Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தரமற்ற உப்பை விற்பனை செய்த மற்றும் விநியோகித்த சூப்பர் மார்க்கெட் மற்றும் உற்பத்தி நிறுவனத்திற்கு நீதிமன்றத்தினால் 2 இலட்சம் ரூபா அபராதம்!


தரமற்ற உப்பை விற்பனை செய்த மற்றும் விநியோகித்த சூப்பர் மார்க்கெட் மற்றும் உற்பத்தி நிறுவனத்திற்கு நீதிமன்றத்தினால் 2 இலட்சம் ரூபா அபராதம்!

 SLSI 80:2019 தரநிலைகளுக்கு இணங்காத நுகர்வோரை ஏமாற்றும் மற்றும் திசைதிருப்பும் வகையில் தரமற்ற உப்பை சந்தைக்கு வெளியிட்டமைக்காக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் தொடரப்பட்ட வழக்கில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் (இல. 05) 2026 ஜூன் 17 ஆம் திகதி இரண்டு நிறுவனங்களுக்கும் தலா 100,000 ரூபா வீதம் மொத்தம் 200,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.


கொழும்பு 02, யூனியன் பிளேஸில் அமைந்துள்ள “SPAR Sri Lanka (Pvt) Ltd” வளாகத்தில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பெறப்பட்ட மாதிரிகள் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டன. அதன் அறிக்கையின்படி “Welcome Pure Table Salt” தரமற்றது என உறுதி செய்யப்பட்டது.


இந்த உப்பை சந்தைக்கு விநியோகித்தமைக்காக “Raigama Wayamba Salterns (Pvt) Ltd” நிறுவனத்திற்கும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் 30 மற்றும் 31 ஆம் பிரிவுகளை மீறி நுகர்வோரை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டில் இரு நிறுவனங்களும் குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் காணப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.


இவ்வாறு நுகர்வோரை ஏமாற்றி தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் குறித்து அலுவலக நேரங்களில் 1977 என்ற துரித அழைப்பு இலக்கத்தின் ஊடாக உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நுகர்வோரிடம் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்துள்ளது.
தரமற்ற உப்பை விற்பனை செய்த மற்றும் விநியோகித்த சூப்பர் மார்க்கெட் மற்றும் உற்பத்தி நிறுவனத்திற்கு நீதிமன்றத்தினால் 2 இலட்சம் ரூபா அபராதம்! Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 22, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.