காத்தான்குடி கடற்கரைக்குச் செல்லும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
காத்தான்குடி ஏ.எல்.எஸ் மாவத்தை ஊடக கடற்கரைக்கு செல்பவர்கள் (சவுக்குமரத்தை அண்மித்துள்ள சிறிய பாலம் நிர்மாணப்பணிகள் காரணமாக) அப்பகுதிக்கான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
காத்தான்குடி கடற்கரைக்குச் செல்வதற்காக பிரதானமாக மூன்று பாதைகள் உள்ளன:
1.டெலிகொம் வீதி (Telecom Road)
2.கடற்கரை வீதி (Beach Road)
3.டீன் வீதி (Dean Road).
குறிப்பாக டீன் வீதியால் கடற்கரைக்குச் செல்பவர்கள் தற்காலிகமாக சவுக்குமர பகுதிக்கு மாத்திரமே செல்ல முடியும் என்பதனை கவனத்தில் கொள்ளவும்.
மேற்படி பாதை ஊடாக நேராக அன்வர் கடற்கரை, ஏத்துக்கால் போன்ற கடற்கரை பகுதிகளுக்கு செல்ல முடியாது என்பதனை
அறியத்தருகின்றோம்.
காத்தான்குடி நகரசபை எல்லைக்குட்பட்ட கடற்கரைக்கு வருகை தரும் பொதுமக்களினதும் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகளின் சிரமங்களை கவனத்தில் கொண்டு இவ்வறிவித்தலை அறியத்தருகின்றோம்.
குறிப்பாக நாளை (28) பெருநாள் தொழுகைக்காக இப்பாதை ஊடாக கடற்கரைக்கு வாகனங்களில் வருபவர்கள் கவனத்தில் கொள்ளவும்.
-Journalist-
(AL.Deen fairoos)
காத்தான்குடி கடற்கரைக்குச் செல்லும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
Reviewed by www.lankanvoice.lk
on
மே 27, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மே 27, 2026
Rating:




கருத்துகள் இல்லை: