Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி மத்திய கல்லூரியின் முன்பக்க வளாகம் மற்றும் சுற்றுமதில் தொடர்பான ஊடக அறிக்கை


காத்தான்குடி மத்திய கல்லூரியின் முன்பக்க வளாகம் மற்றும் சுற்றுமதில் தொடர்பாக எழுந்துள்ள விடயங்கள் குறித்து, பாடசாலை சமூகத்திற்கும், காத்தான்குடி நகர சபைக்கும் இடையிலான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (26.5.2026) காத்தான்குடி நகர சபையில் நடைபெற்றது.



நகர முதல்வர் அல் ஹாஜ் எஸ்.எச்.எம். அஸ்பர் (JP) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், பின்வரும் தரப்பினர் பங்கேற்றனர்:


1. காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள்


2. காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள்.

3. காத்தான்குடி நகர சபை செயலாளர் மற்றும் கெளரவ உறுப்பினர்கள்.

4. காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபர் மற்றும் முகாமைத்துவ குழு உறுப்பினர்கள்.

5. காத்தான்குடி மத்திய கல்லூரி  அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள்.

 

6. காத்தான்குடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள்.



இதன்போது, தொடர்பாடல் இடைவெளியே பிரச்சினைகள் பெரிதாவதற்கு காரணம் என்பது சகல தரப்பினராலும் உணரப்பட்டதுடன், குறிப்பிட்ட விடயம் தொடர்பாக எதிர்காலத்தில் சுமுகமாக பேசுவதென்று முடிவு செய்யப்பட்டது.


நன்றி

காத்தான்குடி நகர சபை, 

காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை.

காத்தான்குடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம்

காத்தான்குடி மத்திய கல்லூரியின் முன்பக்க வளாகம் மற்றும் சுற்றுமதில் தொடர்பான ஊடக அறிக்கை Reviewed by www.lankanvoice.lk on மே 27, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.