தயாசிரி மீது சிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது – அமைச்சர் ஆனந்தா
பாத்திமா சுமைஹா
ஜனாதிபதி நிதியிலிருந்து கள்ள ரசீதுகளைச் சமர்ப்பித்து பணம் பெற்றது தொடர்பான நிதி மோசடி குறித்து, பாராளுமன்ற உறுப்பினர்தயாசிரி ஜயசேகர மீது குற்றப் புலனாய்வுத் துறை விரிவான விசாரணை நடத்தி வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிக்கிறார்.
நேற்று (26) பாராளுமன்றத்தில், தன்னை ஒரு ஒழுக்கமான நபராகக் காட்டிக்கொள்ள முயன்று, மற்றவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் திரு. தயாசிரி ஜெயசேகரவுக்கு எதிராக நடத்தப்படும் இந்தக் குற்றவியல் விசாரணைகள் சற்றும் அரசியல் சார்ந்தவை அல்ல என்று அமைச்சர் தெரிவித்தார்.
தமக்கு எதிராக ஏன் ஒழுங்கு நடவடிக்கை விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி கேள்வி எழுப்பியதாகவும், தாம் எந்தத் தவறும் செய்யாததால் அத்தகைய விசாரணைகளை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறியதாக அமைச்சர் தெரிவித்தார்.
இருப்பினும், திரு. தயாசிரி ஜயசேகர ஜனாதிபதி நிதியிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, செலவிட்டதை விட அதிகமாகச் செலவிட்டதாகக் காட்டுவதற்காகப் போலி ரசீதுகளைத் தயாரித்துள்ளார் என்றும், இதுகுறித்த விசாரணைகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.
தங்கள் விசாரணைகள் முடிந்துவிட்டதாகச் சிலர் கருதினாலும், தற்போதைய அரசாங்கம் காவல்துறைக்கு முழு சுதந்திரத்தையும், சுதந்திரமாகச் செயல்படுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தையும் வழங்கியுள்ளதால், அனைத்து விசாரணைகளும் முறையாக நடத்தப்பட்டு வருவதாக திரு. ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.
தயாசிரி மீது சிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது – அமைச்சர் ஆனந்தா
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 27, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 27, 2026
Rating:

கருத்துகள் இல்லை: