இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சிய (UK பாராளுமன்ற கூட்டு நிகழ்ச்சித்திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பங்கேற்றுள்ளார்.
இலங்கைப் பாராளுமன்றத்திற்கும், ஐக்கிய இராச்சிய (UK) பாராளுமன்றத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் நடைபெற்ற உயர்மட்ட பாராளுமன்ற கூட்டு நிகழ்ச்சித்திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கந்தசாமி பிரபு அவர்கள் உத்தியோகபூர்வமாகப் பங்கேற்றுள்ளார்.
பொதுநலவாயப் பாராளுமன்ற சங்கத்தின் (CPA UK) இங்கிலாந்து கிளையும், இலங்கை பாராளுமன்றமும் கூட்டாக இணைந்து 2026 ஜூன் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் ஏற்பாடு செய்திருந்த இந்த விசேட மாநாட்டில், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சமரவீர தலைமையிலான இலங்கைப் பாராளுமன்ற தூதுக்குழுவுடன் இணைந்து கௌரவ கந்தசாமி பிரபு அவர்கள் கலந்துகொண்டார்.
பாராளுமன்ற நடைமுறைகள், நவீன ஆட்சிமுறை சார்ந்த அறிவு, மற்றும் சிறந்த நாடாளுமன்றச் செயன்முறைகளைப் பரிமாறிக்கொள்வதை நோக்கமாகக் கொண்டு வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றது.
இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சிய (UK பாராளுமன்ற கூட்டு நிகழ்ச்சித்திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பங்கேற்றுள்ளார்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 21, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 21, 2026
Rating:

கருத்துகள் இல்லை: