Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி முஅத்தீன்கள் சங்கத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம். புதிய தலைவராக S.M.M. ரமழான் மௌலவி தெரிவு


காத்தான்குடி முஅத்தீன்கள் சங்கத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம். புதிய தலைவராக S.M.M. ரமழான் மௌலவி தெரிவு 


காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள பள்ளிவாயல்களில் இறைப் பணியாளர்களாக சேவையாற்றி வரும் 75-க்கும் மேற்பட்ட முஅத்தீன்கள் அங்கத்தவர்களாக உள்ள காத்தான்குடி முஅத்தீன்கள் சங்கத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம், 21.06.2026 ஞாயிற்றுக்கிழமை, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – காத்தான்குடி கிளையின் காரியாலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வு, ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளையின் தலைவரும் மதிப்பிற்குரிய மார்க்க அறிஞருமான அஷ் ஷெய்க் A.M. ஹாரூன் (ரஷாதி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


நிகழ்வில், ஜம்இய்யாவின் செயலாளர் அஷ் ஷெய்க் M.I.M. ஜவாஹிர் (பலாஹி) B.A. அவர்கள், “முஅத்தீன்களின் மாண்பும் கண்ணியமும், மறுமையில் அவர்களுக்கு வழங்கப்படும் நற்பேறுகளும் அருள்களும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.


அதனைத் தொடர்ந்து, ஜம்இய்யாவின் தலைவர் அவர்கள் முஅத்தீன்களின் சமூக மற்றும் மார்க்கப் பங்களிப்புகள், அவர்களிடையே ஒற்றுமையைப் பேணுவதன் அவசியம், மற்றும் முஅத்தீன்கள் சங்கத்தின் நோக்கங்கள், எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக வழிகாட்டல் உரையாற்றினார்.


பின்னர் நடைபெற்ற நிர்வாகத் தெரிவில் பின்வரும் நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்:

நிர்வாகக் குழு – 2026/2027

தலைவர்
S.M.M. ரமழான் மௌலவி

செயலாளர்
M.M. இஸ்மாயில் (J.P.)

பொருளாளர்
மௌலவி அல்-ஹாபிழ் A.B.M. ஹிஸ்பான் (பலாஹி)

உப தலைவர்
M.B. அப்துல் கரீம்

உப செயலாளர்
I.L. யாசிர்

உறுப்பினர்கள்

Y.L. ஹபீப் லெப்பை

M.T. வஜ்ஹுத்தீன்

M.T. பஹ்ருத்தீன்

A.L. கச்சி முஹம்மது

M. ராசிக் ஷா

மௌலவி S.L. நிபாருல்லாஹ்

மௌலவி A.L. அப்துல் அஸீஸ் (பலாஹி)

A.F. யாஸிர் மௌலவி

A.L. ஜுனைத்

M.R.M. அஸ்வர் ஹாபிஸ்.
ஆகியோர் நிர்வாகக் குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டனர்.




முஅத்தீன்கள் சங்கத்தினால் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளையிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, இந்நிர்வாகத் தெரிவை ஜம்இய்யா ஒழுங்குபடுத்தி நடாத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் ஜம்இய்யத்துல் உலமாவின் நிர்வாக சபை உறுப்பினர்கள்  மற்றும் 75-க்கும் மேற்பட்ட முஅத்தீன்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


முன்னாள் நிர்வாகத்திடமிருந்து  ஆவணங்கள் மற்றும் நிதிகள் புதிய நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டன.இறுதியாக, முஅத்தீன்களின் மார்க்க மற்றும் சமூகப் பணிகளை மேலும் வலுப்படுத்துவதற்கான பல்வேறு ஆலோசனைகளும் முன்மொழிவுகளும் கலந்துரையாடப்பட்டன.

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
காத்தான்குடி கிளை
காத்தான்குடி முஅத்தீன்கள் சங்கத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம். புதிய தலைவராக S.M.M. ரமழான் மௌலவி தெரிவு Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 21, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.