Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடியில் ஆறு டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 4 பாடசாலை மாணவர்கள்.


டெங்கு தொற்று அடையாளம் காணப்பட்ட பகுதியாக காத்தான்குடி நகர சபை மற்றும் MOH அமைத்துள்ள பகுதிகள் இனம் காணப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார அதிகாரி தெரிவித்தார்.


காத்தான்குடியில் கடந்த வாரம் முதல் இன்று வரை ஆறு டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 4க்கும் மேற்பட்டோர் பாடசாலை மாணவர்கள் ஒருவர் 21 வயதுக்கு மேற்றுபட்டவர் எனவும் சிரேஷ்ட  பொதுச் சுகாதார அதிகாரி ALM. ரஹ்மதுல்லா (PHI) தெரிவித்துள்ளார்.


மேலும் நோய் தாக்கம் அதிகரிக்குமாயின் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.


அரசின் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் பிரஜா சக்தி ஊடாக பல பிரிவின் கீழ் ஒவ்வொரு செயற்திட்டங்களாக  கிராம சேவகர் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு  வருகின்றன.


புதிய காத்தான்குடி 167- B கிழக்கு பிரஜா சக்தியின் தவிசாளர் அல்ஹாபிழ் MCM.மன்சூர் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு காத்தான்குடி மட்/மம/அன்வர் வித்தியாலயத்தில் அதிபர் தலைமையில் (24.06.2026 புதன்) இடம் பெற்றது.


இதன் போது டெங்கு நுளம்பின் தாக்கம், அதனால் ஏற்படும் மரணம், ஆபத்தை விளைவிக்கும் டெங்கிலிருந்து பாதுகாப்பாக இருப்பதும் , வீடு, பாடசாலை போன்ற இடங்களை நாம் எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பன போன்று விடங்களை சிரேஷ்ட பொதுச் சுகாதார  அதிகாரி ALM. ரஹ்மதுல்லா (SENIOR-PHI) தனது நீண்டகால சேவை அனுபவத்தினூடாக  சிறந்த முறையில் மாணவர்களுக்கு தெளிவூட்டினார்.


டெங்கு நுளம்பின் அடையாளங்கள்:

உடலில் கருப்பு நிறத்துடன் வெள்ளை கோடுகள் காணப்படும்.

பொதுவாக பகல் நேரத்தில் அதிகமாகக் கடிக்கும்.

சுத்தமான தேங்கிய நீரில் முட்டையிடும் தன்மை கொண்டது போன்ற மேலும் பல விடயங்களை மாணவச் செல்வங்களின் உள்ளத்தில் பதியும்படி சிறப்பாக தெளிவூட்டினார்.



இந்த நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகஸ்தர் 
AL.கலீல்டீன் (CEO) சமூக மேம்பாட்டு உத்தியோகஸ்தர்,  தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர் M.ஆரிபா உம்மா, பிரஜா சக்தி செயற்குழு உறுப்பினர்கள், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.



காத்தான்குடியில் ஆறு டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 4 பாடசாலை மாணவர்கள். Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 24, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.