Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி றிப்கா றாபிக்கு தொழில் முனைவோர் விருது; பிரதேச செயலாளர் பாராட்டு.


இலங்கை வர்த்தக சபையின் இலங்கை-கனடா வணிக மன்றம்" நடாத்திய வளர்ந்து வரும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் விருது காத்தான்குடி றிப்கா றாபிக்கு கிடைத்துள்ளது.


இது தொடர்பான விருது வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள ஜே தனியார் விடுதி மண்டபத்தில் அண்மையில் இடம் பெற்றது.


இதன்போது, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவினூடாக வளர்ந்து வரும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் விருதினை காத்தான்குடி, Dreamy Home Made Organic Cosmetics & Home Needs நிறுவனத்தின் பணிப்பாளர் றிப்கா றாபி பெற்றுக் கொண்டார்.


அவரை பாராட்டும் வகையில் இன்று காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மவ்ஜூத் காரியாலயம் அழைத்து அவரை பாராட்டிய கௌரவித்தார்.


இதன் போது காத்தான்குடி பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.
காத்தான்குடி றிப்கா றாபிக்கு தொழில் முனைவோர் விருது; பிரதேச செயலாளர் பாராட்டு. Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 13, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.