மனோதிநியின் சபை அமர்வு வெற்றி; நேர்மையான அரசியலுக்கு கிடைத்த அங்கீகாரம் - திலீப் குமார்-
மட்டக்களப்பு
வெல்லாவவெளி பிரதேச சபை அமர்வுகளில் கலந்து கொள்ள மனோதினிக்கு தடை இல்லை - ஆளுநர்
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆளுகையின் கீழ் உள்ள போாரதீவுப்பற்று – வெல்லாவவெளி பிரதேச சபையில், தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் மனோதினி மனோலிங்கம் ஒரு மாத காலத்துக்கு சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட தீர்மானம் தொடர்பில் அண்மையில் அண்மையில் ஏற்பட்ட சர்ச்சைக்கு தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஊடகங்களில் பேச பொருளாக மாறிய குறித்த விடயமானது தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினரை தடை செய்து தமிழரசுக் கட்சி ஓர் அரசியல் வெற்றியைப் பெற்றிருப்பதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக செய்திகள் திரிவுபடுத்தப்பட்டு வந்தன.
ஆனால், ஒரு நேர்மையான அரசியல் கலாசாரத்தை நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் வழி காட்டல்களுக்கு அமைவாக தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற வகையில் குறித்த பிரச்சினையினை கையாண்ட பிரதேச உறுப்பினர் மனோதினி, கிழக்கு மாகாண ஆளுநரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து மனோதினியை சபை அமர்வில் கலந்து கொள்ளாமல் தடை செய்ய எந்தவொரு அதிகாரமும் சபையின் தவிசாளருக்கு கிடையாது என்ற அறிவுறுத்தல்கள் சபைக்கு வழங்கப்பட்டிருந்தன.
மேலும், சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானம் வலிதற்றது என்கிற செய்தியும் சபைக்கு உரிய முறையில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சபையின் செயலாளர் பிரதேச சபை உறுப்பினர் மனோதினியை மீண்டும் 15வது சபை அமர்வுக்கு சமூகமளிக்குமாறு கடிதம் மூலம் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் போாரதீவுப்பற்று பிரதேச சபையின் 15 ஆவது அமர்வில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் மனோதினி எவ்வித தடையுமின்றி கலந்து கொண்டார்.
தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினரான மனோதினி மனோலிங்கத்திற்கு ஏற்படுத்தப்பட்ட இத் தடைக்கு நியாயமான முறையில் கிடைத்துள்ள இச் சாதகமான முடிவானது இந்த நாட்டில் மக்கள் எதிர் பார்க்கின்ற நேர்மையான அரசியல் கலாசாரத்திற்கு கிடைத்துள்ள வெற்றியாகும் என கைத்தொழில் முயற்சிவிறாண்மை அமைச்சின் ஒருங்கிணைப்பாளரும், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினருமான திலீப் குமார் தெரிவித்துள்ளார்.
அஹமட் இர்ஷாட்
மனோதிநியின் சபை அமர்வு வெற்றி; நேர்மையான அரசியலுக்கு கிடைத்த அங்கீகாரம் - திலீப் குமார்-
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 27, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 27, 2026
Rating:



கருத்துகள் இல்லை: