වලවල් හා ගැටිති සහිතව පැවති මෙම මාර්ගය මේ වන විට නිසි ලෙස ප්‍රතිසංස්කරණය කර ජනතාවගේ ගමනාගමනය පහසු කර ඇති බවට ප්‍රදේශවාසී ජනතාව සතුට පළ කළ අතර, මාර්ගය ප්‍රතිසංස්කරණය කර ලබාදීම සම්බන්ධයෙන් ජාතික ජන බලවේග රජයට සිය ස්තූතිය ද පළ කළහ.

ජනතාවගේ දෛනික අවශ්‍යතා සමඟ සෘජුව සම්බන්ධ වන මූලික යටිතල පහසුකම් වැඩිදියුණු කරමින්, දිගුකාලීන ගැටලුවලට විසඳුම් ලබාදීම ජනතාව කේන්ද්‍ර කරගත් ජාතික ජන බලවේග රජයේ සංවර්ධන කටයුතුවල අරමුණයි.

ජනතාවගේ ගැටලු අසා – විසඳුම් ක්‍රියාත්මක කර – ජනතාවගේ ජීවිතවල වෙනසක් ඇති කරමු.

ජාතික ජන බලවේග රජය
ජනතාව සඳහා පාලනය • ජනතා සුබසාධනය සඳහා සංවර්ධනය
புனரமைக்கப்பட்ட ஓட்டமாவடி புகாரி ஹாஜியார் வீதி – மக்கள் பயன்பாட்டிற்கு..!!! Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 07, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.