கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு: ஜெயிலர் உட்பட இரு அதிகாரிகள் கைது
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு: ஜெயிலர் உட்பட இரு அதிகாரிகள் கைது
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக, ஒரு ஜெயிலர் மற்றும் ஒரு பெண் சிறைக்காவலர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 38 வயதுடைய கைதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று காலை இரண்டு கைதிகள் சிறை அறைகளை விட்டு வெளியேறி தப்பியோட முயன்றபோது, அதனைத் தடுக்க முயன்ற சிறைக் காவலர்களுக்கும் கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் காயமடைந்த இரண்டு கைதிகளும் ஒரு சிறை அதிகாரியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், பொரளை பொலிஸாரும் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்தித் தொகுப்பு: பர்ஹானா பதுறுதீன்
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
මැගසින් බන්ධනාගාරයේ රැඳවියෙකු මියයෑමේ සිද්ධිය: ජේලර්වරයෙකු ඇතුළු නිලධාරීන් දෙදෙනෙකු අත්අඩංගුවට
කොළඹ මැගසින් බන්ධනාගාරයේ ඇති වූ ගැටුමකින් රැඳවියෙකු මියයෑමේ සිද්ධිය සම්බන්ධයෙන් ජේලර්වරයෙකු සහ කාන්තා බන්ධනාගාර නියාමකවරියක පොලිසිය විසින් අත්අඩංගුවට ගෙන තිබේ. මත්ද්රව්ය චෝදනා මත රක්ෂිත බන්ධනාගාර ගත කර සිටි 38 හැවිරිදි රැඳවියෙකු මෙලෙස මියගොස් ඇත. ඊයේ පෙරවරුවේ රැඳවියන් දෙදෙනෙකු බන්ධනාගාර සිර මැදිරිවලින් පලායාමට උත්සාහ කළ අවස්ථාවේදී එය වැළැක්වීමට ගිය බන්ධනාගාර නිලධාරීන් සහ රැඳවියන් අතර මෙම ගැටුම හටගෙන ඇති බව වාර්තා වේ.
ගැටුමෙන් තුවාල ලැබූ රැඳවියන් දෙදෙනෙකු සහ බන්ධනාගාර නිලධාරියෙකු රෝහල් ගත කිරීමෙන් අනතුරුව එක් රැඳවියෙකු මියගොස් තිබේ. සහකාර බන්ධනාගාර අධිකාරීවරයෙකුගේ ප්රධානත්වයෙන් මේ පිළිබඳව විශේෂ විමර්ශනයක් ආරම්භ කර ඇති බව බන්ධනාගාර මාධ්ය ප්රකාශක ඒ.සී. ගජනායක මහතා පැවසීය. බොරැල්ල පොලිසිය ද සිද්ධිය සම්බන්ධයෙන් වැඩිදුර පරීක්ෂණ පවත්වයි.
වාර්තාකරණය: ෆර්හානා බදුර්දීන්
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Death of Inmate at Magazine Prison: Jailer and Female Guard arrested; Special Investigation underway
A jailer and a female prison guard have been arrested following the death of an inmate during a clash at the Colombo Magazine Prison. The deceased, a 38-year-old inmate, was being held in remand on drug-related charges. The incident occurred yesterday morning when two inmates reportedly attempted to escape their cells, leading to a violent confrontation with the prison staff.
Two inmates and a prison officer were hospitalized following the clash, where one inmate later succumbed to his injuries. Prison Department spokesperson A.C. Gajanayake stated that a special investigation, led by an Assistant Superintendent of Prisons, has been launched. Additionally, the Borella Police have initiated their own inquiries into the incident to determine the exact circumstances surrounding the fatal conflict.
Reported by: Farhana Badurdeen
KR TV Network
KR TV Lankan Voice
Domestic News
28/04/2026 #பர்ஹானா_பதுறுதீன்
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 28, 2026
Rating:

கருத்துகள் இல்லை: