Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மெத்தைப் பள்ளிவாயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் சம்மேளனத்தின் அடுத்த தலைவராக வரும் போது பல வருடங்களாக கோமா நிலையிலுள்ள சம்மேளனத்தின் உப குழுக்ககளை சீர் செய்வீர்கள் என்று நம்புகின்றேன்.


மெத்தைப் பள்ளிவாயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் சம்மேளனத்தின் அடுத்த தலைவராக வரும் போது பல வருடங்களாக கோமா நிலையிலுள்ள சம்மேளனத்தின் 
உப குழுக்ககளை சீர் செய்வீர்கள் என்று நம்புகின்றேன்.


அன்புக்குரிய நண்பர் றவூப் ஏ. மஜீத் அவர்கள் மெத்தைப் பள்ளிவாயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.



மேலும் மேற்படி தெரிவின் காரணமாக தாங்கள் எதிர்காலத்தில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மளேனத்தின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட உள்ளீர்கள்.

 நண்பர் அவர்களே!

உங்கள் பொறுப்பு மிகவும் பாரியது நாளை மறுமையில் உங்களுக்கு அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடும் உள்ளது..

தற்போது ஊரின் மிக முக்கிய பள்ளிவாயலில் தலைவராகவும் முக்கிய தலைமைத்துவ நிறுவனத்தின் தலைவராகவும் தாங்கள் செயற்பட உள்ளீர்கள்.

மேலும் ஊரில் பல்வேறு அனாச்சாரங்களும் சீர்கேடுகளும் அதிகரித்துள்ளதும் திருமண பிணக்குகள் நிறைந்துள்ளதும் தாங்கள் அறிவீர்கள்.

ஊரின் இளைய சமுதாயத்தின் ஒழுக்கம் மிக சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது.

கடந்த காலங்களில் சம்மேளனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பாரிய விமர்சனங்களும் குறைபாடுகளும் பலராலும் முன் வைக்கப்பட்டன.

அத்துடன் வருடாந்தம் கலைக்கப்பட வேண்டிய உப குழுக்கள் கலைக்கப்படாமல் பலர் அக்குழக்களில் வேர் பிடித்து இருக்கிறார்கள்.

வயதை கடந்தும் முப்படைந்தும் விடாப்பிடியாக அக்குழுக்களில் நான் தான் ராஜா என்று இருக்கின்றார்கள்.

அதேவேளை  முக்கிய உப குழுக்கள் கோமா நிலையை அடைந்து பல வருடங்கள் ஆகின்றன.

இவற்றை எல்லாம் நீங்கள் உங்கள் தலைமைத்துவத்தின் கீழ் சீர் செய்வீர்கள் என்று நம்புகின்றேன்.

கடந்த கால மெத்தை பள்ளிவாயலில் தங்களது தலைமைத்துவம் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும் 

உங்கள் காலத்தில் பள்ளிவாயல் மையவாடி மற்றும் பள்ளிவாயல் பூங்கா சிறப்பாக பராமரிக்கப்பட்டது பாராட்டுக்குரியது.

இருந்த போதும் தற்போது உங்களோடு கடந்த நிர்வாகத்தில் பணியாற்றிய இருவர் தற்போதைய புதிய நிர்வாகத்திலும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

அவர்களை கடந்த கிழமை சந்திக்க கிடைத்தது அப்போது அவர்கள் ஒரு விமர்சனத்தை முன் வைத்தார்கள் அதாவது " உங்களுக்கு இன்றைக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தால் மூன்று நாட்களின் பின்பே மிஸ் கோளை பார்த்து பதில் அளிப்பீர்கள்" என்று சொன்னார்கள். இதனையும் உங்கள் கவனத்திற்கு தருகின்றேன்.

மீண்டும் உங்களுக்கு வாழ்த்து தெரிவித்து விடை பெறுகின்றேன்.

 அன்புடன்
 யு.எல்.எம்.என்.முபீன்
மெத்தைப் பள்ளிவாயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் சம்மேளனத்தின் அடுத்த தலைவராக வரும் போது பல வருடங்களாக கோமா நிலையிலுள்ள சம்மேளனத்தின் உப குழுக்ககளை சீர் செய்வீர்கள் என்று நம்புகின்றேன். Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 01, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.