Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

KFL-7A- SIDE TROPHY - 2026 உதைப்பந்தாட்ட இறுதிநாள் நிகழ்வு; பிரதம அதிதியாக ஹிஸ்புல்லாஹ்


‘KFL 7A SIDE TROPHY - 2026’ உதைப்பந்தாட்ட இறுதிநாள் நிகழ்வு; பிரதம அதிதியாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

Kattankudy Football League (KFL) ஏற்பாட்டில் நடைபெற்ற ‘KFL 7A SIDE TROPHY - 2026’ கால்பந்தாட்ட தொடரின் இறுதிநாள் நிகழ்வு நேற்று (28) ஹிஸ்புல்லாஹ் பொது விளையாட்டு மைதானத்தில் காத்தான்குடி கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் என்.கே.எம் அரபாத் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில், Kattankudy Football League இன் ஆயுட்கால தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு போட்டிகளை பார்வையிட்டதுடன், வீரர்களின் திறமையையும் விளையாட்டுணர்வையும் பாராட்டினார்.


மூன்று நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற இத்தொடரில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 41 அணிகள் பங்கேற்றிருந்தன. இறுதிப்போட்டி ஏறாவூர் YSSC கழகத்திற்கும் ஏறாவூர் FC கழகத்திற்குமிடையில் இடம்பெற்றது. கடுமையான போட்டிகளின் முடிவில், ஏறாவூர் YSSC அணி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.


இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான எம்.ஜ.எம். ஜவாஹிர், என்.எம்.எம். சாஹிர், எம்.ஜ. அஜ்வத் மௌலவி, காத்தான்குடி கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் என்.கே.எம். அரபாத், செயலாளர் பொறியியலாளர் எம்.எம்.ஏ. சப்ரி, பொருளாளர் எம்.ஜ.எம். பைசர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பெருந்திரளான கால்பந்தாட்ட ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

-ஊடகப்பிரிவு-






KFL-7A- SIDE TROPHY - 2026 உதைப்பந்தாட்ட இறுதிநாள் நிகழ்வு; பிரதம அதிதியாக ஹிஸ்புல்லாஹ் Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 29, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.