கைதான நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா விளக்கமறியலில்
கைதான நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா விளக்கமறியலில்
தமது தனிப்பட்ட பாதுகாப்புத் துப்பாக்கியைக் காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி இராமநாதன் அர்ச்சுனா, எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (27) இளவாலைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் உள்ள காணி தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது, அவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, குறித்த சம்பவத்தின் போது தனது காணிக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
අත්අඩංගුවට ගත් පාර්ලිමේන්තු මන්ත්රී රාමනාදන් අර්චුනා රක්ෂිත බන්ධනාගාරයට
තම පෞද්ගලික ආරක්ෂක ගිනි අවිය පෙන්වා කාන්තාවකට තර්ජනය කිරීමේ සිද්ධිය සම්බන්ධයෙන් අත්අඩංගුවට ගත් පාර්ලිමේන්තු මන්ත්රී වෛද්ය රාමනාදන් අර්චුනා එළඹෙන 29 වැනිදා දක්වා රක්ෂිත බන්ධනාගාර ගත කර ඇත. අද (27) ඉලවාලෙයි පොලිසිය විසින් අත්අඩංගුවට ගත් ඔහුව මල්ලාකම් මහේස්ත්රාත් අධිකරණයට ඉදිරිපත් කිරීමෙන් අනතුරුව මෙම නියෝගය නිකුත් කෙරිණි.
පෙරියවිලාන් ප්රදේශයේ ඉඩම් ආරවුලක් අතරතුර මන්ත්රීවරයා ගිනි අවියක් පෙන්වා තර්ජනය කරන අයුරු දැක්වෙන වීඩියෝවක් සමාජ මාධ්ය ඔස්සේ ප්රචාරය වීමත් සමඟ මෙම පරීක්ෂණ ආරම්භ විය. මේ අතර, අදාළ සිද්ධිය සම්බන්ධයෙන් මන්ත්රීවරයා කළ පැමිණිල්ලකට අනුව අත්අඩංගුවට ගත් කාන්තාව ද එළඹෙන 29 වැනිදා දක්වා රක්ෂිත බන්ධනාගාර ගත කර ඇති බව වාර්තා වේ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Arrested MP Ramanathan Archchuna remanded until April 29
Member of Parliament Dr. Ramanathan Archchuna, who was arrested over allegations of threatening a woman with his personal firearm, has been remanded until April 29, 2026. Following his arrest by the Ilavalai Police today (27), he was produced before the Mallakam Magistrate's Court, where the remand order was issued.
The arrest follows a heated dispute over a land plot in the Periyavillan area, where a video of the MP brandishing a handgun went viral on social media, causing significant controversy. Meanwhile, based on a counter-complaint lodged by the MP alleging criminal trespass, a woman was also arrested yesterday and has been remanded until the same date (April 29) by the court.
KR TV Network
KR TV Lankan Voice
Domestic News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 27, 2026
Rating:

கருத்துகள் இல்லை: