வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் காத்தான்குடி பூர்வீக நூதனசாலைக்கு உத்தியோகபூர்வ விஜயம்
இலங்கைக்கான வியட்நாம், தாய்லாந்து, மியன்மார், இந்தோனேஷியா மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் (Ambersoders and High Commissioners) காத்தான்குடி பூர்வீக நூதனசாலைக்கு (Kattankudy Heritage Museum) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (10.07.2026) நடைபெற்ற இந்த விஜயத்தின் போது, வருகை தந்த உயர்ஸ்தானிகர்களுக்கு காத்தான்குடி நகர சபையின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
காத்தான்குடி நகர முதல்வர் SHM. அஸ்பர் அவர்களின் தலைமையில் துணை நகர முதல்வர் MIM. ஜெசீம், நகரசபை உறுப்பினர்கள், காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி ரினோஷா முப்லிஹ், கணக்காளர் M. இத்ரீஸ் (SLAcS) உட்பட பலரும் இணைந்து கொண்டு உயர்ஸ்தானிகர்களை வரவேற்றனர்.
மேற்படி நிகழ்வில் சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின்
தலைவர்,ஏ.எம்.ஜௌபர், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமையாளர், எம்.எச்.எம். மாஹிர்,கிழக்கு மாகாண சபை உள்ளூராட்சி ஆணையாளர், ATM.றாபி (SLAS)காத்தான்குடி பிரதேச செயலாளர்,நிஹாரா மௌஜூத் (SLAS) உதவி உள்ளூராட்சி ஆணையாளர் MRF. றிப்கா சபீன் (SLAS) ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.
காத்தான்குடிக்கு வருகை தந்த வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்களைக் கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நூதனசாலையின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் பாரம்பரியங்கள் குறித்தும் இதன்போது உயர்ஸ்தானிகர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் காத்தான்குடி பூர்வீக நூதனசாலைக்கு உத்தியோகபூர்வ விஜயம்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 14, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 14, 2026
Rating:
























கருத்துகள் இல்லை: