Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவிக்கு காத்தான்குடி மீடியா போரம் கௌரவம்!


(எம்.ஐ.அப்துல் நஸார்)

நடைபெற்று முடிந்த க.பொ.த (சாதாரண தரப்) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுச் சித்தியடைந்து ஊருக்கும் அமைப்பிற்கும் பெருமை சேர்த்துள்ள மாணவி முகம்மது றியாஸ் பாத்திமா றிஸ்லா அவர்களை வாழ்த்திப் பாராட்டும் கௌரவிப்பு நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை (19) இரவு 8.30 மணியளவில் உறுப்பினர் ஏ.ரீ.எம்.றியாஸ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.


காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்களின் பிள்ளைகள் கல்வி ரீதியாக சிறந்த அடைவுகளைப் பெறுகின்றபோது அவர்களை வாழ்த்திப் பாராட்டி கௌரவிப்பதை தொடர்ச்சியாக போரம் செய்து வருகின்றது, அந்த வகையில் போரத்தின் உறுப்பினரான ஏ.ரீ.எம்.றியாஸ் அவர்களின் புதல்வியான இம்மாணவியின் கல்விச் சாதனையைப் பாராட்டி, அவரை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மீடியா போரத்தின் உறுப்பினர்கள் பலரும் நேரில் கலந்துகொண்டு மாணவிக்கு தமது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டதுடன் நினைவுச் சின்னத்தையும் வழங்கி கௌரவித்தனர்.















க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவிக்கு காத்தான்குடி மீடியா போரம் கௌரவம்! Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 20, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.