Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விஜயம்


காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு நேற்று, புதன்கிழமை (19/08/2026) விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு வைத்தியசாலையின் நிலை, குறைபாடுகள், அவசரத் தேவைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை நேரில் பார்வையிட்டார்.


வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகளையும் பார்வையிட்ட அவர், பராமரிப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளைப் பாராட்டினார். இந்நிகழ்வானது வைத்திய அத்தியட்சகர் டொக்டர் MSM. ஜாபீர் அவர்களின் தலைமையில், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இதன்போது, ஆளணிப் பற்றாக்குறை, காணிப் பிரச்சினை மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


காணிப் பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காணவும், ஆளணிப் பற்றாக்குறையை அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு சென்று நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.


மேலும், மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரி என்ற வகையில், அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்திக்கு தேவையான உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்தார்.




அத்துடன், அபிவிருத்திக் குழுவின் இரு உறுப்பினர்கள் மாதாந்தம் நடைபெறும் காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்வதுடன், வைத்தியசாலையின் ஏனைய தேவைகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விஜயம் Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 20, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.