Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி கல்விக் கோட்டத்தின் புதிய கோட்டக் கல்வி அதிகாரியாக மர்சூக் (SLEAS) நியமனம்


காத்தான்குடி கல்விக் கோட்டத்தின் புதிய கோட்டக் கல்வி அதிகாரியாக A.J.மர்சூக் (SLEAS) நியமனம்.

காத்தான்குடி கல்விக் கோட்டத்தின் புதிய கோட்டக் கல்வி அதிகாரியாக (Divisional Education Officer) ஏ.ஜே.மர்சூக் (SLEAS)  (03.06.2026) மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளரின்  பணிப்புரைக்கமைய உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆசிரியர், அதிபர், உதவிக் கல்விப் பணிப்பாளர் என கல்வித்துறையில் பல அனுபவமும், திறமையான நிர்வாகச் சேவையும் கொண்ட ஓட்டமாவாடி கல்வியாளர்களில் ஒருவரான ஏ.ஜே.ஏ. மர்சூக் (SLEAS) தற்போது மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் (DDE- Managment) பணியாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது இந்நியமனம் கல்வித்துறையின் வளர்ச்சிக்கும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டிற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும் A.J.மர்சூக் (SLEAS) அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும், புதிய பொறுப்பில் சிறந்த சேவையாற்ற இறைவனின் அருளையும் நல்வாழ்த்துக்களையும் ஊடகம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

(எமது செய்தியாளர்)
காத்தான்குடி கல்விக் கோட்டத்தின் புதிய கோட்டக் கல்வி அதிகாரியாக மர்சூக் (SLEAS) நியமனம் Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 04, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.