Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

வெனிசுலா நிலநடுக்கத்தில் குடும்பத்தையே இழந்த கால்பந்து வீரர்

வெனிசுலா: வெனிசுலா நிலநடுக்கத்தில் கால்பந்து வீரர் ஒருவர் தனது குடும்பத்தையே இழந்துள்ளார்.

ஜூன் 24 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டபோது வேறொரு நகரத்தில் லூகாஸ் விளையாடிக் கொண்டிருந்தார். அவரது குடும்பம் தங்கி இருந்த அடுக்குமாடி கட்டடம் நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்துள்ளது. 74 மணி நேர தேடலுக்குப் பிறகு மூவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.


தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் கடந்த 24-ந்தேதி மாலை, ரிக்டர் 7.2 மற்றும் ரிக்டர் 7.5 என்ற அளவில் அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து பயங்கர சேதம் ஏற்பட்டது.

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 1,430 ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்கத்தால் சுமார் 774 கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதில் சுமார் 67.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமலும் போயுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
வெனிசுலா நிலநடுக்கத்தில் குடும்பத்தையே இழந்த கால்பந்து வீரர் Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 29, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.